(Reading time: 19 - 38 minutes)

ரவு முழுதும் தூக்கம் வரவில்லை செவ்வந்திக்கு.டைரக்டர் கூப்புடறதா சொன்னாரே ஒருத்தர்.

எதுக்கு கூப்பிடிருப்பாங்க..ஒரு வேள நம்ம ஹீரோயினா நடிக்க கூபிட்டிருப்பாங்களோ..நமக்கு

சினிமா சான்சு கெடச்சிருக்குமோ...கூப்புட்டதும் போகாம இருந்தது தப்போ...போயிருந்தா..சினிமால

னடிக்க சான்சு கெடச்சிருந்தா..அம்மாடி பேரு புகழு பணம் பங்களா காரு ஆளு பட..இத்தினியும் கெடெச்சிருக்குமே..தப்பு பண்ணிட்டமோ..தவித்துப் போனாள் செவ்வந்தி.எப்படியும் நாளைக்குத்

தனியா போய் என்னென்னு பாத்துடனும்..தீர்மானத்தோடு தூங்கிப்போனாள் செவ்வந்தி.

காலை..7மணி....மேடம்.  மேடம்...புனதஸ்ரீயின் அறைக்கதவை தட்டினான் ரூம்பாய்..

உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை.கதவும் திறக்கப்படவில்லை.மீண்டும் அழைத்தபோதும் இதே

நிலை..திரும்பி மேனேஜர் இருக்குமிடம் நோக்கி நடந்தான் ரூம்பாய்.

சார்..அந்தம்மா...புனிதஸ்ரீ ரூம தட்டினேங்க சார் அவங்க பதிலும் சொல்லல..கதவயும் தொறக்கல..

மேனேஜரும் தம் பங்குக்கு முயற்சி செய்ய இம் முறையும் கதவு திறக்கப்படவில்லை.

பட டைரக்டருக்கு போன் செய்து விபரம் சொன்னார் ஹோட்டல் மேனேஜர்.

பரவாயில்ல சார்..நேத்து ரொம்ப நேரம் அவங்க ஷூட்டிங்ல கலந்து கிட்டாங்க..ரொம்ப டயர்டா

இருக்கரதாவும்..லேசா ஃபீவர் இருக்கறதாவும் சொன்னாங்க..அதுனால அவங்க டீப்பா தூங்குவாங்க..

அவங்களுக்கு மதியத்துக்கு மேலதான் ஷூட்டிங் இருக்கு..அதனால அவங்கள டிஸ்டர்ப் பண்ண

வேண்டாம்..என்று சொல்ல..அப்பாடி என்றிருந்தது மேனேஜருக்கு.

எட்டு மணிக்கெல்லாம் மாணிகம் வேலைக்குச் சென்று விட...கதவைப் பூட்டிக்கொண்டு யாரிடமும்

சொல்லாமல் தனியாகவே ஷூட்டிங் நடக்கும் இடம் நோக்கி நடந்தாள் செவ்வந்தி.அவளோடு

விதியும் நடந்தது.

ஹோட்டலை விட்டு வேளியே வந்த புனிதஸ்ரீக்கு எங்கே செல்வது என்ற இலக்கு புரியவில்லை.

இந்த இரவு நேரத்தில் எங்கே செல்வது..? யார் புகலிடம் கொடுப்பார்கள்?ஆளரவமற்ற இரவு

வேளையில் தான் மட்டும் தனியாக நடந்து சென்றால் அந்த வேளையிலும் ஏதாவதொரு காரணத்

துக்காக அங்க இங்கு போய்வருபவர்களின் கண்களில் பட்டுவிட்டால்...தவித்த படி நடந்துகொண்டி

ருந்த புனிதஸ்ரீயின் கண்களில்  மிகவும் மோசமான நிலையில் இருந்த குடிசை ஒன்று கண்ணில் பட

சட்டென உள்ளே நுழைந்து விட்டாள்.

யாரது..யாரது..உள்ளவரது...தள்ளாடியபடி ஓடி வந்தாள் ஒரு கிழவி.வயது எண்பதிருக்கலாம்.

முதுமையும் வறுமையும் அவள் உடம்பை வற்றவும் சுருங்கவும் செய்திருந்தது.

நிமிடமும் யோசிக்காது அந்த வயதான கிழவியின் கால்களில் விழுந்தாள் புனிதஸ்ரீ.பாட்டி..பாட்டி.

என்ன காப்பாத்துங்க பாட்டி..என்ன ரெண்டு பேரு தொரத்திக்கிட்டு வர்ரங்க பாட்டி..காப்பாத்துங்க

பாட்டி...கெஞ்சினாள் புனிதாஸ்ரீ.நடிக்கக் கற்றுத் தரவா வேண்டும்...

பாட்டியும் ஒரு பெண்தானே..ஒரு பெண் பாதுகாப்பு கேட்டுக் கெஞ்சும் போது அந்த பெண்ணின்

மனம் இரங்காதா என்ன ?

பாட்டி மறுப்பேதும் சொல்லாமல் கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டாள்.

