(Reading time: 19 - 38 minutes)

ல்லாம் மேக்கப்புடி..மேக்கப்பு..ம்ம்ம்...நாமளுந்தான் இருக்கோமே...ஆளாளுக்கு..சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள்.

பெண்கள் ஒவ்வொரு வரும் தங்களுக்குத் தோன்றியதைச் சொல்லிக்கொண்டு இருக்க செவ்வந்தி

மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தாள்.அவள் மனசு காந்தியது.திருமணம் ஆவதற்கு

முன்பு தன் தோழிகள்....யேய்..செவ்வந்தி நீ மட்டும் சினிமாவுக்கு நடிக்கப் போன..அவ்வளவு தான்..

ஒரு நடிகையும் ஒம் முன்னாடி நிக்க முடியாது..பணம் புகழ் பங்களா காருன்னு ஓஹோன்னு ஆயிடுவ..அப்பறம் எங்கலெல்லாம் நெனப்பு வருமா ஒனக்கு...அடிக்கடி சொன்னது நினைவுக்குவர

மனசு துடித்தது.ச்சே இருந்தா புனிதஸ்ரீ மாரி இருக்கணும்..எவ்வளவு மரியாத புகழ் பணம் வசதி..

நாம வாழறதும் ஒரு வாழ்க்கையா..வெறுப்பாய் வந்தது செவ்வந்திக்கு.அவ்ள் மனம் ஏதோ ஒரு

தீர்மானத்திற்கு வந்தது.வேண்டுமென்றே கூட வந்த பெண்களின் கூட்டத்திலிருந்து விலகி கேமரா-

வால் ஆங்கிள் பார்துக்கொண்டிருந்தவரின் கண்களில் படுமாறு நின்று கொண்டாள்.

கேமராவில் பார்த்துக்கொண்டிருந்தவரின் கேமரா பார்வையில் செவ்வந்தியின் அழகு முகமும்

வாளிப்பான உடலும் பட சட்டென கேமராவிலிருந்து பார்வையை அகற்றி னேருக்கு நேராக

செவ்வந்தியைப் பார்த்தார்.உய்யென்று மனதிற்குள் சீட்டி அடித்துக்கொண்டார்.மானீட்டரில் முடித்த

காட்சி சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்த டைரக்டரிடம் சென்று அவரின் காதில்

இவர் ஏதோசொல்ல சட்டெனத் திரும்பி செவ்வந்தியைப் பார்த்த டைரக்டரின் கண்களில் அப்படியொரு பிரகாசம் பளபளப்பு.

ஆப்பிள் ஜூஸை எடுத்துக்கொண்டு புனிதஸ்ரீயை நோக்கி சென்று கொண்டிருந்த உதவியாளரைக்

கூப்பிட்டார் டைரக்டர்.

சார் சொல்லுங்க சார்...

அதோ நிக்கிராங்கள்ள..அழகா ஒரு பொண்ணு...கையை அதிகம் நீட்டாமல் செவ்வந்தியைச் சுட்டிக் காட்டினார் டைரக்டர்..

ஆமாங்க சார்...

அவங்கள டைரக்டர் கூப்பிடறதா சொல்லு..வந்தா வரட்டும்..ஏதாவது பிரச்சனை ஏற்படும்ன்னு

தோனிச்சுனா பேசாம வந்திடு..

சரிங்க சார்...செவ்வந்தியை நோக்கி நடந்தார் உதவியாளர்.

செவ்வந்தியின் அருகே சென்றவர் கையிலிருந்த ஏதோ ஒரு பொருளை வேண்டுமென்றே கீழே

போட்டுவிட்டு அதைக் குனிந்து எடுத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் தன்னைக்

கவனிக்கவில்லை என உறுதிபடுத்திக்கொண்டு மிக மெல்லிய குரலில்..மேடம்..உங்கள டைரக்டர்

பாக்கணும் பேசனும்னு சொன்னாரு..ஒங்களுக்கு விருப்பமிருந்தா ஒங்கள வந்து பாக்கரதா சொன்னாரு...என்ன சொல்ரீங்க...

பயத்தில் சட்டென பின்னால் நகர்ந்தாள் செவ்வந்தி.நெஞ்சு படபடத்தது...பதில் சொல்லாமல்

கூடவந்த பெண்களோடு போய்ச் சேர்ந்து நின்றாள்.ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார் உதவியாளர்.

ஸ்டார்ட் கேமரா ஆக்சன்...டைரக்டர் கத்த..ஒடிப்பிடித்தும் கட்டி உருண்டும் பாட்டுப்பாடி காதல

காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்கள் கதா னாயகனும் கதா நாயகி புனிதஸ்ரீயும்.

