(Reading time: 8 - 15 minutes)

 

பொழுது விடிந்தது வழக்கம்போல் தேவி காலேஜிற்கு புறப்பட ஆரம்பித்து விட்டாள்......

நிஷா அவ எங்க போறான்னு கேளு

இது என்னமா கேள்வி தேவி காலேஜ்க்குதா கெளம்பிட்டு இருக்கறா ......

அவ படிச்சு மார்க் வந்குனதுலா போதும் நா காலைல 6 மணிக்கே எழுந்து பக்கத்துக்கு வீட்டு பத்மா கட்டசொல்லி பஞ்சு மில்ல தேவிக்கு வேலை ஏற்பாடு பண்ணித்தர சொல்லிருக்கே ஒழுங்கா அவள அங்க போக சொல்லு...

கண்ணில் நீர் பெருக செண்பகத்தின் அருகில் வந்தாள் தேவி ..

அம்மா என்ன மன்னிச்சுடுங்க இந்த ஒரு டைம் மட்டும் விட்ருங்க அடுத்த டைம் நா கண்டிப்பா நல்ல மார்க் வாங்கிடுவேன்மா.... நம்புங்கம்மா ......

உன்ன நம்புனதுல போதும் ..... இனியும் உன்ன நம்ப நா தயாரா இல்ல .......

அம்மா பாவம் தேவி இந்த ஒரு டைம் மன்னிச்சுடுங்க ...

என்னால மன்னிக்கலா முடியாது என் முடிவு இதுதான் .......

அம்மாவின் கட்டளையை மீறி நிஷவால் ஒன்றும் செய்ய முடியவில்லை . தேவியும் பஞ்சுமில்லிற்கே வேலைக்கு செல்ல புறப்பட்டுவிட்டாள். .......

 வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் முடிந்தது இப்போது தேவிக்கு வேலையின் கடினமும் காசின் அருமையும் தெரிந்தது . முன்பு போல் இல்லாமல் தேவின் பழக்கம் முற்றிலும் மாறியது ....ஒரு வாரமாக தேவி காலேஜ் வராததை அறிந்த அவளுடைய சார் செண்பகத்திற்கு கால் பண்ணினார் .

வணக்கம் அம்மா நா தேவின் காலேஜ் சார் பேசறேன் உங்க பொண்ணு ஒரு வாரமா காலேஜ் வரல என்னாச்சுமா தேவிக்கு ...

இல்ல சார் என் பொண்ணு இப்ப வெச்ச பரீட்சைல2 பேப்பர்ல் போய்டுச்சு அதனால அவளானா வேலைக்கு அனுப்பிடேங்க சார்

என்னமா சொல்றேங்க தேவி ரொம்ப நல்ல பொண்ணு ஏதோ வெளையாட்டு தனத்தால இப்படி ஆய்ருச்சு அடுத்த டைம் கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவாங்கமா உங்களுக்கு தெரியாது ஒண்ணும்ல படிப்புதா இந்த காலத்துல எல்லாமேந சொல்ல வேண்டியது சொல்லிட்டே இனி உங்க இஷ்டம் நா வேக்கரங்கம்மா .......

றுநாள் வழக்கம்போல் தேவி பஞ்சுமில் வேலைக்கு புறப்பட்டால் செண்பகம் தேவிடம் ....

தேவி எங்க போற

அம்மா பஞ்சுமில்குதான்

அங்கலா ஒன்னும் போக வேண்டாம் . நீ காலேஜ்க்கு போ ....

என்னமா சொல்றீங்க

ஆமா தேவி எந்த தாயும் தன் மகள் நல்லா இருக்கனும்னு தா நெனைப்பா நானும் அப்டித்தான் .... வேலைக்கு போகும்போதுதான் படிப்போட அருமை தெரியும் .இப்போ உனக்கு படிபோட அருமையும் உழைப்போட அருமையும் புரிஞ்சுருக்கும் ...இனி நீ படிச்சு பெரியாள் ஆவங்கற நம்பிக்கை எனக்கு வந்துருச்சு .... அதலான இப்போ காலேஜ்க்கு கெளம்பு போ

செண்பகத்தின் வார்த்தைகளை கேட்டு தேவி ஓடி வந்து இறுக்கி கட்டி பிடித்து அழ துடங்கிவிட்டால் ....... நிஷா அம்மாவின் அன்பு உள்ளத்தை கண்டு கண்ணில் நீர் பெருக சிரித்தபடி வேலைக்கு புறப்பட்டாள்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.