(Reading time: 23 - 46 minutes)

க்கத்தில் வந்த வேலப்பன் சட்டென பிரேக் போட்டு நிறுத்தினான் வண்டியை.என்னா லே..பாலாஜி

எப்பிடி யிருக்குற?..ரொம்ப எளச்சி கருத்துட்ட..வியாவாரம்  டல்லடிக்குதா..?இப்பவும் ஒண்ணும் மோசமில்ல வாரியா நம்ம தொழிலுக்கு?கழுத்தில் செயினும் கைகளில் ரெண்டுமூணு மோதிரங்களும் மின்னின.

அதெல்லாம் வேணாண்ணே...

வேலப்பன் போட்டிருந்த மெல்லிய மல் சட்டையின் பையில் நூறு ரூபாய் நோட்டின் கட்டு வெளிப்படையாய்த் தெரிந்தது.

ஒனெக்கெல்லாம் பட்டா கூட புரியாது..நான் வரேன்..விர்ரென வண்டியைக் கிளப்பிகொண்டு சென்றான் வேலப்பன்.

ம்ம்.வேலப்பன கேட்டிருந்தாக் கூட பணம் கெடச்சிருக்கும்..ஆனா கேக்க மனசு கேக்க மாட்டேங்க்குதே..அவன்டெல்லாம் போயி கேட்டா அவன் ஒடனெ தொழிலுக்கு வா தொழிலுக்கு வான்னு புத்திசொல்ல ஆரம்பிச்சிடுவான்...நமக்கு அதெல்லாம் தோதுப் படாது.

வண்டியைத் தள்ளிக்கொண்டு கொஞ்சம் விரைவாய் நடக்க ஆரம்பித்தான் பாலாஜி.

ன்ன செல்வி எதுனாச்சும் சாப்ட்டியா?ஒடம்பு சாதாரணமா இருக்குல்ல?கணவனை அனுப்பிவிட்டு வாசலில் நின்றிருந்த செல்வியைக் கேட்டாள் தேவி அக்கா

இன்னும் ஒண்ணும் சாப்புடல அக்கா..இனிமேதான்...ஒடம்புதா கொஞ்சம் அசத்தலா இருக்கு

சரி..சரி எதுனா சாப்டுடுட்டு கொஞ்ச நேரம் படு..நான்னா இட்டிலி தரவா?

வேண்ணாங்க்கா...ஒன்ணும் சாப்புட புடிக்கில...வென்னீரு ஊத்தி குளிக்கலாம்ன்னு பாக்குறேன்..

வாசக் கதவ வெறும சாத்திக்கிட்டுப் போறேன் கொஞ்சம் பாத்துக்குங்க அக்கா..

சரி செல்வி நீ போய் குளி..நான் பாத்துக்கிறேன்.

உள்ளே போனாள் செல்வி.லேசாய் இடுப்பை வலிப்பதுபோல் இருந்தது.வெறும் சண்டி வலியாய் இருக்கும் என நினைத்தவளாய் சமையல் அறைக்குப் போய் சோறு வடித்த கஞ்சியை ஒரு டம்ளரில் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு போட்டு அரை ஸ்பூன் நெய் விட்டுக் குடிக்கவும் வலி கொஞ்சம் நின்றார்ப்போல் இருந்தது.

