(Reading time: 23 - 46 minutes)

க்கத்தில் வந்து உரசுவது போல் வண்டியை நிறுத்தினான் கோவாலு.சப்தனாடியும் ஒடிங்கிப் போயிற்று பாலாஜிக்கு.

அண்ணே...எங்கண்ணணே இந்த பக்கம்?தேவையே இல்லாமல் அசடு வழிய கேட்டான் கோவாலுவை.

ம்ம்ம்....ரிசர்வ் பேங்க் ஆபீசரு வரச்சொல்லியிருந்தாரு..அவரத்தான் பாத்துட்டு வாரேன்..

அண்ணே...

அண்ணணாவது நொண்ணணாவது..ஒழுங்கு மருவாதியா பணத்த எடு நீல்லாம் சோத்த துண்ணுறியா..இல்ல வேற ஏதாச்சுமா?

அண்ணே..கொஞ்சம் டயம் குடுங்கண்ணே..வீட்டுல பொஞ்சாதிக்கு பிரசவ நேரம்..கையில காசில்லாம தவிக்கிறேண்ணே..

கையில காசில்லேன்னு அழுவுர நீல்லாம் ஏண்டா பொண்டாட்டிட்ட படுக்குற..படுத்தா அவ வவுத்துல புள்ள வரும்ன்னு தெரியிமுல்ல...தொடர்ந்து அவன் பேசிய வார்த்தைகளை அச்சேற்ற முடியாது.கோபமே வராத பாலாஜிக்கும் கோபம் வந்தது கோவாலுவின் ஆபாசமான பேச்சைக் கேட்டு.நறுக்கென்று நாலு வார்த்தை கேட்கலாமென்று அவன் வாயைத் திறக்கும்முன் கோவாலுவின் பார்வை பாலாஜியின் சட்டைப் பைக்கு சென்றது.பாலாஜியின் போராத காலம் மாமிகள் கொடுத்த ரெண்டாயிரத்து முனூறு ரூபாயையும் போயும் போயும் சட்டைப் பையிலா வைக்கவேண்டும்.சட்டென பாலாஜியின் சட்டைப் பையில் கைவிட்டு லபக்கென்று கொத்தாய்ப் பணத்தை எடுத்தான் கோவாலு.பணத்தோடு பாலாஜியின் செல்போனும் அவன் கைக்கு வந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாலாஜி தடுமாறிப் போனான்.சமாளித்துக்கொண்டு அண்ணே.. அண்ணே என்று சத்தம்போட காதில் வாங்காமல் வெகு வேகமாய் வண்டியைக்கிளப்பிச்சென்றான் கோவாலு....வண்டியை தலைதெறிக்க ஓட்டிச்செல்லும் கோவாலுவைப் பார்த்தபடியே சிலையாய் நின்றான் பாலாஜி.

அப்போதுதான் நடந்தது அந்த கோர சம்பவம்.கோவாலு செல்லும் திசைக்கு எதிர்த்திசையில்

கண்ணுமண்ணு தெரியாத வேகத்தில் வந்த வேன் ஒன்று கோவாலுவின் வண்டியில் பயங்கரமாய் மோத தூக்கி வீசப்பட்டான் கோவாலு.பாலாஜியிடமிருந்து வலுக்கட்டாயமாய்ப் பறித்துச் சென்ற பண நோட்டுக்கள் காற்றில் அடியாடி மெள்ளமெள்ள கீழேவிழுந்தன.பணத்தோடு அவன் கையிலிருந்த பாலாஜியின் செல்போன் தூரமாய்ப் போய் விழுந்து உடைந்து சிதறியது.

ஐயோ..கோவாலுண்ணே..கத்திக்கொண்டே கோவாலு அடிபட்டு விழுந்து கிடந்த இடம் நோக்கி 

ஓடினான் பாலாஜி.மோதிய வேனிலேயே குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த கோவாலு

ஏற்றப்பட்டான்.கதறியபடியே பாலாஜியும் அந்த வேனில் ஏறிக்கொண்டான்.அன்னேரம் செல்வியை மறந்துபோனான் பாலாஜி.அரசு பொது மருத்துவமனை நோக்கி விரைந்தது அந்த வேன்.

