(Reading time: 25 - 49 minutes)

ர்ஸோ “சார் இவங்களுக்கு இஞ்செக்ஷன் போடனும்னு சொன்னீங்கன்னா நான் இப்பவே எல் ஓ பி எடுத்துட்டு வீட்டுக்கு போறேன் , போன தடவை இவங்களுக்கு டாக்டர் போட சொன்ன இன்ஜெக்க்ஷனை போடுறதுக்குள்ள அதோட முத டோஸ இவங்க என் தைல இறக்கிட்டாங்க, அடுத்த ஷாட்ட என் ஃப்ரெண்டு முதுகுல….அவ அப்ப வேலைய ரிசைன் பண்ணவதான்….திரும்பி எங்கயும் வேலைக்கு போகலை….எனக்கு இந்த வேலை முக்கியம்….அதான் நான் இந்த ஹாஃஸ்பிட்டல்ல வந்து ஜாய்ன் செய்தேன்…இவங்க ஏரியா இங்க இருந்து ரொம்ப தூரம்னு நினச்சேன்….…..இப்ப நான் ப்ரெக்னன்டா வேற இருக்கேன்….கண்ட இஞ்செக்க்ஷன குத்திக்க முடியாது….” விலாவாரியாக புலம்பினார்.

அவன் இவளை திரும்பிப் பார்ப்பான் என இவள் எதிர்பார்க்கவில்லை. சின்னதே சின்னதாய் ஒரு சிரிப்பு அவன் இதழில்.

 ஈ என இளித்து இவள் சமாளித்து வைத்தாள். ஒரு பக்கம் மானம் காற்றிலேறி கப்பல் தேடினாலும், மறுபக்கம் ஏதோ கொஞ்சம் நிம்மதி. இவள் அவனை அடித்த பின்பு இப்பொழுதுதான் அவன் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு மறைந்திருக்கிறது.

அந்த நர்ஸ் எதுக்கோ வெளியேற…இவனும் அவளும்.

“சாரி….நான் அடிச்சிருக்க கூடாது….அது மேல கை பட்டதும்…சாரி ஹெல்ப் பண்ணத்தான் செய்றீங்கன்னு யோசிக்காம செய்துட்டேன்….”

இவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நான்கு நர்ஸ் உள்ளே வருகிறார்கள்.

“சார் இவங்கல்லாம் பீடியாற்றிக் செக்க்ஷன் ஸ்டாஃப் சார்….ஓடுற குழந்தைங்கள பிடிச்சு வச்சு இஞ்செக்ஷன் போட்டு பழக்கம் இருக்கும்….” இவளிடம் முன்பு குத்து வாங்கிய நர்ஸ் அறிமுகப் படுத்துகிறார்.

ஓ ஊசி இவளுக்குதான்னு நினச்சுட்டார் போல அந்த நர்ஸ்.

“இஞ்செக்ஷன் எனக்கு இல்ல….” இவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த ரூம் லாட்ச்சை போட்டான் அவன்.

‘ஐயோயோயோயோ…..சதி ஆஃப் திஸ் சென்சுரி….ஏமாத்தி கொண்டு வந்து குத்தப் போறானே….’ நெஞ்சு ஓலமிட

“நோஓஓஓஓஓஓ  எனக்கு ஒன்னுமே இல்ல…..” இவ அலற

“இல்லமா உன் கால்ல அடி பட்டுறுக்குது…அந்த தண்ணில வேற நிறைய சாணம்….கண்டிப்பா ஒரு டி டி போடனும்….”

யாரு நின்னு அவன் விளக்கத்தெல்லாம் கேட்கவாம்….? எந்த பக்கம் ஓட…எப்டி இந்த படைக்கு கவ்ண்டர் கொடுக்க…? அறையின் நீள அகலத்தை பார்வையால் அளந்தாள் . உள்ளுக்குள் பி பி தாறுமாறு.

“ஏய் குட்டிப் பொண்ணு…தயவு செய்து இங்க வச்சு ஓடி என் மானத்த வாங்காதயேன் ப்ளீஸ்….” நர்ஸ் அங்க இன்செக்க்ஷனை கை நடுங்க எடுத்துக்கொண்டிருக்க இவள் காதில் கெஞ்சினான் அவன்.

சட்டென உறைக்கிறது…அவன் விசிடிங் கார்டில் இந்த ஹாஸ்பிட்டல் நேம் தான இருந்துச்சு.

அவனை பரிதாபமாக பார்க்கிறாள்.

“உங்க ஹாஸ்பிட்டலா இது?”

ஆமோதிப்பாய் சின்ன தலை அசைப்பு அவனிடம்.

“டி டி க்கு டேப்லெட் இல்லையா உங்கட்ட?”

“………………………”

“சீக்ரமா கண்டு பிடிக்க சொல்லுங்க”

“…………….”

“ப்ச்….இதுக்குத்தான் பயோடெக் எடுக்கேன்…வாக்சினல்லாம் டேப்லட்டாக்க போறேன்னு சொன்னேன்….ஆனா அதுக்கு …….?”