குளிக்கலாமென்று பாத்ரூம் நோக்கி நடந்தவளுக்கு வயிறு கீழே இறங்கி தொங்குவதுபோல் உணர்ந்தாள்.நடப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.மெதுவாய் நடந்து பாத்ரூமுக்குள் நுழந்தவள் அங்கே தயாராய் ஒரு ஸ்டூலின் மீது அலுமினிய குண்டானில் சரியான பதத்தில் சுடுனீரும் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு விளக்கெண்ணையும் சீயக்காய்த் தூளும் வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தாள்.வெளியே கிளம்பும் முன் எவ்வளவு சிரத்தையா எல்லாத்தையும் எடுத்துவைத்துவிட்டுப் போயிருக்குது மாமா என்று நினைத்தவாறே நைட்டியைக் களைந்துவிட்டு துண்டுக்கு மாறினாள் செல்வி.கிண்ணத்திலிருந்த எண்ணையை வலது கையில் கொஞ்சம் ஊற்றி வயிறு முழுதும் தடவ ஆரம்பித்தாள்.சின்னவயசுல பத்துவயசு இருக்கக்கொள்ள அம்மாவபெத்த ஆத்தா பக்கத்துவீட்டு கனகுஅக்காட்ட..அடி கனகு மாசம் எட்டாயிடுச்சுன்னாலே புள்ளத்தாச்சி பொண்ணுங்க நெதமும்.. வயத்துல அடிவயறு மேல் வயறுன்னு எல்லா எடத்துலயும் சதும்ப விளக்கெண்ணைய தடவி கை பொறுக்குற சூட்டுல வென்னீர எடது கைய வயத்துமேல வெச்சு கைமேல ஊத்தணும்..இப்பிடி ஒவ்வொரு இடமா வயறு முழுக்க ஊத்தினியன்னா..கஷ்டமே படாம சுகப் பிரசவம் ஆவும்.. அப்பிடின்னு சொன்னது நினைவுக்குவர எட்டாவது மாசத்துலேர்ந்து செல்வியும் அது போலவே செய்ய ஆரம்பித்தாள்.குளித்துவிட்டு வெளியே வந்தவளுக்கு அன்று என்னவோ புடவை கட்டவேண்டும்போல் இருக்கவே புடவையே அணிந்து கொண்டாள்.

ந்திரா நகர் என்று எழுதப்பட்ட போர்டு நகரின் முகப்பில் நின்றது.மெதுவாய் வண்டியை இழுத்துப்பிடித்து இழுத்துப்பிடித்து கொஞ்சம் தாழ்வாய் இறக்கத்தில் அமைந்திருந்த நகருக்குள்

வண்டியை இறக்கி கால் வைத்தான் பாலாஜி. அதுவரை காய்களின் பெயரைச் சொல்லி கூவாமல் வந்தவன் நகருக்குள் நுழைந்ததுமே..முட்டகோஸு..கத்திரிக்கா..வாழைக்கா..பீன்ஸு..முள்ளாங்கி..

உருளக்கிழங்கு..தக்காளி..வெண்டிக்கா...கூவ ஆரம்பித்தான்.

தாழிட்டிருந்த பெரும்பாலான வீடுகளின் தாழ்ப்பாக்கள் பாலாஜியின் குரல் கேட்டதுமே பட்பட்டென சத்தத்தோடு திறக்கப்பட்டன.ஒரு சில வீடுகளின் சமையலறையிலிருந்து பாலாஜீ..காய்கறிகாரரே நில்லுங்க வரேன் என்று பெண்களின் குரல்களும் கேட்டன.கிட்டத்தட்ட ஏழெட்டு பெண்கள் கூடிவிட்டனர்.

பாலாஜி..நான் கேட்டேனே நார்த்தங்கா,மின்னில,ப்ளாமுஸு கொண்டுவந்திருக்கியோ?கொஞ்சம் வயதான மாமி கேட்கவும்..ம்..கொண்டுவந்திருக்கேம்மா...இந்தாங்க..எடுத்துக்கொடுத்தான் பாலாஜி.

சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டார் அந்த மாமி.ரொம்ப நல்லதுப்பா..ஒனக்கு கோடி தேங்க்ஸ்..

இருக்கட்டும்மா..

பாலாஜி..ஒன் சம்சாரத்துக்கு தேதி ஆயிருக்குமே..என்னிக்குன்னு டாக்டர் சொன்னாங்க..?

இன்னும் நாலு நாள்ள ஆயிடும்ன்னு சொல்லிருக்காங்கம்மா... 

நல்லபடியா ஆம்பள புள்ளயா பொறக்கட்டம்...குழுமியிருந்த மாமிக்களில் ஒருவர் சொல்ல..

அது என்ன ஆம்பள புள்ள? பொண்ணு பொறந்தா வேண்டாமாக்கும்..வயதான மாமி சொல்ல..

