(Reading time: 31 - 61 minutes)

ன்று போகிப் பண்டிகை, கங்காவிற்கு அவள் வீடு ஞாபகம் வந்தது,போகி அன்றே அவள் வீடு களை கட்டி விடும், அவளும் அவள் தங்கையும் சேர்ந்து வாசலில் பெரிய கோலமிட்டு வண்ணமிடுவார்கள், இரண்டு புது ஆடைகள் அவளுக்கும் அவள் தங்கைக்கும் ஒன்று அவள் அப்பா எடுப்பது, இன்னொன்று அவள் சக்தி மாமா எடுப்பது, அவர்கள் வயலில் விளையும் நெல், கரும்பு, காய்கறிகள் இதைப் படைத்து அவர்கள் பொங்கல் கொண்டாடுவார்கள், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும், அதுவும் இது அவளுக்கு முக்கியமான பொங்கல் எப்படி கொண்டாட வேண்டியது, ஆனால் இப்படி இந்த அறையில் உட்கார்ந்து இருக்கிறேன்.

அவளின் எண்ண ஓட்டத்தை கலைக்குமாறு கதவு தட்டப்படும் ஒசைக் கேட்டது.

"யாரது" என்று அழைத்துக் கொண்டே கதவைத் திறந்தால் அங்கே மங்களம் நின்றிருந்தால், அங்கே வேலை செய்பவள்

"கங்கா கண்ணு உன்ன வார்டனம்மா கூட்டியாரச் சொல்லிச்சு, உன்ன பார்க்க யாரோ வந்துருக்காங்க, சீக்கிரம் வா," என்று அழைத்துவிட்டு சென்றுவிட்டால் மங்களம்.

யாராயிருக்கும் என்ற சிந்தனையுடனே வார்டன் அறைக்கு சென்றால் கங்கா.

"வாம்மா கங்கா உன்னைப் பார்க்க உன் கணவர் வந்திருக்காரு, அங்கே விசிடர்ஸ் ரூம்ல வெய்ட் பண்றாரும்மா, போய் பாரு"

"என் கணவரா" (சக்தி மாமாவா, அவர் எப்படி இங்கே?) ஓகே மேம் நா போய் பார்க்கிறேன் "

ஜன்னலோரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி, அந்த அறைக்கு வந்தாள் கங்கா, அரவம் கேட்டு திரும்பினான், பார்த்துவிட்டான் அவன் உயிரை, 6 மாதமாக தேடிக்கொண்டிருந்த அவன் உயிரை, மனதில் ஒரு நிம்மதி, அவனோடு அவள் வாழ விரும்பவில்லை என்றாலும் அவள் கிடைத்துவிட்டால் அதுவே போதும் அவனுக்கு.

"கங்கா எப்படி இருக்க?"

"பார்த்தா தெரியலயா நான் நல்லாத்தான் இருக்கேன், என்னை ஏன் தேடி வந்தீங்க, நான் தான் எதுவும் வேண்டாமென்று வந்துவிட்டேனே?"

"கங்கா எதுவும் வேண்டாம்னு வந்துட்டியே, உன்னோட அம்மாவப்பத்தி யோசிச்சியா, நீ பாட்டுக்கு வந்துட்ட அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?"

"என்ன மாமா சொல்றீங்க ,அம்மாவுக்கு என்ன ஆச்சு?"

"நீ போனதுல இருந்து அவங்க உன்னோட ஞாபகமாவே இருக்காங்க, அடிக்கடி மயக்கமாயிடுறாங்க, இப்படியே இருந்தா பெரிய பிரச்சனை ஆகும்னு டாக்டர் சொல்றாரு, இதெல்லாம் நடக்கனும்னு நினைக்கிறியா"

"இல்ல மாமா அப்படியெல்லாம் சொல்லாதீங்க, எனக்கு உடனே அம்மாவை பார்க்கனும், நான் உடனே வரேன், கொஞ்சம் காத்திருங்க வார்டன் கிட்ட சொல்லிட்டு உடனே புறப்படுறேன்"

"நீ சொல்லிட்டு வா கங்கா நா அதுக்குள்ள மாமாவிற்கு ஃபோனில் உன்ன கூட்டிட்டு வர விஷயத்தை சொல்கிறேன்"

"ம் சரி மாமா"

ல்லையில்லா கோபத்துடன் தன் அத்தை வீட்டிற்குள் நுழைந்தால் நந்தினி, தன் அத்தை பத்மாவை பார்க்கச் சென்றால் அவள்.

