(Reading time: 12 - 23 minutes)

வர அப்டியே என் மடில படுக்க வச்சேன். அவர் தலைய வருடி விட்டு, “நான் இருக்கேன்”னு சொன்னேன். அதுக்கு அவரு, "எப்பயுமே என்னோட இருப்பியா ப்ரிசில்லா?”னு கேட்டாரு. "நான் உன்ன விட்டு எப்பயும் போகமாட்டேன்டா, இந்த உலகமே அழிஞ்சாலும், உன்னோட தான் இருப்பேன் செல்லம்” னு, அவர் கன்னத கில்லி, முத்தமிட்டேன்

என்னோட வீட்ல நான் நிகிலோட பழகுறது புடிக்கல. ஒரு அனாத, எந்த வேலைக்கும் போகாம, சும்மா ரீசர்ச் னு சுத்திட்டு இருக்குறவன் எங்க மாப்பிள்ளையா, முடியாதுன்னு சொல்லிடாங்க. நான் யார் பேச்சையும் கேக்கல, நிகில கல்யாணம் பண்ணனும்னு உறுதியா இருந்தேன்.

இன்னைக்கு நாங்க கல்யாணம் பண்ண போறோம். “அவர் வாழ்க்கைல கஷ்டப்பட்டதுல போதும், ஒவ்வொரு நாளும் அன்புக்காக ஏங்கி ஏங்கி தவிச்சு, அவர் தூங்காம இருந்ததுல போதும். இனிமேல் அவர் என்னோட மார்பு சூட்டுலேயே தினமும் தூங்கனும். நான் அவரோட அம்பது, அறுபது வருஷம் வாழனும். அவர நான் எப்போதும் கண்கலங்காம பாத்துக்கணும். என்னோட அன்பு அவருக்கு எப்பயுமே தெகட்ற அளவுக்கு கெடைக்கணும்” னு எங்க வாழக்கைய பத்தி பல கற்பனைல இருந்தேன். ஆனா அவர் சொன்னது, எல்லாத்தையுமே நாசமாக்கிருச்சு.

அந்த அதிர்ச்சியான விஷயத்த, அன்னைக்குக் தான் அவர் என்கிட்டே சொன்னாரு, நம்ம பூமியோட சுழற்சி மாறுது, 3 எரி நட்சத்திரம் நம்ம பூமிய நோக்கி வருது. என்னோட கணிப்பு சரினா, நம்ம கிட்ட இருக்குறது இன்னும் 6 ல இருந்து 8 மாசம் தான். யுனிவெர்சிட்டி ஆப் ஹவாய், நியூ மெக்ஸிகோ ஸ்டேட் யுனிவெர்சிட்டி, யுனிவெர்சிட்டி ஆப் டெக்ஸஸ் அட் ஆஸ்டின், இந்த மூணு யூனிவேர்சிட்டிக்கும் இன்ஃபர்மேசன் அனுப்புனேன். அவங்களும் கன்ஃபார்ம் பண்ணிடாங்க. இஸ்ரோ, நாசாக்கு எமெர்ஜென்சி அலெர்ட் அனுப்பிட்டேன் னு அவர் சொல்லிட்டு இருக்கும் போது, அவர இறுக்கி அணைச்சு, “இந்த இயற்க்கை, உங்கள வாழவே விடாத, நான் உங்களோட வாழனும்” என்றேன். என் முகத்தை அவர் நெஞ்சோடு அணைத்து, “என் ப்ரிசில்லாவ என்கிட்டே இருந்து யாராலும்பறிச்சுக்க முடியாது.”னு சொல்லி, என் உச்சந்தலையில் முத்தமிட்டார்.

