(Reading time: 31 - 61 minutes)

க்தியும் கங்காவும் அந்த காரில் பயணித்து கொண்டிருந்தார்கள்,அந்த கார் அவர்களின் ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது, அவர்களின் நினைவுகளோ வாழ்க்கையின் பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது சக்திக்கு 12 வயது, அவன் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது அவன் தந்தை இறந்து விட்டதாக கூறி அவனை அழைத்து சென்றார் அவனது அம்மா பத்மா, வழியெல்லாம் அழுது கொண்டே சென்றார் அவர், சக்தியும் அழுது கொண்டிருந்தான்.

அவனுக்கு அவன் அம்மாவை விட அவன் அப்பாவைத் தான் ரொம்ப பிடிக்கும் அதன் காரணம் அவன் அப்பா சாமிநாதன் வீட்டிற்கு ஒரு மாதம் அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறை தான் வருவார், வரும்பொழுதெல்லாம் அவன் கூடத்தான் இருப்பார், அவனுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுப்பார், இங்கேயே இருங்க அப்பா என்று சக்தி கூறினாள், எனக்கு வேலை இருக்கிறது இங்கேயே இருக்கமுடியாது, என்று சமாதானபடுத்திவிடுவார், சக்தியும் அதன்பிறகு அவரை தொல்லை செய்யமாட்டான், மற்ற நாளெல்லாம் அவன் அம்மாவுடன் தான் அவன் இருக்கவேண்டும், பத்மாவின் அண்ணன் குடும்பம் அவர்கள் அருகில் தான் இருக்கிறது, ஆனால் சக்திக்கு அவன் மாமா மூர்த்தியை பிடிக்காது, அவன் அப்பா இருக்கும் சமயத்தில் மட்டும் ஏதாவது காரணம் சொல்லி பணம் வாங்க வருவார், மற்ற சமயத்தில் தன் தங்கையோ தன் தங்கை மகனை பற்றியோ அக்கறை இருக்காது, இதெல்லாம் பத்மாவிற்கு புரியாது அண்ணன் குடும்பத்திற்காக உருகுவார், இப்பொழுது கூட தன் தங்கை கணவன் இறந்த செய்தி அவருக்கு தெரியவில்லை, அவர் மனைவி மற்றும் மகளுடன் அவர் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார், அவர் அம்மா மட்டும் தான் அவனை அழைத்து செல்கிறார், ஆனால் எங்கு என்று சக்திக்கு தெரியவில்லை.

பத்மா,அந்த தோட்டத்துடன் உள்ள பெரிய வீட்டிற்கு சக்தியை அழைத்துச் சென்றார், அப்பாவின் சடலத்தை ஏன் வீட்டிற்கு எடுத்து வரவில்லை, ஏன் இங்கு வைத்திருக்கிறார்கள், இது யார் வீடு? என்ற கேள்விகளுடன் அம்மாவுடன் உள்ளே சென்றான் சக்தி, அப்பாவின் சடலத்தைப் பார்த்து ஓடிப்போய் அப்பா என்று கதறி அழுதான், அதன் பிறகு அங்கு சலசலப்பு ஏற்பட்டது, பத்மாவிடம் அங்கு இருப்பவர்கள் யார் என்று கேள்வி கேட்டார்கள், பத்மா சாமிநாதனுடைய மனைவி, சக்தி அவருடைய மகன் என்றும் அவர்களுக்கு மணமாகி 13 வருடங்கள் ஆகிறது என்றும் கூறினார், அதை அங்கு இருப்பவர்கள் மறுத்தனர், சாமிநாதன் 14 வருடங்களுக்கு முன் தன் மனைவி இறந்த பின் தன் பத்து வயது மகளுக்குகாக மறுமணம் செய்ய மறுத்துவிட்டார், மனைவி இல்லாதபோது ஏன் மறுமணம் செய்தவர் உங்களை மறைத்து வைக்க வேண்டும், நீங்கள் அவர் இறந்ததை வைத்து எங்களை ஏமாற்ற பார்க்கீர்கள், என்று விரட்ட ஆரம்பித்தார்கள், சக்தி அம்மாவிடம் ஒண்டிக் கொண்டான்.

