(Reading time: 34 - 68 minutes)

ம்ம்ம்..என்னப் பொருத்த அளவுக்கு ஃப்ரெண்ஸ் எப்போவும் ஃப்ரெண்ஸாவே தான் இருக்கனும். எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேல காதல் வரக் கூடாதுனு சொல்றதெல்லாம் , ஃபுல்ஷிட் . ஏதோ சினிமால வர டைலாக் மாதிரி இருக்கு. அதுல என்ன தப்பு. யாரோ ரெண்டு பேர், திடீர்னு சந்திக்கிறோம். கொஞ்ச நாள்ல ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுப் போய் ஃப்ரெண்ஸ் ஆயிடுறோம். அதே போலத் தானே லவ்வும். அதுவும் ஒரு ஃபீலிங்க் தான். ஒருத்தர பிடிச்சுப் போய் ஃப்ரெண்டா ஏத்துக்கலாம். ஆனா அவங்க மேல லவ் வரக் கூடாதா? எல்லா உணர்வும் உருவாகுறது நேச்சுரல். அத கண்ட்ரோல் பண்ண முடியாது. அது அவசியமும் இல்ல. இயற்கையா இருக்க வரைக்கும் தான் அந்த ரிலேஷன்ஷிப் உண்மை. அதெல்லாத்தையும் மறைச்சுக்கிட்டு போலியா ஃப்ரெண்ஸா நடிக்கிறது தான் தப்பு. அது தான் இம்ப்யூர் ரிலேஷன்ஷிப். நீ உண்மையா இருக்கறதுல எனக்கு எந்த கோபமும் இல்ல. எல்லா ஃப்ரெண்ஸிப்லையும் கொஞ்சம் லவ் இருக்கும். எல்லா லவ்லயும் நிறைய ஃப்ரெண்ஸிப் இருக்கும்.ரெண்டும் ட்வின்ஸ். நம்மள மாதிரி” என்று என்னை நெருங்கி வந்து கட்டிக் கொண்டாள்.

“அப்போ உனக்கு என் மேல கோபம் இல்லயா?”

“இல்லடா. நீ இத சொல்லாம மறைச்சது மட்டும் தான் எனக்கு கோபம். இன் ஃபேக்ட் எனக்கும் அப்படி ஒரு ஃபீலிங்க் உன்மேல இருந்துச்சு. ஆனா நீ நடந்துகிட்டத வச்சு உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லயோனு நெனச்சு நானும் சொல்லல. அப்புறம் ப்ரேம் வந்தான். அவன நம்பினேன். இப்படி ஆயிடுச்சு. ஆனா எப்போவுமே உன் கூட இருக்கும் போது கிடைக்கிற சந்தோஷம் எனக்கு அவன் கூட இருக்கும் போது கிடைக்கல. ஒரு வேளை நீ இல்லாத அந்த ஸ்பேஸ்காகத்தான் என் மனசு அவனப் பிடிச்சுதோ என்னவோ. ரியலி அவனவிட ஐ லவ்ட் யூ மோர்...அத இப்போ தான் ஃபீல் பண்றேன் “

எனக்கு கண்ணீர் அடக்க முடியாமல் வழிந்துவிட்டது. எத்தனை நாட்கள் இவளுக்காக ஏங்கியிருக்கிறேன். இவள் இல்லாத நேரங்கள் எவ்வளவு கடினமாயிருந்திருக்கின்றன. இவள் ப்ரேமோடு இருந்த நாட்களில் எத்தனையோ இரவுகள் அழுது தீர்த்திருக்கிறேன். அத்தனையும் என் முட்டாள்தனத்தால் விளைந்தவை. அன்றே அவளிடம் என் காதலைத் தெரிவித்திருக்க வேண்டும். நானாகவே ஏதோ முடிவு செய்து கொண்டு காதலை மறைத்தது எத்தனை தவறாகப் போய்விட்டது. இவளும் அதே தவறைச் செய்துவிட்டாளே. இருவருமாய்ச் சேர்ந்து இருவரது காதலையும் கொன்றுவிட்டோம். இனியும் நான் ஏமாறத் தயாராக இல்லை. இவளின்றி என்னால் வாழ முடியாது என்பது புரிந்துவிட்ட பிறகும் இனி என்ன தயக்கம்?