ஹீரோ கையைக் காலை ஆட்டுவதில் ஏதோ தவறு செய்ய கட்..கட்..என்று டைரக்டர் சொல்ல

ஷூட்டிங் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

சேரில் போய் அமர்ந்துகொண்டாள் புனிதஸ்ரீ.மனது முழுதும் ஒரே வெறுப்பாக இருந்தது.என்ன

வாழ்க்கை இது சலிப்பாக இருந்தது.ஓயாது ஷூட்டிங் ஷூட்டிங் என்று ஊர்வூராய்ப் போவதும்

போலியாகச் சிரிப்பதும்..எப்போதும் மேக்கப்பிலேயே இருப்பதும் கண்டவனையும் கட்டிப்பிடித்து

நடிப்பதும் அரைகுரை ஆடையும் அசிங்கமாய் அங்க அசைவுகளைச் செய்து ஆடுவதும் ஹீரோ

முதல் மற்ற அனைவரிடமும் அட்ஜெஸ் செய்து கொள்ள வேண்டியிருப்பதும் ..ச்சே..ஒரே வெறுப்

பாய்யிருந்தது புனிதஸ்ரீக்கு.சராசரி பெண்களைப்போல் கணவன் குழந்தை குடும்பம் என்ற

வாழ்க்கையை விரும்பியது அவளின் நெஞ்சம்.அதுவே அவளின் ஏக்கமாகவும் இருந்தது.இந்த

பெயர் புகழ் பணம் கார் பங்களா எதுவுமே வேண்டாம்..அன்பான கணவனும் அழகான குழந்தைகளும்

படாடோபம் இல்லாத சராசரி வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்..தன் தாய் மட்டும் இருந்திருந்தால்..இப்படியொரு அவல வாழ்க்கை அமைந்திருக்குமா..பத்துவயதிலேயே தாய்

இறந்து போக பெற்றவன் இவளுக்கு சித்தி என்ற பெயரில் ஒரு பிசாசைக் கொண்டு வர..அப்போதே

பிடித்துவிட்டது புனிதாவுக்கு பீடை..சோதனை..கண்டவர்களோடும் பழக்கம் வைத்திருந்த சித்தி

வலுக்கட்டாயமாக இவளை சினிமாத் துறையில் புகுத்தியது ஒரு தனி கதை.சினிமாவுக்கு வந்த

பிறகு புனிதா புனிதஸ்ரீ ஆனாள்.

வழக்கமாய் புனிதஸ்ரீயோடு சித்தியும் எங்கு ஷூட்டிங் நடந்தாலும் வந்துவிடுவாள்..இம்முறையும்

வந்திருந்தாள்.திடீரென சித்தியின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்று போன் வரவே போக 

மனமில்லாமல் பலமுறை புனிதஸ்ரீயை பத்திரமாக இருக்கச்சொல்லி அதையும் கொஞ்சம்

எச்சரித்துச் சொல்வதுபோல் சொல்லிவிட்டுப் போனாள்.அவளின் கூடவே வரும் இரண்டு அள்ளக்

கைகளிடம் கண்குத்திப் பாம்பாக புனிதஸ்ரீயை பார்த்துக்கொள்ளும்படி ரகசியமாகச் சொல்லிவிட்டுச்

சென்றாள்.

இரவு..படக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல்.புனிதஸ்ரீ தான் தங்கியிருந்த அறையிலிருந்து

லேசாகக் கதவைத் திறந்து வெளியே  பார்த்தாள்.மணி பத்தாகியும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டி-

ருந்தது ஹோட்டல்.

எதிர் அறையில் ஐந்தாறு பர்த்தா அணிந்திருந்த பெண்கள் முஸ்லிம் பெண்களாய் இருக்க வேண்டும் பேசிக்கொண்டிருப்பதும் அவர்கள் யாரிடமோ போய் வருகிறோம் என்று கூறி விடை பெற்றுக்

கொண்டிருப்பதும் புனிதஸ்ரீயின் கவனத்திற்கு வந்தது.

சட்டென உள்ளே வந்தாள் புனிதஸ்ரீ.அவசர அவசரமாக தன்னுடைய சூட்கேஸைத் திறந்து வெகு

பத்திரமாய் அடிப்புரத்தில் மறைத்து வைத்திருந்த முஸ்லிம் பெண்கள் அணியும் கருப்பு நிற பர்தாவை எடுத்து அணிந்து கொண்டாள்.அந்த உடை உடலையும் முகத்தையும் மூடக்கூடிய

கண்கள் மட்டுமே தெரியக்கூடிய உடை என்பதால் புனிதஸ்ரீயை யாராலும் அடையாளம் கண்டு

கொள்ள முடியாது.மெதுவாகக் கதவை திறந்தாள் புனிதஸ்ரீ.அவள் கதவைத் திறப்பதற்கும் எதிர்

அறையிலிருந்து அந்த ஐந்தாறு பெண்களும் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.அவர்கள்

நான்கைந்து அடி முன்னால் போனதும் அவர்களைத் தொடர்ந்து பின்னால் போனாள் புனிதஸ்ரீ.

யாரும் அவளை சந்தேகப் படவில்லை.சித்தியின் ஆட்கள் குடித்துவிட்டு எங்கே உருண்டு கிடந்-தார்களோ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.