(Reading time: 31 - 61 minutes)

"பிரகாஷ் எதுக்காக என்ன பார்க்கனும்னு சொன்னீங்க, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமில்ல"

"தெரியும் கங்கா, அதே முகூர்த்தத்தில் உனக்கும் உன்னோட மாமாவுக்கும் கல்யாணம் ஆயிடிச்சுனு கேள்விப்பட்டேன், இதுல உனக்கு சந்தோஷம் தானே?"

"எனக்கு சந்தோஷம் தான் பிரகாஷ், முன்பே நான் சக்தி மாமாவை கல்யாணம் செஞ்சுக்கனும்னு என்னோட அப்பா, அம்மாவுக்கு ஆசை, ஆனால் அதுக்கு முன்னாடி இப்படி நடந்துப் போச்சு, இப்ப அவங்க ஆசை நிறைவேறிடுச்சு, எனக்கும் சக்தி மாமா மாதிரி ஒரு நல்ல கணவர் கிடைக்க மாட்டார், நான் இப்போ ரொம்ப சந்தோஷமாய் இருக்கேன்."

"நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும், நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க தான் வந்தேன், அன்றைக்கு உனக்கு ஒரு இக்கட்டான சூழலை உண்டாக்கிட்டேன், என்னோட அப்பா, அம்மா செய்த காரியத்துக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், நான் இந்த ஊர விட்டு போகப்போறேன், எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல, அதுக்கு முன்னாடி உன்ன பார்த்து மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன், நா வரேன் கங்கா."

"பிரகாஷ் நடந்தது நடந்து போச்சு, அத திரும்ப பேசுவதால் எந்த பயனுமில்லை, யார் மேலயும் எனக்கு எந்த கோபமுமில்லை, பெத்தவங்க நமக்கு நல்லதுதான் செய்வாங்க, முதலில் நீ அவங்கள மன்னிச்சிடு, அப்புறம் மத்தவங்க கிட்ட மன்னிப்பு கேளு, அவங்க மனசை கஷ்டப்படுத்தாதே, நான் சொல்லிக்க நினைச்சது அவ்வளவு தான், நான் வரேன்."

பிரகாஷ்கிட்ட பேசிட்டு நான் திரும்பி வரும்போது, ஒரு பொண்ணு வேகமா கிணத்து பக்கம் போவதை பார்த்தேன், ஏதாவது தப்பா நடக்கபோகுதுனு எனக்கு தோனுச்சு, நான் அவ பின்னாடியே போனென், அதுக்குள்ள அந்த பொண்ணு கிணத்துக்குள்ள குதிக்கப் போச்சு, நான் தடுத்து நிறுத்திட்டேன், அது யாருன்னு பார்த்தா, அது நம்ம நந்தினி, எனக்கு ஒன்னுமே புரியல, நந்தினி ஏன் இப்படி செய்தாள்.

"ஏன் நந்தினி, தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு என்ன நடந்துச்சு, என்ன பிரச்சினை உனக்கு, சொல்லு நந்தினி. "

"எதுக்கு என்னை தடுக்குற, நான் செத்துப் போனா எனக்கு எவ்வளவு நிம்மதி, இப்ப உன்னால எல்லாம் கெட்டுப்போச்சு."

"தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு என்ன பிரச்சினை உனக்கு, யாரால பிரச்சினை, சொல்லு நந்தினி."

"உன்னால தான் பிரச்சினை, அத சொல்றதால இனிமே என்ன பயன், பேசாம என்ன சாக விடு"

"என்னால பிரச்சனையா, என்ன சொல்ற நீ"

"ஆமா உன்னாலத்தான், சக்தி மாமாவை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் பிரச்சினை, நானும் அவரும் காதலிச்சோம், எங்க அத்தைக்கும் நான் அவங்க மருமகளா வருவதில் தான் இஷ்டம், உன்னோட கல்யாணத்திற்கு பிறகு தான் எங்க கல்யாணம்னு சக்தி மாமா சொல்லி இருந்தாரு, ஒரு இக்கட்டான சூழலில் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, இப்போ என்னோட நிலைமை என்ன? அவரோட அக்கா குடும்பம் தான் அவருக்கு முக்கியம், அதுக்காக அவரோட காதலை அவர் தியாகம் பண்ணிட்டாரு, ஆனால் என்னோட நிலைமை என்ன? நான் சாகறத தவிர வேற வழியில்லை."

"நீ சொல்றது உண்மையா நந்தினி" கங்கா அழுதுக் கொண்டே கேட்டாள், "நான் சக்தி மாமாக்கிட்ட இதப்பத்தி பேசறேன் நந்தினி"

"நீ சக்தி மாமாக்கிட்ட பேசினா என்ன நடக்கப் போகுது, அவர் எதுவும் சொல்ல மாட்டாரு, நீ கஷ்டப்படறது அவருக்கு பிடிக்காது, அதனால இல்லைனு தான் சொல்வாரு, அவர்கிட்ட் பேசறதுல ஒரு பயனுமில்லை, நீ எங்க வாழ்க்கையில் இருந்து போனாத்தான் ஒரு வழி பிறக்கும், அது நடக்கப் போறதில்லை, என்ன வாழவும் விடாம, சாகவும் விடாம இப்படியே பண்ணிட்டியே, என் வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ தெரியல" சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டாள், கங்கா அதிர்ச்சியாக அப்படியே நின்றிருந்தாள்.

