(Reading time: 25 - 49 minutes)

றைக்குள் வந்தவன் இவள் எதையும் சொல்லும் முன்

“ஷார்வி உங்களுக்கு ரொம்ப க்ளோஸ்னு தெரியும்” என இவள் எதிர்பார்க்காத இடத்தில் தொடங்கினான் தன் பேச்சை.

‘அப்டின்னா?’

இவள் தன் ஸ்டைலில் ஒரு ஆங்ரி பார்வை பார்க்க

“ஹேய்…அவசரப்பட்டு அப்டி எதுவும் நினச்சுடாத…ஷார்வி எனக்கு தங்கச்சி….” சரண்டர் ஆனான் அவன்.

‘அது….மவனே நீ பொழச்ச…. இருந்தாலும் இப்ப எதுக்கு உன் பாச மலர் படத்த என்ட்ட ஓட்ற…???’ மனசுக்குள் இவள் யோசிக்க

“ஷார்விய என் ஃப்ரென்ட் ஜீவா ரொம்ப நாளா விரும்புறான்,”

சுத்தி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான் அவன்.

‘லவ்வா..?? எவ்ளவு தைரியம் இருந்தா என் ஃப்ரெண்ட உன் ஃப்ரெண்டு சைட் அடிச்சான்னு என்ட்டயே வந்து சொல்லுவே….’ ஏறிய கோபத்தில் எந்த வார்த்தையைக் கொண்டு திட்டினால் ஆப்டா இருக்கும் என இவள் தன் மைன்ட் டிக்க்ஷனரியைப் புரட்டி முடிக்கும் முன்

“ அவன் ரொம்ப நல்ல டைப்,, இப்ப கேரியர்லயும் செட்லாகிட்டான்…ஷார்வி வீட்ல பொண்ணு கேட்டா ஒத்துப்பாங்க தான்…ஆனா அவ விருப்பத்தை கேட்காம போய் அவங்க வீட்ல கல்யாணம் பேசுறது அவனுக்கு சரியா படலை……நீங்கதான் இதுல எப்டியாவது ஹெல்ப் பண்ணனும்….” அவனது ரிக்வெஸ்டில் வினியின் வாயடைத்தான் அந்த நிர்விகன்.

ஷார்விக்கு அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடத் துவங்கி இருப்பது வினிக்குத் தெரியும். காதல் திருமணத்தில் ஷார்விக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது என்றாலும்  அரேஞ்ச்ட் மேரஜை எண்ணியும் உள்ளுக்குள் அவளுக்கும் கொஞ்சம் திகில் தான். வர்றவன் எப்டி இருப்பானோ என்று.

அவளையும் விட அவளுக்காக அதிகமாக பயந்து கொண்டிருக்கிறாள் இவள். எந்த காட்டுமிராண்டி சண்டியர் வந்து வாய்ப்பானோ என்ற பயம். ஆனால் இந்த ஜீவன் ஷார்வி விருப்பம் அறியாமல் அவள் வீட்டை அப்ரோச் செய்யக் கூடாது என எண்ணுகிறான் என்றால் அவள் மனதை மதிக்கிறான் என்றுதானே அர்த்தம்?

அதோடு ரோட் சைட் ரோமியோ மாதிரி ஷார்வி பின்னால சுத்தாமல் டீசண்ட்டா அப்ரோச் செய்றான். அபவ் ஆல் இதுக்காக தனக்கு பொண்ணு பார்க்க வர்ற மாதிரி இவ்ளவு எஃபெர்ட் எடுத்து தூது வர்ற நல்ல ஃப்ரெண்ட்ட வேற வச்சுருக்கான்.

“முதல்ல நான் உங்க ஃப்ரென்ட் ஜீவா பத்தி தெரிஞ்சுக்கனும்….அப்றம் ஷார்விட்ட சொல்றதப் பத்தி பார்க்கலாம்…”

கெத்தாக சொல்லி வைத்தாள். நம்மயும் மதிச்சு ஒருத்தன் ஷார்விய நம்மட்ட பொண்ணு கேட்டு வந்திருக்கானே! அதை மெய்ன்டெய்ன் செய்யனுமே!

ஜீவாவை பற்றி தெரிந்து கொண்டு எல்லாம் திருப்தியாக இருந்தால் அடுத்து ஸ்டெப் எடுக்கலாம் என மனதிற்குள் முடித்துக் கொண்டாள் வினி.

“ஷ்யூர், அப்ப நாளைக்கே நீங்க அவன மீட் பண்ண நான் அரேஞ்ச் பண்றேன்…”

அவனது யோசனைக்கு வேகமாக தலையாட்டிய பின்தான் யோசித்தாள் இவள் அப்பா அதற்கு எப்படி அனுமதிப்பாராம்?

“அது… எங்கவீட்ல இதுக்கெல்லாம் பெர்மிஷன் இருக்காது”

“நாளைக்கு ஜீவா ஆஃபீஸ்ல ஒரு இன்டர்வ்யூ இருக்குது….அத அட்டென் பண்ண வாங்க….உங்க வீட்ல ஒத்துப்பாங்க….இது ஜீவா விசிடிங் கார்ட்….அதுல உள்ள அட்ரெஸ் தான் வென்யூ…10.30 க்கு பார்க்கலாம்….இது என் கார்ட்……இன் கேஸ் எதாவது தேவைனா எனக்கு நீங்க கால் பண்ணலாம்…”

அவனது இந்த ஐடியா வினிக்கும் பிடித்தது. அவன் கொடுத்த கார்டுகளை வாங்கிக் கொண்டாள்.