"அத்தை உங்கள் மகன் செய்வது நியாயமா இருக்கா"

"என்ன நந்தினி அப்படி என்ன செஞ்சான் என்னோட மகன், ஏன் இப்போ கத்திகிட்டு இருக்க" என்று கேட்டார் பத்மா.

"அந்த கங்கா தான் சக்தி மாமாவோட வாழ பிடிக்காம ஓடிப்போய்ட்டாளே, அப்புறம் எதுக்கு அவள தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர போய் இருக்காரு, நீங்க அத கேக்கமாட்டீங்களா?"

"என்னை என்ன பன்ன சொல்ற? அவன் என்னோட பேச்ச கேட்டு ரொம்ப வருசமாகுது, அவனுக்கு அவன் அக்கா மாமா தான் உலகம் அது உனக்கு தெரியாதா?"

"அவங்களுக்கு அவங்க பொண்ணு தான் முக்கியம், அவ வந்ததும் சக்தி மாமாவ அவக்கூட வாழ வெக்கத்தான் பார்ப்பாங்க, நீங்க அத வேடிக்கை பார்க்கப் போறீங்களா?"

"அவன் அவள கூட்டிட்டு வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம், நீ பதறாத"

"அத்தை, சக்தி மாமா இப்போதாவது எனக்கு கிடைப்பாருனு நான் நம்பிக்கிட்டு இருக்கேன், நான் சக்தி மாமாவை எவ்வளவு விரும்புரேன்னு உங்களுக்கு தெரியாது அத்தை, அதனாலதான் நீங்க சாதாரணமாக பேசிக்கிட்டு இருக்கீங்க."

"சரி சரி எனக்கு புரியது, அவன் வரட்டும் பார்த்துக்கலாம், ஓடி போனவளோட திரும்பி வாழனும்னா நா விட்டுவிடுவேனா,நீ கவலை படாம இரு நந்தினி.

"உங்களத்தான் நம்பி இருக்கேன் அத்தை, நீங்களும் என்னை ஏமாத்திடாதீங்க,

ந்த வீடே ரனகளப் பட்டு கொண்டிருந்தது, வீட்டை ரெண்டாக்கி கொண்டிருந்தார் ஜானகி, இதுவரைக்கும் இல்லாமல் பொங்கலை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தார் அவர்.

"ஜானகி, நீ நேத்து ஹாஸ்பிட்டல்ல இருந்தனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க, எதுக்கு இந்த ஆர்ப்பாட்டமெல்லாம்."

"என்னங்க நீங்க, நம்ம பொண்ணு கிடைச்சுட்டா அவளுக்கு இது தலைப்பொங்கல், அதுக்குத்தான் இந்த ஏற்பாடெல்லாம்."

"கல்யாணமான ரெண்டு நாளிலேயே வீட்டவிட்டு போய்ட்டா, அவளுக்கு சக்திய பிடிக்கலயோ, என்னவோ? அவ வந்ததும் பிரச்சினைய கேட்டு சரிப் பன்னாம தலைப்பொங்கல் கொண்டாடனும்னு சொல்ற"

"நம்ம சக்திய பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? அதுவும் நம்ம கங்காவுக்கு பிடிக்காம இருக்குமா?, அவளுக்கு வேற ஏதோ பிரச்சினை அத நம்மக்கிட்ட சொல்ல தயங்கி வீட்டவிட்டு போய்ட்டா, இன்னைக்கு போகி பண்டிகை, பழசெல்லாம் பேசி தீத்துட்டு, நாளைக்கு அவங்க வாழ்க்கையை புதுசா வாழ ஆரம்பிக்கனும், எனக்கு என்னமோ பிரச்சினை பெருசா இருக்காதுனு தோனுது, தை பிறக்க போற நேரத்துல நம்ம பிள்ளைங்க வாழ்க்கையும் சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க, நீங்க போய் வேலையை பாருங்க."

"நீ சொன்னது மட்டும் நடந்தா, சந்தோஷ பட்ற முதல் ஆளு நானா தான் இருப்பேன் ஜானகி, சரி நம்ம பிள்ளைங்க வரதுக்குள்ள வேலைய முடிப்போம்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.