"அப்போ எனக்கு என்ன செய்யறதுனு தெரியல, மாமா நமக்காக அவரோட காதலை இழந்துட்டாரு, அதப்பத்தி நான் யார்க்கிட்ட பேசறதுனு தெரியல, நந்தினி சொன்ன மாதிரி நான் அவங்க வாழ்க்கையை விட்டு போகனும் அதுதான் நல்லதுனு நினைச்சேன், சக்தி மாமாவுக்கும் நந்தினிக்கும் கல்யாணம் செஞ்சு வைங்க, அதுவரைக்கும் நான் விலகி இருக்கேன் அப்படினு ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு நான் போயிட்டேன்"

"என்ன சக்தி கங்கா சொல்வது உண்மையா?"

"என்னம்மா நீ, நம்ம மாமாவைப் பற்றி உனக்கு தெரியாது? இந்த நந்தினி தான் ஏதோ ப்ளான் பண்ணி இருக்கா, நமக்கு அந்த லெட்டர் கிடைக்காததிலும் அவ தான் காரணமா இருக்கனும்" - யமுனா.

"உங்களுக்கெல்லாம் எல்லாம் தெளிவா ஆகனும்னா, என்னோட வாங்க" சக்தி அவர்களை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான், அங்கே பத்மாவும் நந்தினியும் கூடத்திலே இருந்தார்கள், சக்தி கோபமாக நந்தினியிடம் பேசினான்.

"நந்தினி நீ கங்கா கிட்ட என்னல்லாம் சொல்லி இருக்க, உனக்கு எவ்வளவு தைரியம், அவக்கிட்ட பேசி அனுப்பினது மட்டுமில்லாம அவள பிரகாஷ் கூட பார்த்ததாகவும் எங்க கிட்ட சொல்லியிருக்க, அவள் எழுதின லெட்டரையும் நீ தான் எடுத்திருக்க, ஏன் இப்படியல்லாம் செஞ்ச"

"சக்தி என்ன நடந்தது, ஏன் இப்படி நந்தினிய திட்டிகிட்டு இருக்க?"

"அம்மா உன்னோட அண்ணன் பொண்ணு என்ன செஞ்சு வச்சிருக்கா தெரியுமா? " நடந்தவற்றை தன் அம்மாவிடம் கூறினான்.

"நந்தினி உன்னோட மாமா சொல்வது உண்மையா" பத்மா நந்தினியிடம் கேட்டாள்.

"ஆமா நான் கங்காகிட்ட சொன்னது உண்மை தான், நான் சக்தி மாமாவை காதலிக்கிறேன், ஆனால் கங்கா அவரை காதலிக்கவேயில்லை, சக்தி மாமா கங்காவ காதலிக்கிறாரு, ஆனால் அந்த காதலை மறைத்து பிரகாஷ் கூட கங்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சாரு, ஆனால் மாமாவே கங்காவை கல்யாணம் செய்துக்கட்டாரு, என்னால இதைப் பொறுத்துக்கவே முடியல, காதலிச்ச எனக்கு கிடைக்காம, காதலிக்காத கங்காவுக்கு மாமா கிடைச்சதுல எனக்கு ரொம்ப கோபம்.

அப்போத்தான் கங்கா பிரகாஷ் கூட பேசிகிட்டு இருந்தத பார்த்தேன், அதான் ஒரு நாடகம் போட்டேன், அதுப்படி கங்கா போய்டுவானு நினைச்சேன், அவளும் போய்ட்டா, அப்போ வீட்டுக்கு வந்த நான் அவ எழுதின லெட்டரை பார்த்து கிழிச்சுப்போட்டுட்டேன், அவ பிரகாஷ் கூட போய்ட்டதா நீங்கெல்லாம் நினைத்து கொள்வீங்கனு நான் நினைச்சேன், ஆனால் நான் நினைச்சா மாதிரி எதுவும் நடக்கல"

"பாரத்தீங்களா அம்மா, இவ செஞ்சு வச்சிருக்க காரியத்தை, இவ இப்படி செஞ்சா கங்காவை மறந்துட்டு இவள கல்யாணம் செய்துப்பேன்னு நினைச்சாளா"

"அத்தை நீங்க எனக்கும் சக்தி மாமாவுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறதா சொல்லி இருக்கீங்க, அதை மறந்துடாதீங்க அத்தை"

"ஏய் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் நான் உன்னை கல்யாணம் செஞ்சுப்பேன்னு நினைக்கிறியா, எப்பவும் கங்கா மட்டும் தான் என்னுடைய மனைவி, என் மனசுல கங்காவைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை, அத தெரிஞ்சுக்கோ." அதைக் கேட்டு கங்கா கண் கலங்கி நின்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.