“திவ்யா....ஐ லவ் யூ..ஐ ரியலி ல யூ ஸோ மச்”

அவள் என்னையே பார்த்தாள். அவள் பதிலுக்காக காத்திருந்தேன்.

“நோ... அவசரப் படாத டா..இமோஷனலா எந்த முடிவும் எடுக்காத. அது தப்பா போயிடும். இப்பொ ஐ லவ் யூ சொல்ற. நானும் ஒ.கே சொல்லலாம். ஆனா நாளைக்கே உனக்கு நான் ப்ரேம் கூட இருந்தது உனக்கு தப்பாப் படும். அதனால இப்போ என்னால ஏதும் சொல்ல முடியல. அண்ட் காலைல அவனோட லவ்வரா இருந்திட்டு , இப்போ உனக்கு ... நோ. . ஐ ஃபீல் லைக் அ வோர் டா” என்று சொல்லிவிட்டுத் தலைகுனிந்து கொண்டாள்.

அவளுக்கு முன் மண்டியிட்டு அவள் கன்னத்தை இரு கைகளாலும் பற்றிக் கொண்டேன்.

“ஷட் அப்..என்னப் பத்தி உனக்கு அவ்ளோ தான் தெரியுமா? இப்போ தான நீ சொன்ன நேச்சுரலான எமோஷன்ஸ் தான் உண்மை. அத எதுக்காகவும் விட்டுத் தரவோ, மறைக்கவோ கூடாதுனு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் நீ தான் வேணும். அப்புறம் ஏன் அதை மறைக்கப் பார்க்கிற? ப்ளீஸ்..போதும்..நாம ரெண்டு பேரும் இவ்ளோ நாள் கஷ்டப்பட்டது போதும். இனியும் நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.ப்ரேம் கூட இருந்த ரிலேஷன்ஷிப் பத்தி எனக்கு கவலை கிடையாது. ஐ டோன்ட் கேர். எனக்கு நீ வேணும் அவ்ளோ தான்.  டெல் மீ யூ லவ் மீ ப்ளீஸ். .”

நான் சொல்லி முடிக்க அவள் கண்ணீர்த் துளி என் கைகளில் விழுந்தன. இதுவே அவளின் கடைசிக் கண்ணீராக இருக்க வேண்டும்.

ஸோஃபாவிலிருந்து கீழே நழுவினாள். எனக்கு மிக அருகில் அவள். எங்களின் பார்வைகள் ஒன்றாகின.

“ஐ லவ் யூ சோ மச் டா..ஐ லவ் யூ” என்றாள்.

பல ஆண்டுகளாக எங்களுக்குள் ஒளிந்து கிடந்த உணர்வுகள் பிழம்புகளாய் வெடித்துச் சிதறின. அவை காதலாய், கண்ணீராய் ஊற்றெடுத்தன. யாரும் பிரித்துவிடக் கூடாதென்பது போல் இறுகக் கட்டிக் கொண்டோம். இதுவே முதல் முறை அரவணைப்பதைப் போல் ஓர் உணர்வு. ஆம். என் காதலியை அணைப்பது இது தான் முதல் முறை. எங்களுக்குள் எந்தத் தடையுமில்லை. ”இவள் உன் தோழி. காதலிக்காதே” என்று என்னை ஏமாற்றிக்கொண்டிருந்தத அந்தக் குரல் இன்று எங்கோ ஓடித் தொலைந்துவிட்டது. ஆம். இவள் என் தோழி தான் என் காதலியும் தான் என்று அதற்கு பதில் கூற முற்படுகிறேன். ஆனால் அது கேட்கும் தொலைவில் இல்லை. இன்னும் இறுகத் தழுவிக்கொண்டோம்.. எண்ணிலடங்கா முத்தங்களைப் பரிமாறிகொண்டோம்.. இந்த நொடி,இந்தத் தருணம் என் வாழ்வின் ஒரு புதிய அத்யாயத்த்தின் தொடக்கம். ஒரு புது உலகின் பிறப்பு. அங்கே நானும் இவளும் மட்டுமே.  கவலைகள் இல்லை,நெருடல்கள் இல்லை, கேள்விகள் இல்லை,பதில்கள் இல்லை. நானும் அவளும் மட்டுமே. எங்கள் காதல் மட்டுமே.