குளித்துவிட்டு வந்ததும் ரொம்பவும் ஆயாசமாக இருந்தது செல்விக்கு.படுத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.விரித்துப்போட்டபடி கிடந்த பாயில் வெகு ஜாக்கிரதையாய் கைகளை ஊன்றிக் கீழே உட்கார்ந்தாள்.கொஞ்சம் மூச்சு வாங்கியது.படுத்துக்கொள்வதற்குப் பெரும் பாடு படவேண்டியிருந்தது.முதுகு வலித்தது.கொஞ்சம் மல்லாந்து படுத்தால் தேவலைபோல் இருக்கவே மல்லாந்து படுத்தவளுக்கு மல்லாந்து படுக்கக் கூடது என டாக்டர் சொன்னது நினைவுக்குவர வலப் பக்கமாய் ஒருக்களித்துப்படுத்தாள்.ரெண்டு நிமிடம்தான் மறுபக்கம் ஒருக்களித்தால் தேவலைபோலிருக்கவே அப்படியே மறுபக்கம் திரும்பிப் படுக்கக் கூடாது என்பது தெரிந்திருந்ததால் எழுந்து உட்கார்ந்து மீண்டும் இடப்பக்கமாய் ஒருக்களித்துப் படுத்தாள்.அதுவும் சில நிமிடம்தான்.மீண்டும் மல்லாந்தபோது வயிறு கீழிருந்து மேலாய் ஒரு பக்கமாய் நீண்டது.அடி வயிறு கொஞ்சம் பள்ளமாயிற்று.வயிற்றுக்குள் குழந்தை சோம்பல் முறிக்கிறது என அவளுக்குப் புரிந்தது.

சோம்பல் முறித்த குழந்தை ஓங்கி ஒரு உதை விட்டது.லேசாய் வலித்தது செல்விக்கு.ஆனாலும் அந்த உதையை ரசித்து சிரித்துக்கொண்டாள்.அன்னிமிட நேரங்களில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை தாயின் மல மூத்திரத்தை மிகக் குறைந்த அளவுக்கு உட்கொள்ளும் என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.சூடாய் டீ குடித்தால் தேவலை போல் இருந்தது செல்விக்கு.மெள்ள

வலது கை இடது கை என்று மாற்றி மாற்றி ஊன்றி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.கால்மாட்டில் இருந்த தூணைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்பதற்குள் ப்ரம்மப்பயத்தனமாயிற்று.ம்..அம்மா..

அப்பா..என்று வாய்விட்டு முனகினாள்.குழந்தையின் பாரம் உடலை அழுத்திற்று.சில நிமிடம் தூணைப்பிடித்துக்கொண்டு நின்றவள் சமையல்கட்டை நோக்கி இரெண்டெட்டு வைத்தாள்.

