(Reading time: 11 - 22 minutes)

 

ல்லாம் கேள்வி பட்டு ஓடி வந்தார் தையல் ஆசிரியர் காஞ்சனா. குழந்தைகளை தான் கவனித்து கொள்வதாக உறுதி அளித்து நல்ல முறையில் கவனித்து கொண்டார். ஊடகங்களும் இரண்டு நாட்கள் செய்தியை அறிவித்து விட்டு புதிய செய்திக்கு மாறிவிட்டன. உரிய சிகிச்சை முடிந்து மூன்று மாதம் கழித்து வந்த பாரதியை யாரும் வேலைக்கு ஏற்று கொள்ள முன்வர வில்லை. "ஏண்டி அம்மா உன் முகத்த பாக்க முடியலே புள்ளைங்க எல்லாம் உன்ன பூச்சாண்டி ஆன்டி சொல்லி பயபட்ரா நீ இனிமே வரவேண்டா என்று சொல்லி அனுப்பி வைத்தார்". போன இடம் எல்லாம் இதே பதில் வரவே ஒடிந்து போனாள் பாரதி.

அப்போது அங்கே வந்த காஞ்சனா அம்மா " இப்போ என்னசுனு அலற ஒன்னும் இல்ல விடு அவங்க வேல தரல ந என்ன, எனக்கு வர்ற வேலை ல உனக்கும் தர நீ வீட்ல இருந்து செஞ்சு குடு, பிள்ளைகள் படிக்கட்டும் நீ விட்ட படிப்பை தொடரு, எல்லாம் முடிந்தது என்று நினைத்தால் வாழ்கையில் ஒரு பயனும் இல்லை. உன் வாழ்க்கை பிறர்க்கு பாடமாய் அமையட்டும். பெண் என்பதால் அவளால் எதுவும் செய்ய முடியாது என்று தானே எல்லாரும் நினைகிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தன் தாழ்வினை கூட வெற்றியின் ஏணியாய் மாற்ற முடியும் என்பதை எடுத்துகாட்டு, நீ வாழ பிறந்தவள் வாழ்ந்து காட்டு "என்று அவள் மனதில் முதல் முறையாய் உறுதி எனும் விதையை காஞ்சனா விதைத்தார்.

ஞ்சலியும் அஷ்வினும் பள்ளி செல்ல. வீட்டில் இருந்த படியே காஞ்சனா கொடுத்த உடைகளை தைத்து கொடுத்து, கூடை செய்து, உடைகளில் டிசைன் செய்து கொடுத்து, அப்பளம் செய்து விற்று சம்பாதித்து தானும் தான் விட்ட படிப்பை தொடர்ந்தாள். நாட்கள் உருண்டோடின.பாரதி படித்து பட்டம் பெற்று மாற்று திறனாளிகளுகான அரசு வேலையில் பணியும் கிடைக்க மகிழ்ச்சியுடன் அலுவலகம் சென்ற பாரதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. " சீ சீ இவ ளா வேலைக்கு வரல நு யாரு அழுதா" அவமானம், வெறுப்பு, வேதனை, உதாசீனம், ஏளனம், தனிமை என அவளை துன்புறுத்த வேலையே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டாள் பாரதி.

மறுபடியும் அவளை தேற்ற காஞ்சனா ஓடோடி வந்தார். அனால் இம்முறை பிள்ளைகள் முந்தி கொண்டனர். " வேண்டாம் அம்மா, நீங்கள் அழுதது போதும். நீங்க எங்கயும் போக வேண்டா. இந்த தையல் கலை தான் எங்களை காப்பற்றியது. இன்னும் மூன்று வருடங்கள்அதுவே நம்மை காப்பாற்றும். காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது. முன்பு உங்கள் இடத்தில் எதுவும் இல்லை எங்களைத்தவிர அனால் இன்று எங்களோடு சேர்த்து உங்களுக்கு நல்ல கல்வியும் உடன் உள்ளது. அது இன்று இல்லையெனும் என்றாவது உங்களை பெருமை சேர்க்கும். கவலை விடுங்கள். நாங்கள் இருக்கிறோம் என்ற பிள்ளைகளை கட்டியணைத்து முத்தமிட்டாள்" அனைத்தையும் பார்த்த காஞ்சனா பிள்ளைகள் சொன்னதே சரியான வழி என சொல்லி மீண்டும் தையல் தொழில் தொடங்க உதவினார்.

