(Reading time: 11 - 22 minutes)

 

"கொஞ்ச நேரம் என்ன ஆச்சுன்னே தெரியல லதா, ஆனா அந்த சேகர் என்ன பிடிச்சு உலுக்கி எழுப்பும் போது பார்த்தேன் லதா அந்த வெறி பிடிச்ச நாயி ரத்த வெள்ளத்துல செத்து கிடந்தான்"

கோபத்தில் சொல்லி கொண்டே போன தன் தோழியை இறுக்கி அணைத்து கொண்டாள் லதா.

"உன்னை  நினைச்ச ரொம்ப ரொம்ப பெருமையா இருக்குடி"

"ம்ம்ம் அந்த ஐ.பி.எஸ் கூட ரொம்ப நல்லவர், அவரு மேலிடத்துல பேசி எங்க ரெண்டு பேருக்கும் விருது வாங்கி தரேன்னு சொன்னாரு டி, அதுவும் இல்லாம நான் என்.சி.சி ல பல வருஷங்கள் இருந்ததால, நான் ஆசை பட்ட போலீஸ் ஆகா எல்லா வகையிலும் உதவி பண்றத சொன்னாரு"

"ரொம்ப சந்தோஷம் டா" என ஆற தழுவிய தோழியை தானும் அணைத்து கொண்டாள் எழில்!!  

"பேபிமா எனக்கு விருது தர போறாங்களாம், உன்னையும் நம்ம மிது குட்டியும் காப்பாத்த முடியாத எனக்கு எதுக்கு அதெல்லாம்" வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு நிமிர்ந்த போது தன்னோடு பேசி கொண்டிருந்த மனைவியின் உருவமும் தன் மடியில் அமர்ந்திருந்த மகனின் உருவம் காற்றில் கரைந்தது.

"ன்ன சத்யா இது"

"ம்ம்ம் அவ்வளவு துணிச்சலான பொண்ணு மகி, அதும் அந்த சேகர் ஒரு கால் இல்லாம பிளாஸ்டிக் கால வெச்சுட்டு இவ்ளோ அருமையா பிளான் பண்ணி, அதன் அவங்க ரெண்டு பெருகும் விருது கொடுக்க கலெக்டர் கிட்ட ரெகமண்ட் பண்ணிருக்கேன்"

"ம்ம்ம் எழில் விஷயம் சேரி அவங்க அக்காவுக்காக வந்தா ஆனா இந்த சேகர்?"

"ம்ம்ம் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு லாரி கார இடிச்ச கேஸ்ல நம்ம மதி பாத்துட்டு இருந்தானே?"

'ம்ம்ம் ஆமாம் சொன்ன நியாபகம்"

"ம்ம்ம் அது அந்த பர்மா பண்ணது தான் வேற யாரோ கார இடிக்கிரதுக்கு பதில சேகரோட கார இடிச்சுட்டான் அதுல சேகரோட வைப் அண்ட் சன் ரெண்டு பெரும் இறந்துட்டாங்க, அவருக்கு ஒரு கால் போய்டுச்சு"

"ஐயோ ரொம்ப பாவம்ங்க"

"ம்ம்ம் ஆமா டா"    

டுத்தும் உடையிலும் பயிலும் போர் திறனிலும் ஊனம் இல்லாத உடல் கொண்டு நெஞ்சம் நிமிர்த்தி நடப்பதால் மட்டுமே தன்னோடு ஒட்டி கொண்டு வந்து விடாது வீரம்!!!

ஆழ்மனதில் உள்ளர்ந்தா என்னமாய் ஊறி கிடந்து அவ்வபோது சிலிர்த்து எழுவதும் மட்டும் வீரம் என சொல்லிட இயலாது!!

சரியான நேரத்தில், தன் அறிவினை கொண்டு  மிக சரியான திட்டத்தையோ முடிவையோ தேர்ந்து எடுத்து மதியால் விதியை மட்டும் அலலது தமை விட வலியவரையும் வெல்லும் திறனும், வெற்றி வாகை சூடும் திறனுமே வீரம்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.