முதுகின் கீழே இடுப்பின் பள்ளத்தில் சுளீரென வலி வெட்டியது.அடிவயிற்றில் மின்னலடிப்பதுபோல பளீரென்று ஒரு வலி வலித்து சுண்டி இழுத்தது..பட்டென பனிக்குடம் உடைந்து உள் பாவாடை முழுதும் சொத சொத வென நனைந்து பாயில் வழிந்து தரையில் ஓடியது லேசான வெண்ணிற திரவம்.பயந்து போனாள் செல்வி.தலைச்சன் பிள்ளை என்பதால் முனனனுபவம் இல்லை.தூணைப்பிடித்துக்கொண்டு தரையில் சரிந்து அமர்ந்து கொண்டாள்...அக்கா..தேவியக்கா..பெரிம்மா...அவள் கத்திய கத்தலில் தேவி அக்கா சங்கரம் பெரியம்மா எதிர்வீட்டுப் பெண்கள் என ஏழெட்டுபேர் ஓடி வந்தார்கள்.கொஞ்சம் பேர் வாசலோடு நின்று கொண்டார்கள்.பெரியம்மா சங்கரம்மாவுக்கு செல்வியின் நிலைமை புரிந்து போயிற்று.சட்டென செல்வியை வேறு இடம் நகர்த்தி படுக்கவைத்தார்கள்.நனைந்து போன துணிகள் அப்புறப்படுத்தப்பட்டன.சங்கரம்மா... ஆம்புலன்ஸ்ஸோ ஆட்டோவோ கூப்பிடலாமா?ஆஸ்பத்திரிக்கி கெளம்பலாமா?பெண்களில் ஒருவர் கேட்க..வேண்டாம்..வேண்டாம்..அதெல்லாம் இனிமே சரிப்படாது..உதிரப் போக்கு ஆரம்பிச்சிடுச்சு புள்ள தல திரும்புது..இனிமேல ஆட்டோவுலயொ ஆம்புலன்ஸ்ஸுலயொ அழைச்சுக்கிட்டு போனா ஆஸ்பத்திரிக்கி போவரதுக்குள்ள ஆட்டோவுலயே பிரசவம் ஆயிடும்.நான் பாத்துக்கிறேன்.தைரியமாகச் சொன்னார் சங்கரம்மா.பொறுக்கும் வலியாய் இருக்கும் போது மெள்ளவும் கடுமையாய் வலிக்கும் போது வலி பொறுக்கமுடியாமல் சத்தமாகவும் கத்த ஆம்பித்தாள் செல்வி.நேரம் ஆக ஆக வலி கடுமையாயிற்று.ஒரு கட்டத்தில் தேவிக்கா முடிலக்கா..பெரிம்மா முடீல பெரிம்மா...

அவளின் கத்தல் அங்கிருந்த பெண்களி கண்களைக் குளமாக்கியது."இதுக்குத்தான் இந்த வலியும் வேதனையையும் படனுமேன்னுதான் பொண்ணு பொறந்தா பொண்ணான்னு" கேக்குறாங்க ஒருத்தி குரல் தாழ்த்திச் சொல்ல இன்னொரு பெண் ஆமாம் அது சரிதான் என்று ஆமோதித்தாள்.ஆனா இந்த காலத்துல எந்த பொண்ணு வலிபட்டு கஷ்டப்பட்டு புள்ளைய பெத்துக்குது..எல்லாம் ஆப்புரேஷந்தான்...அதுனாலதான் புள்ளைங்க பெரிசானா பாசமில்லாம இருக்குதுங்க..இடுப்பு வலி பட்டும் பெக்கறது இல்ல தாய்ப் பாலும் கொடுக்கறது இல்ல புள்ளைங்களுக்கு எங்கேந்து பாசம் வரும்? ஒரு பெண் சொல்ல..ஆமா..அவசியமுன்னா ஆபரேஷனு செஞ்சி பெக்கலாம் இல்லாங்காட்டி கஷ்டப்பட்டு பெத்தா என்ன?இன்னொருத்தி பதில் சொல்ல.தலையாட்டினார்கள் மற்ற பெண்கள்.

வலி உச்சத்தை எட்டியது.கத்திக் கதற அரம்பித்தாள் செல்வி.குழந்தையின் சிரசு கொஞ்சமே வெளியே வந்தது..செல்வி..செல்விகண்ணு கொஞ்சம் முக்கும்மா..மூச்ச  உள்ள இழுக்காத..முக்கு.. முக்கும்மா..

முடில..முடில..

முடியணும்..கொஞ்சம் வேகமா பலமா..சம்த்துல்ல..எங்க.. எங்க முக்கு..முக்கு..

உயிரை இழுத்துப்பிடித்து பலம் கொண்ட மட்டும் அம்....மா....கத்தினாள் செல்வி.

அந்த கத்தலை கேட்டால் கல்மனது கொண்டவர்களின் உடலும் குலுங்கும் உயிரும் உருகும்.வெளியே வந்து விழுந்த சிசுவை லாவகமாகக் கையிலேந்திக்கொண்டார் சங்கரம்மா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.