“ஆனா…இதெல்லாம்… எனக்கு…..” ‘உன்ன பிடிக்கலை’ என ஏனோ முகத்தில் அடித்தாற் போல் சொல்ல இப்பொழுது அவளுக்கு தயக்கமாக இருந்தது.

இவன் நண்பன் ஜீவா ஷார்விக்கு வாழ்க்கைத் துணையானால் மானசீகமாக ஜீவா இவளுக்கு அண்ணனாவான்.

அந்த ஜீவாவின் நண்பனை இவள் முறையாக நடத்தாமல் மூக்குடைத்திருந்தால் அது ஜீவாவிற்கு இவள் மேல் நல்லெண்ணம் வராமல் தடுக்கும்….ஒரு வகையில் அது இவளுக்கும் ஷார்விக்கும் இடையிலான நட்பை பாதிக்குமே….இவளுக்கு ஷார்வியுடனான நட்பு வாழ்க்கைக்கும் வேண்டும்…

 “இதெல்லாம் உங்களுக்கு ?” புருவம் உயர்த்திக் கேள்வியாய்ப் பார்த்தான் அவன்.

“ எனக்கு…. நம்ம…. மேரேஜ் ப்ரபோசல்ல இன்ட்ரெஸ்ட்னு அர்த்தம் கிடையாது…”

“நம்ம மேரேஜா……அத ஈசியா விடுங்க……நான் பார்த்துகிறேன்….”

“ம்” தலையாட்டி வைத்தாள்.

“சி யூ தென்”

“பை”

அவன் வெளியேற, அறைக்கதவை உள்ளுக்குள் பூட்டிவிட்டு உடை மாற்றி மெத்தையில் சென்று விழுந்தாள்.

மனதுக்குள் வரவேண்டிய ‘ஹப்பா’ வுக்கு பதில் அந்த நம்ம மேராஜ் என்ற பதம் என்னத்தையோ செய்து வைத்தது.

அன்று அதன் பின் இவளிடம், இவள் அம்மா அப்பா தம்பி என யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. வீடு முழு மௌன கடலில்.

விடை பெற வந்த ஷார்விதான் இவளிடம் பேசிய ஒரே ஆள்.

“சாப்டு என்ன……சும்மா எதையாவது நினச்சுகிட்டு சாப்டாம இருந்து உடம்ப கெடுத்துக்கிடாத….” என்றுவிட்டுப் போனாள்.

றுநாள் இன்டர்வியூவுக்கு இவள் அனுமதி கேட்க, எதையும் குடையாமல் அனுமதி கொடுத்தார் அப்பா. அம்மா, அப்பா, தம்பி மூவருக்கும் இன்று வொர்க்கிங் டே, ஆக இருந்த இரண்டு காரும் அவர்களுக்கு தேவை. யாரையும் கொண்டு போய் விடுங்கள் என கேட்கும் சூழல் இது அல்ல.   

வீட்டு உறுப்பினர்கள் உடன் வராமல் இவள் இதுவரை தனியாக ப்ரயாணம் செய்திருந்தது பள்ளி கல்லூரி வாகனங்களில் மட்டும் தான். முதன் முறையாக தனியாக ஒரு பயணம். ஆட்டோ எடுக்கலாம் என நினைத்தவள் வேண்டாம் என முடிவு செய்து பேருந்தில் ஏறினாள்.

இவள் ஏறிய நிறுத்தம், டெர்மினஸ் என்பதால் ஜன்னல் ஓரத்து இருக்கை கிடைத்தது இவளுக்கு.  சரியான நிறுத்தத்தில் இறங்க வேண்டுமே என்ற டென்ஷன் முதலில் இருந்தாலும், சற்று நேரத்தில் பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

“ஏம்மா இறங்குமா இதுதான் லாஸ்ட் ஸ்டாப்….” கன்டக்டரின் குரலில் தூக்கி வாரிப் போட எழுந்தவள் “சௌகத் அலி ரோடு….?” கேள்வியாய்  அவரைப் பார்த்தாள்.

“அது போய் அரமணி நேரம் ஆகுது….அடுத்த பஸ் பிடிச்சு திரும்பி போம்மா…” கன்டக்டர் இறங்கிப் போய் விட்டார்.

இறங்கி நின்றாள் வினிதா. இது எந்த இடம் என்றே தெரியவில்லை. எதோ புதிதாக உருவாகும் குடியிருப்பு போலும். தூரத்தில் ரெண்டு வீடு, சற்று அருகில் ஒரு சுடுகாடு….அதிலிருந்து புகை….அவ்ளவுதான்… அவசர அவசரமாக மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள். மொத்த நிறுத்ததிலும் இவளைத் தவிர யாரும் இல்லை.

இந்த பஸ்ஸை தவிர எதுவும் இல்லை. அடுத்த பஸ்ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மெல்ல வீசிக் கொண்டிருந்த காற்று புயலாகி  கடும் மழை இடி மின்னலுடன் இணைந்து கோர தாண்டவமாடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.