எவ்வளவு நேரம் அந்த இருளில் அவ்வாறு கட்டியணைத்துக் கொண்டு கிடந்தோமோ தெரியவில்லை. திடீரென இடித்த ஓர் இடிச்சத்தத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினோம். கொட்டும் மழைத்துளிச் சரங்களுக்க்கிடையே தப்பிப் புகுந்த நிலவொளிக்கற்றைகள் அந்த அறைக்கு ஓர் இதமான காதல் ஒளியைத் தூவிக்கொண்டிருந்ததன.

  எழுந்து ஹாலின் பெரிய ஜன்னல் அருகே சென்று நின்றோம்.

அவ்வப்போது பளீரிட்ட மின்னலில் அவள் முகம் அழகாய் ஜொலித்தது. ஏனோ இன்று புதிதாக,அழகாகத் தெரிந்தாள். என் காதலியாக, என் மனைவியாக, எனக்கே முழு உரிமையுடையவளாக... அவளை நெருங்கிச் சென்றேன். வெளியே கை நீட்டி மழைத் துளியோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.  அவள் கன்னத்தோடு என் கன்னத்தை ஒட்டிக் கொண்டு,அவளின் இடையைச் சுற்றி என் கைகளால் வளைத்து அணைத்துக்கொண்டேன்.

“என்னடா பண்ற?” மெலிதாய் அவள் குரலில் கேட்டாள். அந்தக் குரலில் கலந்திருந்த காதலே என்னை என்னென்னவோ செய்யத் தூண்டியது.

மெதுவாய் அவளைத் திருப்பினேன். அவள் கண்களை உற்றுப் பார்த்தேன்.

என் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் விழிகள் தாழ்ந்தன.

என் கைகள் அவள் கூந்தலுக்குள் நுழைந்தன. அவளைப் பற்றி என் அருகே கொண்டு வந்தன. இன்னும் நெருங்கிச் சென்றேன். இருவருக்கும் இடையே ஒரு நூழிலை தூரம் மட்டுமே. கண்களை மூடி மேலும் நெருங்கிச் சென்றேன். அவளும் கண்களை மூடிக்கொண்டாள்.  அவள் மூச்சின் வெப்பம் என் முகத்தில் விழ,

“முன்பே வா,என் அன்பே வா, பூப்பூவாய் பூப்பூவாய்"  என அவளது செல்போன் பாடத் தொடங்கியது.

திடுக்கிட்டோம்.  கண் திறந்த அவள் என்னைக் கண்டு கூசினாள். என் பிடியை விட்டு விருட்டென விலகிச்சென்றாள். இந்த நேரத்தில் ஒலித்த அந்த போனை சபித்துக் கொண்டேன்.

“யார் கால் பண்றாங்க இந்நேரத்துக்கு?” என்றேன்.

“தெரிலையே. போன் துணிக்கு அடில இருக்கு..வந்து தொலைய மாட்டேங்குது"

சில நொடித் தேடலுக்குப் பின் கிடைத்தது. அதை பார்த்த மாத்திரத்தில் அவள் முகம் மாறியது.

"அந்த ராஸ்கல் தான் கால் பண்றான்" என்று சொல்லியபடியே அழைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த சில நொடிகளில் மீண்டும் அழைத்தான். இவள் மீண்டும் துண்டித்தாள்.  அவன் மீண்டும் அழைத்தான்.

“ஹேய்..வெய்ட்..அட்டென்ட் பண்ணு.அவன் என்ன சொல்றானு தான் கேப்போமே" என்றேன்.

“நோ டா. அவன் கூட இனி ஒரு வார்த்தை கூட பேசத் தயாரில்ல" என்றாள்.

“சொல்றதக் கேளு,ஜஸ்ட் ஒன் லாஸ்ட் டைம்"

“ம்ம்ம்"

லவ்ட் ஸ்பீக்கரில் ப்ரேமின் குரல் கரகரப்பாய் ஒலித்தது.

“ஏய் திவ்யா,,எங்க போன நீ? ஐ எம் சோ சாரி. லாஸ்ட் மினிட்ல ப்ளேன் கேன்சல் பண்ண வேண்டிய நிலைமை.”

“ம்ம்ம்"

“கோபமா? சரி ..அத எப்படி சரி பண்றதுனு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ ஒரு செம நியூஸ் சொல்ல போறேன். கேக்குறியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.