(Reading time: 23 - 46 minutes)

தாயின் இருட்டுக் கருவறையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததாலோ..வெளிக்காற்று தாக்கியதாலோ யாரோ முதுகில் ஓங்கி யடித்தது போல வராங்க்..வராங்க் என்று பெருங் குரெலெழுப்பிஅழுது ஊரையே கூட்டியது அந்தப் புத்தம் புதிய பெண் குழந்தை.மகாலட்சுமி பொறந்திருக்கா என்றார் சங்கரம்மா மலர்ச்சியோடு.

வாசலில் அமர்ந்திருந்த கிழவி..பொட்ட புள்ள் பொறந்திருக்கு என்றாள்.ஐயையோ பாட்டி பாப்பாக்கு கண்ணு தெரியாதா..பொட்டபுள்ளன்ற என்று கேட்டது கிழ்வியோடு அமர்ந்திருந்த ஏழுவயது சிறுமி.

அடி போடி இவளே பொட்ட புள்ளேன்னா..பொம்பள புள்ள..பாட்டி நீ உள்ளயே போகல அப்பறம் ஒனக்கு எப்பிடி தெரியும் பொம்பள புள்ளன்னு?கேட்டாள் சிறுமி.

அதுவா..யாரோ அடிச்சாப்புல வரா..வரான்னு சத்தமா கத்தி அழுது ஊரக்கூட்டுனா அது பொம்பளப்புள்ள..சன்னமா மெல்லிசா குவா..குவான்னு கத்துனா அது ஆம்பளப் புள்ள..கேக்க வந்துட்டா பெரிய மனுஷி..என்று சொல்லிச் சிரிக்கவும் கதவைத்திறந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு பெண் பொம்ப்ளப்புள்ள பொறந்திருக்குன்னு சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

பொது மருத்துவமனை.படுக்கையில் கிடந்த கோவாலுக்கு ரத்தம் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

அறையின் வெளியே கவலை தோய்ந்த முகத்தோடு கோவாலுவின் குடும்பம்.ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருந்தான் பாலாஜி.வேகமாய் ஓடிவந்தார் ஒரு நர்ஸ்.இங்க யாரு விபத்துல அடிபட்ட கோவாலுங்கிரவரோட மகன்?

நாந்தான்..என்னாச்சு என்னாச்சு?அப்பா எப்பிடி இருக்காரு?சிஸ்டர்..பதறிப்போய் கேட்டான் கோவாலுவின் மகன் செல்வகுமார்.

சார்..சார்..உங்கஅப்பாவோட ரத்த க்ரூப் Rhநெகடிவ்..இது தேவையான அளவு கிடைக்கல..வாட்ஸப்லயும் டிவி லயும் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்கோம்.ஆனா ரத்தம் கிடைக்கிற வரைக்கும் காத்திருக்க முடியாது..ஒடனடியா தேவ இல்லாட்டி எதுவேணா நடக்கலாம்..ப்ளட்பேங்க்குல இல்ல. நீங்கதான் ஏற்பாடு பண்ணணும்...படபடப்பாய்ச் சொன்னார் அந்த நர்ஸ்.

தவித்துப்போனான் கோவாலுவின் மகன்.அழ ஆரம்பித்தது குடும்பம்.செட்டென நினைவுக்கு வந்தது பாலாஜிக்கு தனக்கும் Rhநெகடிவ் வகை ரத்தம்தான் என்பது.

அடுத்த பத்தாவது நிமிடம் பாலாஜியின் ரத்தம் கோவாலுவின் உடலில் ஏற்றப்பட்டது.கோவாலுவின் குடும்பமே நன்றி சொன்னது பாலாஜிக்கு.மருத்துவ மனையைவிட்டு வெளியேவந்தான் பாலாஜி.

காலைல ஏழு மணிக்கு வீட்டுலேந்து கிளம்பினது மணி மூணாவுது ஒரு போன் கூட செல்விக்கு பண்ணல என்ற நினைப்பு வந்தது.சின்னதாய்க் கவலை எட்டிப்பார்த்தது.கூடவே தள்ளு வண்டியின் நினைவும் வந்தது.அவ்வளவு தூரம் வீட்டுக்கு நடந்து செல்ல முடியாது.பஸ் எப்பவரும்ன்னு சொல்லமுடியாது.ஷேர் ஆட்டோலயாவது போகலாம்ன்னா காசு?சட்டைப் பையைத் துளாவினான். ஐந்தும்,ரெண்டும் ஒன்றுமாக பத்து ரூபாய் காய்னாக தேறியது.மனம் சந்தோஷப்பட்டது.

ரோட்டில் இறங்கி தெருவுக்குள் நுழந்தான் பாலாஜி.ஒச்சாயிக் கிழவி பொக்கைவாயைத் திறந்து பாலாஜியைப் பார்த்து சிரித்துவிட்டு என்னா பாலாஜி ஒனக்கு பொண்ணு பொறந்திருக்காபோலருக்கு..நீ எங்க போய்ட்ட?போ..போ சீக்கிரம் போய்ப்பாரு..ரோசாப்பூ போலருக்கா ஒம்மவ..மகாலட்சுமி....

