(Reading time: 34 - 68 minutes)

றேழு நிமிடங்கள் கழித்து திரும்பி மூச்சிரைக்க ஓடி வந்தான்.

“இந்தாங்கனா..” கசங்கிய பத்து ரூபாய்களாக எழுபது ரூபாய் மீதியைக் கொடுத்தான்.

“தேங்க்ஸ்பா” வாங்கிக் கொண்டு காருக்கு திரும்பினேன்.

காரின் பின் சீட்டில் வசதியாக சாய்ந்து படுத்திருந்தாள்.

“இந்தா..” பாட்டிலை அவளிடம் கொடுத்துவிட்டு, முன் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தேன்.

அங்கிருந்து காரைக் கிளப்பிய போது மணி ஏழு.

“எங்க வீட்டுக்கு தான போறோம்?” கேட்டேன்.

“ம்ம்”

“உங்க அம்மா ஃபோன் பண்ணினா ஊட்டில இருக்குற மாதிரியே பில்ட் அப் பண்ணனுமா?” சிரித்துக் கொண்டே கேட்டேன்.

“ம்ம்” அதே பதில்.

மாலை நேர நெரிசலில் கார் பயணித்துக் கொண்டிருந்தது. மனதில் பலவாரான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் ரீவைன்ட் ஆகிக்கொண்டிருந்தன். வெளியே சனிக்கிழமை மாலை என்பதால் நகரின் பரபரப்பு உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. சாலையோரக் கடைகள், பளீர் விளக்குகள், வாகனங்களின் ஹார்ன் ஒலி, மக்கள் கூட்டம் என ஒரே கசகசப்பு.

ஒரு சிக்னலில் காரை நிறுத்தினேன். பக்கத்திலிருந்த ஹோட்டல் கண்ணில் பட்டது.

“வீட்ல அப்பா அம்மா வர நேரம் ஆகும். ஹோட்டல்ல சாப்டுட்டு போயிடலாமா?”

“ம்ம்”

எதுக்கெடுத்தாலும் அதே ‘ம்ம்’. சலித்துக் கொண்டே காரை செலுத்தினேன்.

சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே கழிந்தன.

இப்போது நகரின் நெரிசலைத் தாண்டி அமைதியான புறநகர் பகுதியில் சென்றுகொண்டிருக்கிரோம்.

என் வீட்டுக்குப் போகும் வழிதான். அங்கே எந்த ஹோட்டல் நல்லதாக இருக்குமென என் மூளை கணக்கிட்டுக்கொண்டிருந்தத போது அவள் குறுக்கிட்டாள்.

“நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியாடா?”

திடீரென அவள் கேட்க்க எனக்கு சிரிப்பு வந்தது.

“ஓ..நிறைய பண்ணிருக்கேனே.. அசின், தம்ன்னா,அப்புறம் இப்போ நஸ்ரியா...ஏன் சம்பந்தம் இல்லாம இந்த நேரத்துல இப்படி கேக்குற?” திரும்பாமலேயே பதிலளித்தேன்.

“இல்ல,,சீரியஸா எதாவது?”

“உனக்கு என்னடி ஆச்சு? புதுசா கேக்குற..உனக்கு தெரியாதா? எந்த சீரியஸ் லவ்வும் இல்ல. அப்படியே இருந்தாளும் உனக்கு தெரியாமயா பண்ணுவேன்?” காரை அந்த பஞ்சாபி தாபாவின் பார்க்கிங்க் ஏரியாவுக்குள் திருப்பினேன்.

“உன்னோடு பேசாத நாட்களில் நான் உண்ணாமல் இருப்பதைக் கண்டு,உன் எஸ்.எம்.எஸ் வராத நாட்களில் என் செல் ஃபோனும் சார்ஜ் ஏற்றிக்கொள்ள மறுக்குதடி” 

ப்ரேக்கை அழுத்தி மிதித்தேன். திவ்யாவின் குரலில் அந்த ஹைக்கூவைக் கேட்டதும், இதயமே நின்றுவிட்டது. ஸ்கூல் படிக்கும் போது நான் எழுதியது.

அதிர்ச்சியுடன் பின்னால் திரும்பினேன்.

சீட்டுக்கடியில் இருந்த அந்த பழைய ஃபேக் இப்போது அவளருகில் இருந்தது. அவள் கையில் என்னுடைய அந்த பச்சை டைரி. இத்தனை வருடங்களாக மறைத்துவைத்திருந்த உண்மை எல்லாம் இன்று அவள் கையில்.

அவள் கண்கள் என் கண்களையே உற்று நோக்கின.

டுத்த பத்து நிமிடங்களில் வீட்டை அடைந்தோம். சாப்பிடவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு அழுத்தம் உருவாகி ,அது பெருகி விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது. யார் இந்த விஷயத்தை தொடங்குவது? சொல்லாமல் மறைத்ததற்கு நான் மன்னிப்பு கேட்பதா இல்லை அவளே ஆரம்பிப்பாளா?

நாங்கள் உள்ளே செல்லவும், வேலைக்காரப் பெண் கதவைப் பூட்டவும் சரியாக இருந்தது.

எங்களைப் பார்த்ததும்,” வாங்க தம்பி,,வாம்மா திவ்யா ..நல்லா இருக்கியா? “

“நல்லா இருக்கேன்,,நீங்க?” என்றாள். அடிக்கடி வந்து போவதால் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகம்.

