(Reading time: 12 - 23 minutes)

ப்ரிசில்லா - கேரளாவில், எர்ணாகுளம் ஊரில் பிறந்தவர். பிறப்பால் மலையாளி என்றாலும், சிறுவயதில் இருந்தே தமிழில் ஆர்வம் அதிகம். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்”னு சொல்லி, தன்னிடமிருந்த கண்ணாடியால் பாதுகாக்கப்பட்ட பழைய, பழுத்த, பாதி கிழிந்த காகிதங்களை எடுத்தார். “இது ப்ரசில்லா தன் கைப்பட எழுதியது” என்று அதை படிக்க ஆரம்பித்தார்.

“அன்று என்னுடைய 21-வது பிறந்தநாள், எப்போதும் போல இல்லாம, இந்த தடவ யூஸ்ஃபுல்லா இருக்கணும்னு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு போனேன். அங்க இருக்குறவங்க எல்லாத்துக்கும் என் கையால சாப்பாடு வாங்கி குடுத்துட்டேன். அப்போ தான் அவர பாத்தேன். அங்க இருக்குற சின்ன குழந்தைங்க எல்லாத்தையும் சிரிக்கவச்சு, வெளையாடிட்டு இருந்தாரு. நானும் கொஞ்ச நேரம் அவங்களோட வெளையாடினேன். அப்போ ஒருத்தரயொருத்தர் அறிமுகம் செஞ்சுகிட்டோம். அவருக்கு, அன்றைக்கு 27-வது பிறந்தநாள். ரெண்டு பேத்துக்கும் ஒரே பிறந்தநாள், அதுனால வர்ற ஈர்ப்பா? அவர் பாசத்துனால வர்ற ஈர்ப்பானு தெரியல, அவரோட நான் ரொம்ப ஈசியா பழகிட்டேன். அங்க இருந்து என்னோட ஹாஸ்டல் வர நானும், அவரும் ஒன்னா தான் வந்தோம். நெறைய பேசுனோம். அந்த நாள என் வாழ்க்கைல மறக்கவே முடியாது. அவரோட நெனப்பாவே இருந்தது. அடுத்து அவர எப்ப பாப்போம்னு தோனிகிட்டே இருந்தது.

ரெண்டு நாள் கழிச்சு, அண்ணா யுனிவேர்சிட்டி ல என்னோட கிளாஸ் முடிச்சுட்டு வெளில வந்தேன். ஒரு சின்ன பையன்கிட்ட பூமிய பத்தி சொல்லிட்டு இருந்தாரு. நான் போய் பேசுனேன். அப்போ அவர் சொன்னாரு, ஒரு மாற்றுதிறனாளி, இல்ல ஒரு அனாதைக்கு அத்தியாவசிய தேவைய பூர்த்தி செய்றதவிட, ஒரு சின்ன பையனுக்கு படிக்க சொல்லிகுடு. படிப்பு சம்மந்தமா உதவி பண்ணு. ஏன்னா, மாற்றுதிறனாளி, அனாதை, ஏழ்மை - இதுலா இல்லாம பண்ணனும்னா, நல்ல கல்வியால மட்டும் தான் முடியும். நான் அவர் கண்ணையே பாத்துட்டு இருந்தேன். அவர் பேச்சுல ஒரு அழுத்தம் இருந்தது. வாழ்க்கைய பத்தி அவரோட எண்ணம் வித்தியாசமா இருந்தது.

அந்த வாரம் ஞாயித்துக்கிழமை, அவர மெரினா பீச்ல பாத்தேன். தனியா உக்காந்து எதையோ யோசிச்சுகிட்டு இருந்தாரு. அவர் கிட்ட பேசும் போது தான் எனக்கு தெரிஞ்சது, “அவர் தனிமை, அவர இயற்கையை பத்தி யோசிக்க வச்சு, அவர வானவியல் வல்லுநரா ஆக்கிருச்சுன்னு”. நான் தனியா இருக்கும் போது கவிதை எழுதுவேன்னு சொன்னேன். என்ன பத்தி ஒரு கவித சொல்லுனு சொன்னாரு.