புனிதஸ்ரீயிடம் என்ன ஏது என்று கேட்கக் கூடயில்லை.பாட்டிக்கு உயிர் பயமோ திருட்டு பயமோ

ஏதும் இல்லாததால் (பொருள் எதும் இருந்தால் அல்லவா திருட்டுப் போக)புனிதஸ்ரீயிடம்.. படு..

என்று ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.

இரவு முழுதும்..தவிப்பாய் இருநது புனிதஸ்ரீக்கு. காலை விடிந்ததும் தான் காணாமல் போய்விட்டது அனைவருக்கும் தெரிந்து விடும்..அதன் பிறகு அமளிதுமளி படும்..செய்தித் தாள்களும் டிவி

சேனல்களும் செய்தியை நார் நாராய்க் கிழிக்கும்... சித்தியின் அடுத்த நடவடிக்கை .எப்படியிருக்கும்

தன்னை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் எப்படித் தவித்துப் போவார்கள்..சக னடிகர்கள்

நடிகைகள் என்ன பேசுவார்கள்...பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்த முகம் நம் முகம் 

அப்படியிருக்க என்ன சொல்லி யாரிடம் அடைக்கலம் புகுவது..இனி யாருமே னம்மை ஒரு நடிகையாகத்தான் பார்ப்பார்களே தவிர சாதாரண சராசரி பெண்ணாக நினைக்க மாட்டார்கள்.எந்த

ஒரு சாதாரண சராசரி ஆணும் னம்மை திருமணம் செய்து கொள்ளவோ மனைவியாக ஏற்றுக்கோள்ளவோ மாட்டார்கள்.எல்லோருக்குமே தான் ஒரு நடிகையாக ஒரு அசிங்கமான

வாழ்க்கை வாழ்ந்தவளாகவே தெரியும்..சினிமா ஃபீல்டில் ஓரிரு நல்ல பெண்களும் உண்டு.அதில்

நானும் ஒருத்தி என்றால் யார் நம்புவார்கள்?கொசுக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து கடிப்பதைக் கூட

உணராமல் புனிதஸ்ரீ பயத்தோடும் தவிப்போடும் படுத்துக்கிடந்தாள்.

சாதாரணமாக ஒரு கூலி வேலை செய்து பிழைக்க நினைத்தால் கூட அதுவும் சாத்தியமில்லை.

பணம் புகழ் கார் பங்களா ஆள் படை அந்தஸ்து என்று வாழந்த உன்னால் கூலி வேலையெல்லம் செய்து சமூகத்தில் சராசரி பெண்ணாக வெல்லாம் வாழமுடியாது.சினிமாவில்தான் அதுபோலெல்லாம் நடிக்கமுடியும்.நிஜ வாழ்க்கையில் அதுபோல் சாத்தியமில்லை..அவள் மனம்

உண்மையை அவளிடம் இடித்து இடித்துச் சொன்னது.விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி கிடந்தாள்

புனிதஸ்ரீ.

ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் செவ்வந்தி.காலை நேரம் என்பதால் வேடிக்கைப் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக இல்லை.அதுவும் கொஞ்சம் வசதியாவே இருந்தது செவ்வந்திக்கு.

தெரிந்தவர்கள் யாரும் தென்படவில்லை.ஷூட்டிங்குக்கான ஆயத்த வேலைகள் மட்டுமே

நடந்து கொண்டிருந்தன.துணை நடிகைகள் நாலைந்து பேர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகாமையில் ஆனால் அவர்களோடு கலக்காமல் கொஞ்சம் தனியாக நின்று

கொண்டாள் செவ்வந்தி.

நேற்று இவளிடம் வந்து பேசிய ஆள் கையில் நோட்டுபோல் ஒன்றை வைத்துக்கொண்டு இங்கும்

அங்கும் நடந்து கொண்டிருந்தான்.அவன் கண்களில் செவ்வந்தி பட ஒரு நிமிடம் தயங்கி நின்றுவிட்டு சட்டென வேகமாய் நடந்து சென்று டைரக்டரிடம் இவளின் வருகையைச் சொல்ல

அவர் என்ன சொன்னாரோ  இவளிடம் வந்து பேச்சுக்கொடுத்தார் அந்த ஆள்.

மேடம்..பேச்சை ஆரம்பித்தார் அவ்ர்..மேடம்..வணக்கம்...நீங்க தப்பா எடுத்தகலேன்னா ஒன்ணு

சொல்றேன்.. ஒங்களுக்கு விருப்பம்ன்னா இந்த படத்துல ஒரு முக்கியமான வேடத்துல ஒங்கலாள

நடிக்க முடியுமான்னு எங்க டைரக்டர் கேக்கச்சொன்னாரு.. தப்பா னெனச்சுக்கிடாதீங்க..ஒங்களுக்கு விருப்பம்ன்னா சொல்லுங்க..இல்லாட்டி பிரச்சினை ஏதும் வேண்டாம்..விட்டுங்க..மிக பவ்யமாகச் சொன்னார் அவர்.சினிமா வாழ்க்கையில் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்..முகத்தைப்பார்த்தே உள்ளத்தில் இருப்பதை உள்ளபடி சொல்லும் திறமை அவரின் பல வருட சர்வீஸ் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்காதா என்ன..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.