தூக்கிவாரிப்போட்டது பாலாஜிக்கு..என்னது பொண்ணு பொறந்திருக்கா?வீட்டுலயா?என்ன சொல்லுத ஆயா?பதிலுக்குக் காத்திராமல் வீட்டுக்கு ஓடினான் பாலாஜி.உள்ளே நுழைந்ததுதான் தாமதம் பெரியம்மா சங்கரம்மா..வாவா பாலாஜி..பாரு..பாரு ஒம் பொண்ண பாரு...கொண்டுவந்து காட்ட குண்டு கன்னமும் சிவந்த உடலுமாய் வாயில் விரல் போட்டபடி தூங்கிக்கொண்டிருந்தது பாலாஜியின் பெண் குழந்தை.லெட்சுமிப்பா லெட்சுமி..லெட்சுமி ..பெரியம்மா சொல்ல சந்தோஷமாய் இருந்தது...செல்வி மெலிதாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

ள்ளுவண்டியைக் கொண்டுவந்து நிறுத்தியாயிற்று வாசலில்.ரெண்டு நாளாய் வியாபாரத்திற்குப் போகவில்லை.அன்று காலை பத்து மணி இருக்கும்.வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சப்தம் கேட்டது.நம் வீட்டுக்கு காரில் யார் வரப் போகிறார்கள்? எட்டிப்பார்த்தான் பாலாஜி.காரிலிருந்து கோவாலுவின் மகன் செல்வகுமார் இற்ங்கி உள்ளே வருவதைப் பார்த்தான்.எதுக்கு?புரியவில்லை அவனுக்கு.

வாங்க வாங்க..செல்வா..அப்பா எப்பிடி இருக்காரு?வரவேற்றான் செல்வாவை.

வேகமாய் உள்ளே வந்து பாலாஜியின் கைகளைப் பற்றிக்கொண்டான் செல்வகுமார்.

அப்பா பொழச்சுட்டாரு..கண்ண முழுச்சிட்டாரு..எல்லாம் உங்களாலதான் பாலாஜி..அப்பா இப்ப

உயிரோட இருக்காருன்னா அதுக்கு ..நீங்க செஞ்ச உதவிதான் காரணம்.கண்களில் கண்ணீர் த்ளும்ப நன்றி சொன்னான் செல்வா.

அதெல்லாம் ஒன்ணுமில்ல செல்வா சார்...

சார்ல்லாம் வேண்டாம் பாலாஜி..அதுசரி நீங்க வியாபாரத்துக்குப் போவல?

இல்ல எனக்கு முந்தா நாளு பொண்ணு பொறந்திருக்கு..வீட்டுல யாரும் ஹெல்ப்புக்கு இல்ல அதான் நான் போவல...

அப்பிடியா..ரொம்ப சந்தோஷம்..கொழந்தைய நான் பாக்கலாமா?

சங்கரம்மா குழந்தையைக் கொண்டுவந்து காட்ட சட்டென கழுத்தில் போட்டிருந்த பவுன் சங்கிலியை கழற்றி குழந்தையின் கழுத்தில் போட்டான் செல்வகுமார்.

சார்..சார்..ஐயா..ஐயா...எதுக்கு இதெல்லாம்..வேணாம் சார்...பதறினான் பாலாஜி.

சும்மா இருங்க பாலாஜி..அப்பா கண்ண முழுச்சதுமே நீங்க ரத்தம் கொடுத்ததாலதான் அவரு உயிரு பொழச்சதா சொன்னேன்..அவரு அழுதுட்டாரு...ஒங்கள கேவலமா பேசினதுனாலதான் ஆண்டவன் அவருக்கு தண்டனையா விபத்த ஏற்படுத்தினாராம்..ஒங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்னாரு.. அதோட இன்னும் ஒன்னையும் சொல்லி அனுப்பினாரு பாலாஜி..

என்ன அது என்று கேட்காமல் அவன் முகத்தை  ஏறிட்டுப் பார்த்தான் பாலாஜி.

நம்மூரு ராஜாஜி காய்கறி மார்க்கெட் இருக்குதில்ல..பெரிய மார்க்கெட் அதுல ஒரு கடைய ஒங்க பேர்ல தன் சொந்த செலவுல வாங்கித்தரப்போராராம் ஒங்களுக்கு.அதோட ஒரு மாசத்துக்கான காய்கறியையும் வாங்கித் தரப்போராராம்.நீங்க மறுக்காம வாங்கிக்கணும்ன்னு சொல்லிட்டு வரச் சொன்னாரு அப்பா..

அப்படியே மின்சாரம் தாக்கியது போல் இருந்தது பாலாஜிக்கு..குபீர்ரென்று ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் கிளம்புவதைப்போலும் இருந்தது..

அவசரஅவசரமாக மறுத்தான்...செல்வா..செல்வா..என்ன இதெல்லாம்...?

இல்ல..பாலாஜி..இது அப்பாவோட ஆசை.....நான் வரேன்..பாலாஜி மேலும் மறுப்பதற்கு இடம் கொடுக்காமல் வாசலை நோக்கி நடந்தான் செல்வ குமார்.

இந்ரா நகர் வயதான மாமி... ஒரு குடும்பத்துல மூத்தது பொண்ணா பொறந்தா லட்சுமியே வந்து பொறந்ததா சொல்ரதில்லயா?என்று சொன்னது திரும்பத் திரும்ப பாலாஜியின் காதில் ஒலித்தது. 

அனைத்தையும் கேட்டுக்கொண்டு படுத்திருந்த செல்வி..எம் பொண்ணு இவ தனலட்சுமி..

லட்சுமியே வந்து பொறந்திருக்கா..என்று சொல்லி குழந்தையைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டாள் சந்தோஷமாய்.

லட்சுமி..தனலட்சுமி....என் செல்லக்குட்டி எல்லாம் நீ பொறந்த நேரம்தாண்டி செல்லம் என்று சொல்லியபடியே குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான் பாலாஜி.

உஸ்....அப்பாடி..முடிசிட்டேன்ப்பா..நீ....ளமான....பெ...ரீய கதை..பாதி படிக்கரத்துக்குள்ள தூங்கிப் போயிருப்பீங்க...பாத்துக்குங்க...சரியா? நன்றி...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.