இதுவரைக்கும் தான் நம்ம கிட்ட இருக்கு. அதுக்கப்பறம் அவங்க எல்லா ஸ்பேஸ் ஆர்கனைசேசனையும் அலெர்ட் பண்ணி, நிகிலும், நாசாவும் சேந்து உருவாக்கின ஸ்பேஸ் ஷட்டிலும், அவர் கால்க்குலேட் பண்ணி ஷட்டல் கிராவிட்டி & ஆன்ட்ரோமேடா கேலக்சியோட ஃபோர்ஸ் ஃபீல்ட க்ரியேட் பண்ணனால தான் நாம இப்போ இந்த அஸ்ட்ரா பிளானெட்ல உயிரோட இருக்கோம். ஆனா இவ்ளோ பண்ண அவங்களால இங்க வரமுடியல. நாம அஸ்ட்ராக்கு வந்து 2070 வருஷம் ஆச்சு. கடைசி பத்து வருசமா பூமிக்கு ட்ரோன்ஸ் அனுப்பி மானிட்டர் பண்ணிட்டு இருக்கோம். பூமில எந்த ஒரு ஜீவராசியும் இல்ல, இனிமேல் பூமில வாழறதுக்கான சாத்தியகூறு ஏதும் இல்ல. நாளைக்கு நம்ம ஷட்டில்ல சில, பூமிய பார்வையிட போகுது. பாக்கனும்னு ஆச இருக்குறவங்க ஹெச்2 ரோபோட் கிட்ட இன்ஃபர்மேசன் சொல்லலாம்”னு பேசி முடிச்சாரு ஹெச். ஓ. ஏ.

ன்று…

“இன்னும் 5 நிமிடத்தில் ஸ்பேஸ் ஷட்டில் பூமியை அடைந்துவிடும். நாம் இறங்க போகும் இடம், இந்தியாவின் தலைநகராக இருந்த டெல்லி, பயணிகள் யாரும் ஷட்டிலை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.” என்று ஹெச்2 ரோபோட் அறிவித்தது. அனைவரின் முகத்திலும் ஒரு பரிதவிப்பு. சத்தமே இல்லாமல், மிக நேர்த்தியாக, எந்த ஒரு சலனமும் இன்றி ஷட்டில், அந்த புழுதி படிந்த டெல்லியில் தரை இறங்கியது. அனைவரும் கண்ணிமைக்காமல் கண்ணாடி திரை வழியே டெல்லியை பார்த்தனர். போர்வை போர்த்தியது போல், புழுதியும், சாம்பலும், பூமியை போர்த்தி இருந்தது.

சரித்திரம் படைத்தது அந்த காவிய காதல். பூமியின் கடைசி காதலும், அஸ்ட்ரா கிரகத்தின் உன்னத காதலுமான நிகில்-ப்ரிசில்லா காதல் உருவான இடத்தையும், நிகில் பிறந்து வளர்ந்த மதுரையையும் பார்க்க ஏக்கத்தோடு காத்திருந்தான் ஜீவா…!!!

விளக்கம்:

கதையின் உயிராக இருக்கும் கவிதை என் நண்பன் (ஆ.ஜீவரத்தினமணி) எழுதியது.- நன்றி.

எழுத்துப்பிழை திருத்தி, வடிவம் கொடுத்தது மட்டுமில்லாமல், கதையை அழகாக்கிய என் தோழிக்கு நன்றி.

ஆன்ட்ரோமேடா - கேலக்சி (விண்மீன் மண்டலம்).

அஸ்ட்ரா - கிரகம்.

கான்றோ - சூரியனை போல் ஒளிக்கதிர்களை வீசும் விண்மீன்.

ஹோவர் போர்டு - பறக்கும் தட்டு.

கூபர்காஃப்ட், க்யூபிகல் ஷாப்ட் - பறக்கும் விமானம்

எஸ்2 - ஸ்பெஷல் ஃபோர்ஸ் ரோபோட்

ஹெச்2 - ஹெல்பர் ரோபோட்

எக்ஸ்2 - எக்ஸ்க்ழுசிவ் (பிரத்தியேகமான) ரோபோட்

ஹெச். ஓ. ஏ - ஹெட் ஆப் அஸ்ட்ரா

பூமியில் ஒரு வருடம், அஸ்ட்ராவில் 15 வருடத்திற்கு சமம். 

This is entry #52 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.