“என்னாச்சு வினி?”  அவன் கேள்வியில் அக்கறை நிறைந்திருந்தது. நாளைக்கே பயோடெக் சீட் பார்த்து அவள சேர்த்துடுவான் போல

“அதுக்கு +2ல பயாலஜில பாஸ் ஆகிருந்தா மட்டும் போதாது அதுக்கு மேலயும் கொஞ்சமாவது மார்க் வாங்கிருக்கனும்னு சொல்லிட்டாங்க…எனக்கும் பயாலஜிக்கும் எப்பவும் சைக்காலஜி ஒத்துப் போகாது…”

அவனுக்கு சிரிப்பு வருகிறதோ?

“ஹலோ எனக்கும் பயாலஜிக்கும் தான் ஒத்துப் போகாது….லாங்குவேஜ் பயாலஜி தவிர மத்த எல்லாத்லயும் நான் சென்டமாக்கும்…”

“தெரியும்” அவன் சொல்ல, இதற்குள் ஒரு நர்ஸ் அவளுக்கு இஞ்செக்க்ஷன் போட்டு முடித்திருந்தாள்.

அந்த இடத்தை இவள்  சின்ன முக சுளிப்புடன் தேய்த்துக் கொண்டாள்.

‘படீர்’

வேற என்ன இவட்ட முன்னால குத்து வாங்கின நர்ஸ் ஃபெயிண்டட்.

அந்த நர்ஸ் மயக்கம் தெளிந்து எழுந்து அவனிடமாக கேட்டார்

“சார் லவ்மேரேஜா சார்….?”

காதில் விழுந்தும் கண்டு கொள்ளாமல், முக்கியமாக திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியே வந்தாள் இவள்.

பின்னால் வந்த அந்த நிர்விகன் இவளுக்கு முன்னால் வந்து நின்ற ஒருவனை அறிமுகப் படுத்தினான்

“வினி இவன் தான் ஜீவா….என் ஃப்ரெண்ட்…”

கை கூப்பி வணக்கம் சொன்னாலும் பார்வையால் ஒரு ஆராய்ச்சி அந்த ஜீவாவை.

‘நம்ம ஷார்ன்ஸ்க்கு ஒகே வா இவன்?’

மழை மீட்பு கதையை டீசண்ட் லெவல்ல ஜீவா விசாரித்து முடிக்கும் போது

இவள் ஜீவாவை கேள்வி கேட்க தொடங்கினாள்.

இடம் அந்த ஹாஸ்பிட்டல்ல ஏதோ ஒரு ரூம்.

இவள் அவனை கேட்ட கேள்விகளில் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தவை கூட மறந்து போயின.

“க்ரிக்கெட் விளையாடுவீங்களா? பாப்பீங்களா?”

“இரெண்டும்”

“டிவில நீங்க க்ரிக்கெட் மேட்ச் பார்த்துகிட்டு இருக்றப்ப உங்க வைஃப் அனிமல் ப்ளனட் பார்க்கனும்னு சொன்னா என்ன செய்வீங்க….?”

இப்டி எல்லா ஆங்கிளிலும் அவனை துருவி துருவி கேள்வி கேட்டவள் முக்கிய கேள்விக்கு வந்தாள்.

“ஷார்விய எப்ப இருந்து தெரியும்…?”

“ஷார்வி அம்மா கேரலின் டீச்சரோட ஸ்டூண்டண்ட்  நான்….அவள சின்னதுல இருந்து தெரியும், பட் காலேஜ் டேஸ்ல இருந்து அவளப் பிடிக்கும்…..நாங்க ஒரே காலேஜ், அவ எனக்கு ஜூனியர், எனக்கு கல்யாணத்துக்கு பார்க்கனும்னு சொன்ன உடனே ஞாபகம் வந்த ஒரே பொண்னு அவ மட்டும் தான்….”

“………………………..”

சின்ன வயசுல இருந்தே தெரியுமாம். ஆனா காலேஜ்லதான் பிடிக்குமாம், இப்பதான் காதலாம்…ஆரம்பத்துல இருந்தே தெரிஞ்சாலும் 6 வயசுல இருந்தே லவ் பண்றேண்னு சொல்ற கேட்டகிரி இல்ல இவன், வெரி டீசண்ட் பெர்சன்….சென்சிபிள் டூ… லவ் மேரேஜ், அரேஞ்ச்ட் மேரேஜ், தெரிஞ்சவங்க கூட நட்க்ற மேரெஜ்…மூனு கேட்டகிரியின் அட்வாண்டெஜும் இவன்ட்ட ஷார்விக்கு இருக்குது, ஆனா எந்த கேட்டகிரி டிசட்வாண்டேஜும் இவன்ட்ட இல்ல. பெஸ்ட் ஃபார் ஷார்வி.

மனம் நிறைந்து போனது வினிதாவிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.