சாமிநாதனின் சடலத்தின் அருகில் இருந்த ஜானகி அவர்கள் அருகில் வந்தாள், பத்மா சொன்னது உண்மை, அவர் தன் அப்பாவின் இரண்டாவது மனைவி, சக்தி தன் தம்பி என்று கூறினால், தனக்காக மறுமணம் செய்ய வேண்டாம் என்று நினைத்த தன் அப்பா ஒரு கட்டாயத்திற்காக இவர்களை திருமணம் செய்யவேண்டியதாயிற்று, இறப்பதற்கு முன் தன்னிடமும் தன் கணவரிடமும் இவ்விஷயத்தை கூறிவிட்டு இறந்ததாக கூறினால், இதை ஜானகியின் கணவன் கேசவனும் ஆமோதித்தான்.

கேசவன் சாமிநாதனின் நண்பனின் மகன், தன் நண்பன் ஒரு விபத்தில் இறந்த பிறகு தன் நண்பன் குடும்பத்திற்கு தன்னாலான உதவிகளை செய்தார் சாமிநாதன், அந்த உதவியை கேசவன் மறந்ததில்லை, சாமிநாதன் தன் விளைநிலங்களை கவனிக்க தன் உதவியை கேட்டப்போது கேசவன் மறுக்காமல் ஒத்துக்கொண்டான், தன் தந்தை இறந்த பிறகு நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயும் இறந்து விட சாமிநாதனின் வலது கையாகி போனான் கேசவன், கேசவனின் பொறுப்பையும், நல்ல குணத்தையும் பார்த்து தன் மருமகனாக்கி கொண்டார் சாமிநாதன். தன் மகள் மற்றும் மருமகனிடமும் பத்மா, சக்தியை பற்றி சொல்ல வேண்டும் என்று சில நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார் சாமிநாதன், இதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற குழப்பத்திலேயே அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது, திடீரென்று வந்த மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமிநாதன் தன் மகள் மருமகனிடம் மறைத்து வைத்திருந்த விஷயத்தை கூறினார், கேசவனும் ஜானகியும் இதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் உடனே பத்மாவையும் சக்தியையும் அழைத்து வருவதாக சொன்னதும் அவர் மனம் நிம்மதி அடைந்தது, உடனே வக்கீலை வரவழைத்து தன் சொத்துக்களை இரண்டு பாகமாக பிரித்து தன் மகள் மற்றும் மகனுக்கு எழுதி வைத்தார். தன் மகன் மற்றும் மனைவியை பார்க்க வேண்டும் என்ற நிராசையுடன் கண்களை மூடினார். கேசவனுக்கும் ஜானகிக்கும் அவர் இறந்த தகவலை அனுப்பத்தான் முடிந்தது. இதை அறிந்த ஊர் மக்கள் பிறகு அமைதியானர், சக்தி தனது தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்தான்.

சாமிநாதனின் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் பேசியது சக்தியின் காதுகளில் விழுந்தது, சக்தியை ஏற்றுக் கொண்ட கேசவன் ஜானகியை சில பேர் புகழ்ந்தார்கள், சில பேர் ஏமாளி என்றனர், இவ்வளவு சொத்தையும் தனியாக அனுபவிக்காமல் சக்தியுடன் பங்கு போட்டுக்கொள்ள ஒத்துக்கொண்டார்க்ளே என்று குறைப்பட்டனர், சக்தி தன் அப்பாவை நினைத்து அழுதுக் கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு ஐந்து வயது சிறுமி அவன் கண்ணீரை துடைத்துவிட்டால், இரண்டு வயது குழந்தை மாமா என்று அவன் மடியில் உட்கார்ந்தது, அவர்கள் இருவரையும் சக்தி வியப்பாக பார்த்தான், அங்கு வந்த ஜானகி இவர்கள் தனது மகள்கள் என்றும், பெரியவள் கங்கா என்றும் சிறியவள் யமுனா என்றும் அறிமுகப்படுத்தினார், சக்திதான் அவர்களுக்கு தாய்மாமன் என்று கூறினார், அவர்கள் இருவரையும் சக்திக்கு பிடித்து விட்டது, அந்த சூழ்நிலையில் தன்னை ஏற்றுக் கொண்ட தன் அக்கா மாமா சக்திக்கு கடவுளாகிப் போனார்கள், அந்த நாளில் இருந்து சக்தி அந்த வீட்டில் ஒருவனாக மாறி போனான், அவர்கள் மீது அவன் உயிரையே வைத்திருந்தான், ஆனால் பத்மாவால் அப்படி இருக்க முடியவில்லை, அவர்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருந்தார், விஷயம் கேள்விப்பட்ட அவர் அண்ணன் மூர்த்தி வந்தப்பிறகும் பத்மாவை அவர்களுடன் ஒட்ட விடவில்லை, அதன் பின் ஒரு வீடு இரண்டாக பிரிந்தது, சக்திக்கு இது பிடிக்கவில்லை தன் தந்தை நினைத்தது போல தன் தாய் நடந்து கொண்டது, அவனுக்கு கோபத்தை வரவழைத்தது, தன் மாமா மூர்த்தியை இன்னும் அதிகமாக பிடிக்காமல் போனது, அம்மா நடந்து கொள்வதுப் பற்றி கவலைப்படால் அவரிடம் மரியாதையாக நடந்துக் கொண்ட அக்கா மாமாவை இன்னும் அதிகமாகப் பிடித்தது, இரவு படுக்க மட்டும் தான் சக்தி அவன் வீட்டிற்கு செல்வான், தனியாக உழைக்கும் அவன் மாமாவைப் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருக்கும், ஓய்வு நாட்களில் கேசவனக்கு சக்தி உதவியாக இருப்பான், விவசாயத்தை பாடமாக ஏற்று படித்து வீட்டின் பொறுப்பை ஏற்று கொண்டான், கங்கா யமுனாவுக்கும் சக்தி முக்கியமானவனாகிப் போனான்.

