(Reading time: 7 - 14 minutes)

நான்: அவளும் இல்லாத  ஒரு நாள் உடம்பு சரி இல்ல 100% கையறுநிலை தான். அப்போ கூடவே இருந்து நான் வீட்டுக்கு ஓடாம இருக்க வெச்சது ஒரு குழந்த பிள்ளை இருக்கு என் ஹாஸ்டல.

நான்: ஆபீஸ்ல சும்மா இவங்கள பார்த்துட்டு காலைல சிரிச்சிட்டு போனாலே நாள் அழகா ஆகிடும்னு  சிலரை பார்க்கறப்போ தோணும் அந்த மாதிரி உறவுகளாம் ரொம்ப நெருக்கமா இருக்கணும்னு இல்ல,

அமி: நெருக்கமா ஆனாலும் நல்ல தான் இருக்கும் எனக்கு புரிய வெச்ச ஒரு ஆள்.

நியோ: அதுவும் அவங்க அமைதிக்கும், அச்சோ அவங்க பீல் பண்ணுவாங்கலேன்னு அதிகமா பீல் பன்ற இயல்புக்கும் எப்படி என் கூட இருக்காங்கன்னு தெரியல. இவங்கள மாதிரி கண்டிப்பா முடியாதுன்னு நினைக்கற ஒரு ஆள்.

நான்:  2014 செப்டம்பர்ல என்கிட்ட யாராவது  இன்டர்நெட் என் வாழ்க்கைல இப்படி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்னு யாரும் சொல்லி இருந்தா நம்பி இருக்க மாட்டேன்

அமி: தீபாவளி லீவ்ல சண்டேவே திரும்பி வந்துட்டேன் முதல் ஞாயிறுல வந்த அதே ஞாயிறு தான் பேச ஆரம்பிச்சோம் இன்னும் பேசறோம் பேசறோம் பேசிகிட்டே இருக்கோம்.

நியோ: இவங்க ஆரம்பிச்சு வெச்சது அப்படியே படிப்படியா இப்போ வளந்துருச்சு எனக்கு ஒரு டாம் கெடைக்கற அளவுக்கு வளந்திருக்கு

என் எண்ணகளையும்  என் விருப்பங்களையும்

இன்னும் அதிகம் அறிந்தது பிடித்தது

உன் எண்ணகளையும்  உன் விருப்பங்களையும்

கவனிக்க தொடங்கிய பிறகு தான்

நான்: என் காலேஜ் ஜூனியர் ப்ரெண்ட்க்கு எழுதி குடுத்தது இப்போ ஒரு சீனியர் ப்ரெண்ட்க்கு பக்காவா பொருந்துது.

நியோ: நான் மட்டும் இப்படி இல்லன்னு எனக்கு கெடச்ச கம்பெனி அவங்க

என்னோட பல ப்ரெண்ட்ஸ் கடி ஆகர அளவுக்கு இவங்கள பத்தி பேசி இருக்கேன்

அமி: இப்போதைய காலகட்டத்துக்கு நான் எல்லாம் பேசற ஒரு ஆள்.

நான்:  இந்த கதை எழுத ஆரம்பிக்கறப்போ

நியோ: இது கதையான்னு கேக்கறாங்க

நான்: பேச விடும்மா

அமி: சரி பேசு

நான்:  இந்த கதை எழுத ஆரம்பிக்கறப்போ இதுல இருந்தவங்களும், இப்போ அதிகமானவங்களும் , நெறைய வித்தியாசம் இருக்கு.

நியோ: வாழ்க்கை எப்போவும் நமக்கு தேவையானவங்கள அறிமுகப்படுத்த மறக்காது,

என்ன இடையில கொஞ்சம் தேவை இல்லாதவங்களையும் அறிமுகப்படுத் தும் அதுக்காக எல்லாம் தத்துவம் பேச ஆரம்பிக்க கூடாது.

அமி:சுத்தி பார்த்த நாம நெறைய பேருக்கு முக்கியமானவங்களா தான் இருப்போம்

நான்: அதெல்லாம் சரி நாம எதுக்கு இப்போ கதைய சொல்லிக்கிட்டு இருக்கோம்னு படிக்கறவங்க நெனக்கமாட்டாங்க.

அமி: கண்டிப்பா நெனப்பாங்க என்ன பண்ண போறீங்க.

நியோ: அதனால என்ன படிக்கற எல்லாருக்கும் இந்த மாதிரி உறவுகளும் கால ஓட்டத்துல மறந்து போன நினைவுகளையும் நாம நியாபக படுத்தினதா இருக்குமில்ல.

நான்: பாரு நான் என்ன பண்ணினாலும் அதுக்கு ஒரு காரணம் வெச்சு இருக்கா, நீயும் இருக்கியே.

அமி: ஹலோ,இந்த கதை என்னோடது

நியோ : ஸ்க்ரீன்ப்ளே என்னோடது

நான் : சரி, சரி உங்க சண்டைய நிறுத்துங்க END CARD போடலாம்.

நியோ & அமி : நீ கெளம்பு எங்களுக்கு வேலை இருக்கு.

நான் : என்ன வேலை ?!

அமி: கமெண்ட் படிச்சிட்டு இந்த கதை எழுதினதுக்கு எவ்ளோ சந்தோஷ படலாம்னு பார்க்கணும்

நான் : உனக்கு ?

நியோ : கமெண்ட் படிச்சிட்டு அடுத்த கதை எப்படி எழுதலாம்னு யோசிக்கணும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.