ஞ்சலியும் அஷ்வினும் படிப்பில் கவனம் செலுத்த, பாரதி வீட்டில் இருந்த படியே தையல் தொழிலையும் அஞ்சல் வழியில் முதுகலையில் மருத்துவர் பட்டமும் பெற்றார்.அஞ்சலி திருச்சி இல் மாவட்ட கலெக்டர் ஆக பணியில் அமர, அஷ்வின் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிய. மருத்துவர் பட்டம் பெற்ற பாரதி இப்பொழுது கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு கவுன்செல்லிங் கொடுக்கிறார். குடியில் இருந்து மீள ஆண்களுக்கு மருத்துவ முகாம் மாதம் ஒரு ஊரில் இவர் தலைமையில் ஆனா டிரஸ்ட் இன் மூலம் நடைபெறுகிறது.

இதை எல்லாம் சமூக சேவை போல் செய்து வரும் பாரதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதை அன்போடு ஏற்று கொண்ட பாரதி, தன் இருபெரும் தூண்கள் ஆன தன் பிள்ளைகள் அஞ்சலி அஷ்வின் மற்றும் தன்னை தேற்றி அன்போடு இந்த நிலைமைக்கு கொண்டு வந்த காஞ்சனா அம்மாவையும் அழைத்து வந்திருந்தார். பரிசை பெற்று கொண்ட பாரதி, " எனக்கு மேடையில் பேசி பழக்கம் இல்லை, நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்று சொல்ல, ஒவோருவராய் கேள்வி கேற்க ஆரம்பித்தனர்."

உங்கள் போன்ற பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

அதற்கு பாரதி மன்னிக்கவும், இதில் உங்கள் போன்ற என்ற வாக்கியம் தவறானது. நானும் எல்லோர் போல ஒரு பெண் தான். அழகு என்பது நம் வாழ்கையை தீர்மானிக்க போவது இல்லை. அனால் என்னை அபசகுணமாக கருதி என்னை ஏளனம் செய்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்பிகிறேன். அவர்கள் அப்படி என்னை நடத்தி இரா விட்டால் நான் இன்று உங்கள் முன்னால் இப்படி நின்று பதில் கூற முடியாது. அவர்கள் என்னை ஏளனம் செய்தார்கள் அதை காஞ்சனா அம்மா வெற்றி காண ஏணி என சொல்லி கொடுத்தார். அதில் ஏறி பயணம் செய்தேன் இதோ இங்கே வந்து விட்டேன்.

உங்கள் கணவர் மீது உங்களுக்கு கோபம் உண்டா?

இல்லை. நிஜமாகவே இல்லை. வருத்தம் தான் உள்ளது. எந்த அழகை கண்டு அவர் என்னை நேசித்தாரோ அது நாளடைவில் அவர் வெறுக்க காரணமாய் மாறி விட்டது. இப்போது அவர் மனம் திருப்தி அடைந்திருக்கும் என்றால் இன் நிலையம் எனக்கு மகிழ்ச்சியே. சிறை வாசம் அவர் மனதை பக்குவ படுத்தும் என்று நம்புகிறேன்.

நான் யாரும் இல்லையே என்று நினைத்த போது காஞ்சனா அம்மாவும், என் பிள்ளைகளும் எனக்கு துணை நின்றனர். அது போல் நானும் இந்த நாட்டில் யாரும் இல்லையே என்று நினைக்கும் பெண்களுக்கு துணை நிற்க ஆசை படுகிறேன். உங்கள் அனைவரின் உதவியோடு அது நடக்கும் என்று நம்புகிறேன். அனைவர்க்கும் நன்றி வணக்கம் என்று கூறி மேடை இல் இருந்து கீழ் இறங்கி நடந்து சென்ற பாரதி க்கு அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது .

தூரத்தில் எங்கோ " அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்ற பாடல் ஒலிக்க பாரதி கண்ட புதுமை பெண்ணாய் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் நடந்தாள் நம் நாயகி பாரதி.....     

This is entry #08 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.