வாடிய மலரும் வளருதடா - நீ

 வருடிட வாசம் படருதடா,

அன்பும் உன் அடைக்கலம் தேடுதடா,

 பாசம் உன் சுவாசம் ஆகுதடா,

என் மனதோ தனியாய் தவிக்குதடா,

 உன் மனதை துணையாய் கொடுத்திடுடா!!!...

இந்த கவிதை அவர ரொம்ப பாதிச்சது, அவர் அவர பத்தி சொன்னாரு. “பிறப்பிலே நான் ஒரு அனாதை, மதுரைல ஒரு காப்பகம் ல தான் வளர்ந்தேன். எனக்கு 5 வயசு இருக்கும் போது, காப்பகம் ல நடந்த தீ விபத்துல, நானும், என் நண்பன் நித்யனும் மட்டும் தான் உயிர் தப்பினோம். அதுல இருந்து நானும், அவனும் ஒண்ணா இருந்தோம். நாங்க பலநாள் பட்டினியால வாடிருக்கோம், குளிர்ல துடிச்சுருக்கோம் ஆனாலும் ஒண்ணா சந்தோசமா இருந்தோம், எங்களுக்கு அப்போ கஷ்டம்னா என்னனு தெரியாத அளவுக்கு சந்தோசமா இருந்தோம். என் வாழ்க்கைலயே சந்தோசமான காலம்னா அது மட்டும் தான். ஆனா, அடுத்த மூணு வருசத்துல, இயற்கை நித்யனை பறிச்சு, என்ன திரும்பவும் அனாதை ஆக்கிருச்சு” னு கண் கலங்கி என்ன பாத்தார்.

ஒரு நிமிஷம் நான் அப்டியே உறைஞ்சு போய்டேன். அவர் என்ன தொட்டதும், நினைவுக்கு வந்து, “நான் இருக்குறவரைக்கும் நீங்க அனாதையில்லைன்னு சொல்லி, அவர என்னோட அணைச்சுகிட்டு அழுதேன். “எனக்கு யாருமே இல்லனு” அவர் சொன்னப்ப, “உங்களுக்கு நான், அம்மாவா, அப்பாவா, தோழியா, உங்க மனைவியா, எப்பயுமே நான் உங்க கூட இருப்பேன் இது சத்தியம்” னு சொன்னேன். அத கேட்டு, அவர் என்ன பாத்தாரு, “கலங்கிய அவர் கண்கள பாத்து, “இனிமேல் நீங்க எதுக்குமே அழுகக்கூடாது, உன் ப்ரிசில்லா இருக்கா"னு சொன்னேன். கொஞ்ச நேரம் அவர் எதுவும் பேசல, என் கண்ணையே பாத்துட்டு இருந்தவரு, திரும்ப அழுக ஆரம்பிச்சு., “ப்ரிசில்லா”னு என்ன இறுக்கி அணைச்சுகிட்டாரு. அவர் முகத்த என் கைல ஏந்தி, அவர் கண்ணீர தொடச்சு, அவர் நெத்தியில் முத்தமிட்டேன். அவர நான் சந்தோசமா பாத்துக்கணும்னு எனக்குள்ள சத்தியம் பண்ணிகிட்டேன்.

அவர் சின்னவயசுல இருந்து பட்ட கஷ்டத்த என்ட சொன்னாரு. குளிர்ல ரோட்டோரம சுருண்டு கிடந்தது, பசில துடிச்சது. எல்லா நாளும் அன்புக்காக ஏங்கி ஏங்கி தவிச்சு, தூங்காம அழுதது. அவர் சொல்றத கேக்க கேக்க, இயற்கைமேல கோவம் வந்து திட்டினேன். என்கிட்டே இருந்து எல்லாத்தையும் பறிச்சு, எவ்ளோ கஷ்டம் குடுத்தாலும், இயற்கை மட்டும் தான் என்னோட எல்லா நேரமும் இருந்துருக்கு. என்ன திட்டுறதுக்குகூட யாருமே இல்லன்னு நான் எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன் தெரியுமானு அவர் சொல்லும்போது, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.