என்னதான் இருந்தாலும் சாண் புள்ளன்னாலும் ஆம்பளப் புள்ளஇல்லியோ?..அதானே ஆமோதித்தார்கள் சில பெண்கள்.

அடி போங்கடி..தலைச்சன் என்ன பெத்தா?சமத்தி பொண்ண பெத்தான்னு சொல்ரதில்ல..ஒரு குடும்பத்துல மூத்தது பொண்கொழந்தையா பொறந்தா லெட்சுமியே வந்து பொறந்திருக்கான்னு 

சொல்லி சந்தோஷப் படறது இல்ல..ஆம்பளப் புள்ளயா பொறக்கணுமாமே..சொல்ல வந்துட்டாளுங்க..எப்பவும் பொண்ண பெத்தவங்க கைதாண்டி மேல இருக்கும்..புள்ளையப் பெத்தவங்க கை கை நீட்டி வாங்கறாமாரி பொண்ண பெத்தவங்க கைக்குக் கீழதான் இருக்கும் என்று சிரித்தபடியே வயதான மாமி சொன்னபோது எல்லாப்பெண்களும் ஹோஹோவென்று சிரிக்க அந்த இடமே கலகலப்பானது.

மாமிக்களின் சிரிப்பில் கலந்து கொள்லாமல் நின்றுகொண்டிருந்தான் பாலாஜி.பணத்துக்கு என்ன செய்வதென்று புரியாமல் தவித்தது மனசு.

என்ன பாலாஜி ஏன் என்னவோ போல இருக்கீங்க?மூத்த மாமி கேட்க..

ஒண்ணுமில்லீங்கம்மா..

இல்ல..ஒங்க மொகமே வாடிப்போயிருக்கு..சொல்லுங்க ஏதாவது பிரர்ச்சனையா..?

........

பாலாஜி..தயங்காம கேளுங்க..பணம் கிணம் ஏதும் தேவையா?..பிரசவம்ன்னா ஆயிரம் செலவிருக்கும்..சொல்லுங்க..

பணமெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ன்னு சொல்லிடாதே..கேளு என்று மனசு சொல்லியது.

பட்டென்று நாக்கு கேட்டேவிட்டது...ஆமாங்க..ஒரு ரெண்டாயிரமாவது வேணும்..யார்ட்ட கேக்கறதுன்னு....சொல்வதற்குள் தடுமாறிப் போனான் பாலாஜி.

அடுத்த பத்தாவது நிமிடம் மாமிக்களின் அஞ்சறைப் பெட்டி பணம் ரெண்டாயிரத்து முன்னூறு

ரூபாய் அவன் கைகளில்.கண்களில் நிரம்பிய கண்ணீரோடு பொதுவாய் எல்லா மாமிக்களையும்

கையெடுத்துக்கும்பிட்டுவிட்டு வரேங்கம்மா என பொதுவாய்ச் சொல்லிவிட்டு வண்டியைத் திருப்பினான் வீட்டுக்குப் போகும் எண்ணத்தோடு.பணம் கிடைத்த திருப்தி மனதில்...மூவாயிரமா கேட்டிருக்கலாம் மனக்குரங்கு சொன்னது...சீ.. வாயமூடு.. வாய்... வார்தைகளால் மனக்குரங்கை அடக்கியது.

வண்டியை ஒரு தம்பிடித்து மெயின்ரோட்டின் மேல் ஏற்றினான் பாலாஜி.வேகவேகமாய் நிறைய வாகனங்கள் செல்லும் சாலை.ரோட்டின் ஓரமாய் வண்டியை வீடு நோக்கித் தள்ளிச்செல்ல ஆரம்பித்தான்.பின்னால் .தடதடவென்ற சப்த்தத்தோடு பைக் ஒன்று வருவது கேட்டது. ஐயோ..இது கந்து வட்டி கோவாலுவின் வண்டி சத்தம் ஆயிற்றே...மனசு திக்கென்றது.நினைத்தது சரிதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.