கங்காவின் மேல் வைத்திருந்த அன்பு காதலாக மாறியது எப்படி என்று சக்திக்கே தெரியவில்லை, அவன் கங்கா மீது அளவில்லா நேசத்தை மனதில் வைத்திருந்தான், ஜானகிக்கும் கேசவனுக்கும் சக்தியை அவர்கள் மருமகனாக்கி கொள்ள ஆசைப்பட்டனர், ஆனால் பத்மாவை நினைத்து அதை வெளிப்படுத்த தயங்கினார்கள், ஆனால் பத்மாவிற்கோ தன் அண்ணன் மகளை சக்திக்கு திருமணம் செய்ய ஆசை, அடிக்கடி விடுமுறைக்கு வந்த நந்தினிக்கும் சக்தியின் மீது காதல், ஆனால் கங்கா யமுனாவைப் போல் சக்திக்கு தன்னிடம் அன்பு இல்லை என்று அவளுக்கு வருத்தம். இது எதுவும் தெரியாத கங்கா இயல்பாக இருந்தாள், சக்தியின் மீது மதிப்பு வைத்திருந்தாள், தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றிருந்தாள்

பிரகாஷ், கங்காவின் தோழி உமாவின் அண்ணன், கங்காவை காதலிப்பவன், அவள் படிப்பு முடிந்ததும் கங்காவிடம் தன் காதலை வெளிப்படுத்தினான், கங்கா தன் தாய் தந்தையருக்கு எது விருப்பமோ அதுதான் தனது விருப்பம் என்று தெரிவித்தாள், பிரகாஷ் தன் வீட்டில் உள்ளவர்களோடு வந்து பெண் கேட்பதாக கூறினான், இந்த விஷயத்தை மறைக்காமல் சக்தியிடம் கூறினால் கங்கா, மனதில் உள்ள காதலை மறைத்து, கங்காவிற்கு ஏற்றவன் பிரகாஷ் தான் என்று முடிவு செய்து அவர்கள் திருமணத்தை செய்ய முடிவு செய்தான், இதைப்பற்றி தன் அக்கா மாமாவிடம் தெரிவித்தான், அவர்கள் சக்திதான் கங்காவை மணக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர், பிரகாஷ் தான் கங்காவிற்கு ஏற்றவன் என்று அவர்களை சமாதானம் செய்து, பெண் கேட்டு வந்த பிரகாஷ் வீட்டோடு பேசி திருமணத்தை முடிவு செய்தான், தன் அண்ணன் மகளை மருமகள் ஆக்க வேண்டும் என்று நினைத்தாலும் தன் மகனின் விருப்பம் என்ன என்று பத்மாவிற்கு தெரியும், தம்பி தம்பி என்று உருகி மகளின் திருமணம் என்றதும் சக்தியை ஏமாற்றி விட்டதாக சக்தியிடம் கூறினார் பத்மா, எதையும் காதில் வாங்காமல் திருமண வேலையில் இறங்கினான் சக்தி, நந்தினியும் கங்காவிற்கு திருமணம் என்றதும் சக்தி மாமா தனக்கு தான் என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.