“நல்லா இருக்கேம்மா. தம்பி...இன்னிக்கு ராத்திரி அம்மா அப்பா அத்தை வீட்டுலயே தங்கப் போறாங்களாம். உங்க ஃபோன் ஆஃப் ஆயிடுச்சு போல. எங்கிட்ட ஃபோன் பண்ணி சொன்னாங்க. அப்புறம் தம்பி நாளைக்கு பரிட்சைக்கு படிக்க அவரு ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிட்டாங்க. அப்புறம் இங்க ஏதோ லைன்ல பிரச்சனையாம். காலைல தான் கரண்ட்  வரும். வேலையெல்லாம் முடிஞ்சுது. ஃப்ரிட்ஜ்ல பாலிருக்கு. சாப்பிடுக்கோங்க. நான் வரேன் தம்பி” என்று என் கையில் சாவியைக் கொடுத்து விட்டு அவர் செல்ல , நான் திவ்யாவைப் பார்த்தேன்.

“என்ன?..ஓப்பன் பண்ணு.. மழை வரப் போகுது. இனி எங்க என் வீட்டுக்கு போறது? “ குரலில் கடுமை கூடியிருந்தது.

கதவைத் திறந்தேன். ஹால் கும்மிருட்டாக இருந்தது. தடவி தடவிப் போய் ஜன்னலைத் திறந்து விட, சில்லென மழைக் காற்று அரையை நிரப்பியது. பின்னால் திவ்யா ட்ராவல் ஃபேக்கை இழுத்துக்கொண்டு வந்தாள். அதை ஒரு ஓரமாகத் தள்ளி விட்டு , ஸோஃபாவில் சரிந்தாள்.

நான் மௌனமாக எதிரில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.

இருட்டரையில் ஜன்னல் வழியே நுழையும் மெல்லிய வெளிச்சத்தில் அவள் அழகாய்த் தெரிந்தாள்.

ஓரிரு நிமிடங்கள் கழிந்திருக்கும்.

“ ஏண்டா எதுமே எங்கிட்ட சொல்லல? நீ என்ன லவ் பண்ணியிருக்க. ஐ கான்ட் பிலிவ் சீரியஸ்லி”

ஆம். நான் காதலித்தது இவளைத் தான். என் முதல் காதலி என் உயிர்த் தோழியான இவளே தான். உண்மையில் இவளைப் பார்த்த முதல் நொடியிலயே விழுந்து விட்டேன். இவளின் அழகு, பேச்சு, குணம் என இவளைக் காதலிக்கத் தூண்டிய காரணங்கள் எவ்வளவோ. அப்போது ஏனோ காதலைச் சொல்லத் துணிவில்லை. சொல்ல நினைத்த அனைத்தையும் டைரியில் எழுதிக்கொட்டிவிடுவேன் என்றைக்காவது அவளுக்கு இதையெல்லாம் படித்துக்காட்டவேண்டும் என்று. ஆனால் அதற்கு சரியான நேரம் வரவில்லை. அது இன்றைக்கு இப்படி சிக்கலில் கொண்டு விட்டது. என்ன ஆகப் போகிறதோ.

“ஏன் எதும் சொல்ல மாட்டேங்குற? பேசு”

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.” இல்ல. அது ஸ்கூல் படிக்கிறப்போ சும்மா எழுதினது.“

“இல்லயே. அதுல நாம யூ.ஜி ஃபர்ஸ்ட் இயர் படிச்ச வரைக்கும் எழுதியிருக்க. அப்புறம் தான் ஏதும் எழுதல’

அப்போ தான் ப்ரேம் வந்துவிட்டானே. அப்புறம் எங்கே எழுதுவது?

‘ தெரில. எங்கிட்ட எதுவும் கேக்காத”

“அது எப்படிங்க சார்? இவ்ளோ நாள் ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு மனசுக்குள்ளே லவ் பண்ணியிருக்கிங்க. நாங்க கேக்கக் கூடாதா? அட் லீஸ்ட் என் கிட்ட சொல்லியிருக்கலாமே “

“சொல்ல தைரியம் வரல. அண்ட் அது சொல்றது தப்புனு தோனுச்சு. அதான். நிஜமா இப்போ அப்படி இல்ல. அந்த ஃபீல் எல்லாம் எப்போவோ போயிடிச்சு. இப்போ நத்திங். “

எழுந்து என்னருகே வந்து உட்கார்ந்தாள்.

“இல்ல. ஃப்ரெண்ட்ஷிப் ப்யூரா இருக்கனும்னு நீ எப்போமே சொல்லிட்டே இருப்ப. அதனால தான் எங்க நான் இத சொல்லி நீ வேண்டானு சொல்லி , நம்ம ஃப்ரெண்ட்ஷிப் ஸ்பாயில் ஆயிடுமோனு தான் சொல்லல” என்றேன்.

“ஆமா. சொன்னேன். ப்யூரிட்டினா என்ன? எந்த தப்பான எண்ணமும் இல்லாம உண்மையான ஃப்ரெண்ஸா இருக்குறது. ஆனா லவ் வரக் கூடாதுனு ஏதாவது இருக்கா என்ன? லவ் தப்பான விஷயம்னு நான் எப்போவாவது சொன்னேனா?”

அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்ததும் அதிர்ந்து போனேன் ,“வாட்??? நீ என்ன சொல்ற?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.