(Reading time: 7 - 13 minutes)

நான் ஆண்களை குறை கூற வில்லை. ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்கிறேன்.

என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார், பெண்மையை உயர்த்தியாக பேசுகுறீரே .... பெண்ணிற்கு எந்த வகையில் நாம் சளைத்து விட்டோம்.. பெண்ணால் செய்ய இயலும் எந்த செயலையும் நம்மாலும் செய்ய இயலும் தானே , என்ன கடவுள் பெண்ணிற்க்கு கொடுத்திருக்கும் பாக்க்யமான பிள்ளையை பெற்றெடுப்பது மட்டுமே நம்மால் செய்ய இயலாது... கடவுள் அந்த அரிய செயலை பெண்ணிடம் ஒப்படைத்து விட்டார்.. என்று

அதற்கு நான் கூறியது என்ன தெரியுமா?...
ம்ம்ம்... அதற்கான விடையை நான் இங்கு உங்களிடமும் கூறுகிறேன்.

கல்லூரியில் பயிலும் மாணவிகள் இருவரும் தேர்வு விடை தாளில் ஒரு போலவே விடை எழுதுகின்றனர். ஆனால், ஒருத்தியை விட மற்றொருத்திக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்குமாயின் , அதற்கு அந்த மாணவியின் வெளியிடும் திறன் தானே காரணமாய் இருந்திருக்கும்...( கரகோஷம்)

அவளது கையெழுத்து அழகாய் இருந்திருக்கலாம். இல்லை, எளிதாக புரியும் படி மிகவும் அற்புதமாக அட்டவணை படுத்தி இருக்கலாம்.

சாதாரண விடை தாளிலிலேயே இவ்வளவு வேறுபாடு காட்டி பார்க்கும் பொழுது, கடவுள்  காரணம் இல்லாமல் பெண்மைக்குள் இந்த தாய்மையை படைத்திருக்கமாட்டான்... என்றேன்.
(கரகோஷம்)

உன்னை விட ஒரு மதிப்பெண் அதிகம் எடுத்தாலும் அவள் தானே முதல் மாணவியாய் வலம் வருகிறாள்.
அது போல இந்த ஒரு கூடுதல் செய்கையால், பெண் மனித வர்க்கத்திற்க்கே உயர்ந்து காண படுகிறாள்.
(கரகோஷம்)

இன்றும் நம் நாட்டில் எத்தனை எத்தனை பெண்கள் எத்துனை துறைகளில் சாதித்து காட்டுகின்றனர். ஆனாலும் எதோ ஒரு மூளையில் ஒரு பெண் தன் கல்வியை இழக்கிறாள். பெண்களை வீட்டிற்குள் முடக்க விடக்கூடாது. பெண் கல்வியை எந்த சமயமும், எந்த நெறியும் தடை விதிக்கவில்லை. பின் எங்கிருந்து வந்தது இந்த " அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்ற பழ மொழி. பெண் கல்வி கற்றால் அவள் வீடே கல்வி பயின்றதற்கு சமமல்லவா...

பெண்களை இகழாதீர். பெண் கல்வியை தடுத்து அவர்களை வீட்டிலேயே முடக்காதீர். பெண்மையை போற்றுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

பெண்ணே உன் எல்லை கோடு வீடல்ல... அதை தாண்டி... தெருவல்ல... அதை தாண்டி.. ஊரல்ல... அதை தாண்டி இந்த உலகமல்ல... அதை தாண்டி... இந்த பிரபஞ்சமே அல்ல ...

அந்த விண்ணையும் தாண்டியதோர் கோடு... அதை மனதில் கொண்டு நீ வாழ்... வெற்றி நிச்சயம் உன் பால்...

என்று கூறி விடை பெறுகிறேன் ... நன்றி , வணக்கம்.
(கரகோஷம்)

பெண்மையை பற்றி அழகாக எடுத்துரைத்த நம் ஆர்.கே. அவர்களுக்கு நம் கல்லூரியின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்... இறுதியாக...

நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

சில மாதங்கள் கழித்து...

ட்ரிங்...ட்ரிங்...

ஹலோ,

ஹலோ , மேம் நான் தமிழ் பேசுறேன் சார் இருக்காங்களா?

ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க... இதோ கூப்டுறேன்.

ஹலோ தமிழ் , ஹவ் ஆர் யூ ?

ஐ அம் ஃபைன் சார்,

ம், சொல்லுங்க தமிழ்

இந்த மந்த்ல நீங்க எப்போ ஃப்ரீ சார்.

ஏன் தமிழ்? எதுவும் ப்ரோக்ராமா? 
எஸ். சார், எங்க டிவி ஷோல தான் சார், மார்னிங்க் போல ஷூட் இருக்கும் சார். அதான் உங்க டேட் கேட்டேன். சொல்லுங்க சார் எந்த டேட் நீங்க ஃப்ரீ...

இந்த மந்த் ஃபுல்லா நா ஃப்ரீ தான் தமிழ், உங்களுக்கு இஷ்டப்பட்ட டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.

என்னாச்சு சார், எதுவும் லாங்க் லீவா?

நோ தமிழ், நா வேலைய ரிசைன் பண்ணிட்டேன்.

ஏன் சார் என்னாச்சு?

மேனேஜிங்க் போஸ்ட்ல பிரபலமான புள்ளிக்கு நெருங்கிய ரிலேஷன்னு சொல்லி ஒரு 25 வயசு பொண்ண ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க, இத்தன வருஷம் காத்திருந்ததுக்கு கை மேல் பலனா இது தானானு தோணுச்சு. அதோட என்ன விட சின்ன வயசு பொண்ணுக்கு கீழ வேலை பார்க்க மனசு ஒத்துக்கல அதான், ரெசிக்னேஷன் கொடுத்திட்டு வந்துட்டேன். இனிமேதான் வேற வேலை தேடனும். சோ, இந்த மந்த்ல எந்த டேட் வேணும்னாலும் ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க தமிழ்.

தமிழ்??? !!!

This is entry #47 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.