(Reading time: 18 - 35 minutes)

 

மாலைகள், பாரட்டுக்கள், வாழ்த்துரைகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்த கைத்தட்டல்கள் என எல்லாவற்றையும் புன்னகையுடனே ஏற்றுக்கொண்டாள் அவள்.

பேசுவதற்காக அழைக்கப்பட்டாள் அவள். மைக்கின் முன்னால் சென்று நின்றாள்.

நீங்க பேசுறதுக்கு முன்னாடி எங்களுக்காக ஏதாவது ஒரு பாட்டு பாடணும் சொன்னார் அங்கே இருந்த ஒரு இயக்குனர்.

அதை எதிர்ப்பார்த்திருந்தவள் போலே பாட துவங்கினாள் அவள்.

குரலில் தேன் குழைத்துக் குயிலைப் படைத்தவர்

மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்

அறையில் பாட்டெடுப்பேன்.. அரங்கம் தேவையில்லை

சபையில் பேரெடுக்கக் குயில்கள் இசைப்பதில்லை

எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

வான மழை போலே புதுப் பாடல்கள்

கான மழை தூவும் முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது..

நெடு நாள் வாழும் இது....

அவள் பாடி முடித்ததும் கைதட்டல் அடங்க வெகு நேரமானது. தன்னை மறந்து கைதட்டினான் ஹரீஷ் பின்னர் மெல்ல பேச துவங்கினாள் ஹம்ஸத்வனி.

எனக்கு ஆச்சரியமா இருக்கு என்றாள் அவள். சுவாசிக்கறதுக்கு கூட பாராட்டு கிடைக்க முடியும் எனக்கு இன்னைக்கு தான் தெரியும்.

பலர் புரியாமல் பார்க்க புன்னகையுடன் சொன்னாள் 'இசை என்னோட சுவாசம்'

கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

கைதட்டல் கிடைக்கணும்னு நான் இதை சொல்லலை. கிட்டத்தட்ட செத்துபோயிருந்த என்னை மறுபடியும் மீட்டெடுத்தது இசைதான்.

நிறைய பேர் கேட்டாங்க நான் அடுத்தது எந்த படத்துக்கு இசை அமைக்க போறேன் அப்படின்னு. அதுக்கு பதில் நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாடின பாட்டுத்தான்.

அறையில் பாட்டெடுப்பேன்.. அரங்கம் தேவையில்லை

சபையில் பேரெடுக்கக் குயில்கள் இசைப்பதில்லை

எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

நான் குயிலா வாழ விரும்பறேன். இசை என்னோட சுவாசம். நான் எனக்காக மட்டுமே ஸ்வாசிக்க விரும்பறேன். மத்தவங்களுக்கு ஏத்தா மாதிரி நாம  சுவாசிக்க நினைச்சா அது ரொம்ப கஷ்டமில்லையா?

அரங்கத்தில் அப்படி ஒரு மௌனம்,

கொஞ்ச நாள் முன்னாடி அதுக்கும் முயற்சி பண்ணேன். மத்தவங்க முன்னாடி ஜெயிச்சு காட்டணும்னு பாடினேன். அப்போ என்னாலே இசையை என் சுவாசமா உணர முடியலை. போராடி போராடி கடைசியிலே படு தோல்வியை சந்திச்சேன். இப்போ மறுபடியும் அந்த இசையாலே எழுந்து வந்திருக்கேன்.

என் ஹனியா இப்படி பேசுகிறாள்? வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தான் ஹரீஷ்.

'நான் எந்த வட்டதுக்குள்ளேயும் சிக்காம தொடர்ந்து சுவாசிச்சுகிட்டேதான் இருப்பேன். அப்படி நான் உருவாக்குற இசைய நீங்க உங்க திரைப்படத்திலே பயன்படுத்திக்க விரும்பினால், ரசிக்க விரும்பினால் தராளமா செய்யலாம் அதுக்கு எந்த தடையும் இல்லை. என் மனசு எல்லாருக்கும் புரியும்னு நம்பறேன். உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி'. கையெடுத்து வணங்கி சொன்னாள் ஹம்ஸத்வனி.

அரங்கம் நிறைந்த கைதட்டல்களுடன் விழா நிறைவு பெற்றது. மேடையை விட்டு கீழே இறங்கினாள் ஹம்ஸத்வனி.

அவளை அருகே  ஓடி வந்தார் அவள் அப்பா.. அவர் அவளிடம் பேச ஆரம்பிப்பதற்குள் சட்டென இடையில் புகுந்தார் அவளுடைய அம்மா.

நீ ஹரீஷோட கிளம்புமா. நாம அப்புறம் பேசிக்கலாம்.

ஏன் நான் என் பொண்ணோட பேசக்கூடாதா? கேட்டார் அப்பா.

ஓஹோ! என்றார் அம்மா. ஜெயிச்சவுடனே தான் உங்க பொண்ணை அடையாளம் தெரியுதா உங்களுக்கு?. பசங்க ஜெயிச்சாலும், தோத்தாலும், அவங்க கிட்டே எந்த குறை இருந்தாலும் அவங்க என் பசங்கன்னு நினைக்கறவங்க தான் பெத்தவங்க. உங்களுக்கு அவ அப்பான்னு சொல்லிக்கிற தகுதி இல்லை.

அம்மா... விடும்மா.. குறுக்கே புகுந்த ஹம்ஸத்வனியை பார்த்து சொன்னார் அம்மா. இல்லைடா உனக்கு செஞ்ச தப்பை உங்க அப்பாவும், அக்காவும்  உணரணும். உணரும் காலம் சீக்கிரம் வரும் அதுக்கப்புறம் அவங்க உன்கிட்டே பேசட்டும். நீ இப்போ கிளம்பு.

கார் நகர்ந்து கொண்டிருக்க அவனுருகில் அமர்ந்திருந்த ஹம்ஸத்வனி ஹரீஷை பார்த்து கேட்டாள் 'நான் மேடையிலே பேசினதிலே உங்களுக்கு ஏதாவது வருத்தமா?'

வருத்தமா? உன் மேலையா? வாய்ப்பே இல்லை இசைக்குயிலே. புன்னகைத்தான் ஹரீஷ். உன்னை முழுசா புரிஞ்சுகிட்டவன்டா நான். 'ஆனா ஒரு சின்ன ஆசை மட்டும் இருக்கு' என்றான் அவன்.

என்னது...

அறையிலே மட்டும் தான் பாட்டெடுப்பியா? காருக்குள்ளே எடுக்க மாட்டியா? அவள் முகத்தை பார்த்து கேட்டவன் 'எனக்காக ஒரு பாட்டு பாடுடா' என்றான் கெஞ்சலாக.

மொத்தமாக நெகிழ்ந்து போனவளாக அவன் தோள்  சாய்ந்து பாடினாள் ஹம்ஸத்வனி

உன் மடியில் நானுறங்க

கண்ணிரெண்டும் தான் மயங்க

என்ன தவம் செய்தேனோ?

என்னவென்று சொல்வேனோ?

Manathai Thotta ragangal - 05 - Mayanginen solla thayanginen

Manathai Thotta ragangal - 07 - Vanuyarntha solaiyile

{kunena_discuss:748}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.