(Reading time: 13 - 26 minutes)

" ங்க பாருமா நீ சின்ன பொண்ணு, இதெல்லாம் ஒரு இனக்கவர்ச்சி.. இந்த வயசுல சகஜம் தான்.. போக போக சரி ஆகிடும்.. உன்னை எதுக்காக உன் அம்மா, அப்பா இந்த காலேஜ்க்கு அனுப்புனாங்களோ அதை மட்டும் பண்ணு.. உன் பெத்தவங்க உன் மேல வச்ச நம்பிக்கையை உடைச்சிடாத.. போ போய் ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு" ன்னு சொல்லிட்டு அவளை நான் திரும்பி கூட பார்க்காம அந்த இடத்தை விட்டு போய்ட்டேன்..

இதே ஒரு பையன் பொண்ணுக்கிட்ட தன்னோட காதலை சொல்லி அது நிராகரிக்கப்பட்டுட்டா, அதன் விளைவு அந்த பொண்ணு சீன் பார்ட்டி, ஓவரா அலட்டிக்கரா, உண்மை காதல்ன்னா இவளுங்க மதிக்க மாட்டாங்க, இப்டிபட்ட பெயர் அந்த பொண்ணுக்கு உருவாக்கிடுவாங்க.. அதை தாண்டியும் சிலர் மோசமா வன்முறைய கையாளுவாங்க.. அந்த பொண்ணை கடத்தறது, ஆசிட் வீசறது, ஏன் கொலை பண்றதுன்னு இப்படி அந்த பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கிடுவாங்க..

அதுக்கு அப்புறம் மறுபடியும் அவ என்னை தொந்தரவு பண்ணலை.. நானும் நம்ம சொன்னதை கேட்டு அந்த பொண்ணு திருந்திடுச்சுன்னு நினைச்சு விட்டுட்டேன்.. என் படிப்பு, என் பார்ட் டைம் வேலைல கவனத்தை செலுத்த ஆரம்பிச்சுட்டேன்.. நான் படிப்பு முடிச்சதும் எனக்கு கன்ஸ்ட்ரக்ஸன் தனியா ஆரம்பிச்சடனும்னு ஒரு குறிக்கோள்.. அதனால படிக்கும்போதே, பார்ட் டைமா ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனில சேர்ந்து  ஒவ்வொரு நிமிசமும் அதுலயே என்னை நான் அர்ப்பணிச்சேன்.. 

அடிக்கடி அவளை எங்கயாவது பார்க்கும் போது கூட இது எதேச்சையா நடக்கறது.. அவ தான் நம்மளை மறுபடியும் எதும் தொந்தரவு பண்ணலையே..  இதுல அவ தப்பு என்ன இருக்குன்னு நான் அமைதியா போய்டுவேன்..

என் ஃப்ரண்ட்ஸ் அடிக்கடி அவளை பத்தி ஏதோ சொல்ல வருவாங்க.. நான் அவனுங்களை மொறைச்சிட்டு, ஒழுங்கா படிங்கடான்னு சொல்லிட்டு போய்டுவேன்.. நான் அப்போ அவனுங்க சொல்ல வந்ததை கேட்காம போனது தப்புன்னு ஒருநாள் தெரிஞ்சுகிட்டேன்..  அது என் காலேஜ் கடைசி வருடம் கடைசி நாள்..

ஃபேர்வெல் பார்ட்டி எல்லாம் முடிஞ்சு நானும், என் ஃப்ரண்ட்ஸ் எங்க மலரும் நினைவுகளை பேசிக்கிட்டு இருக்கும் போது தான் அவ வந்தா...

Excuse Me ன்னு குரல் கேட்டு எவ அவ எஃபெக்ட்டோட திரும்பி பார்த்தா நிக்கறது தியாவும், அவ 4 ஃப்ரண்ட்ஸூம்..

நான் " என்ன விஷயம்..? "

"இப்போ நான் ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது.. நல்லது எது கெட்டது எதுன்னு அலசி, ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கற வயசும், பக்குவமும் இப்போ எனக்கு வந்திடுச்சு.. இப்போ என்னோடது உண்மையான காதல் ஏத்துக்குவியா..?  என்ன இன்னும் உயரம் தான் வளரலை.. உங்க தோளுக்கிட்ட வருவேன்.. இது உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க, நம்ம கல்யாணத்துக்கு மேடையில நிக்கும் போது ஹீல்ஸ் போட்டு சமாளிச்சுகிறேன்" அப்படின்னு சொன்னா பாருங்க.. நான் மட்டும் இல்ல என் ஃப்ரண்ட்ஸ், அவ ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

எல்லோரையும் பார்த்து, "நிறுத்துங்க, என்னோட காதல், அதை அவங்க 4 வருஷமா ஏத்துக்காம இப்படி நான் அவங்க எங்க போனாலும் அவங்க பின்னாடியே போறது உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கா..?  அவங்களுக்கு தான் தெரியாது, அவங்க கனவு சிவில், கட்டிடம் அதை தவிர வேற எதுமே கண்ணுக்கு தெரியாது.. உங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு..? நான் நினைக்கிறேன் கல், மண் இதுலேயே ஊறி போய்ட்டாங்க உங்க ஃப்ரண்ட்.. அதான் அவங்களுக்கு என்னோட மனசு தெரியலைன்னு சொல்லிட்டு கோபமா போய்ட்டா.. என்னை அவ அடிச்சிருந்தா கூட அந்த வலி இருந்திருக்காது.. அத்தனை கோபத்திலயும் என்னை ஒரு வார்த்தை கூட மரியாதை குறைவா அவ பேசலை..

அப்புறம் தான் என்னோட, அவளோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.. அவளுக்கு உதவி பண்ண இங்க 4 பேர்.. அங்க 4 பேர்.. நான் எங்க போறேன், என்ன சாப்பிடறேன், எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்ன கலர் ட்ரெஸ் போட்ருக்கேன்னு இப்டி என்னை பத்தி எல்லா தகவலும் உடனுக்குடன் அவளுக்கு போய்ருக்கு.. இதுல என்ன காமெடின்னா எங்களை சேர்த்து வைக்கிறோம், ப்ளான் போடறோம்னு சொல்லிக்கிட்டு இதுங்க லவ்வர்ஸ் ஆகிடுச்சுங்க... என்ன கொடுமை ...?

நான் காலேஜ் தவிர எங்க போனாலும் என்னை பின் தொடர்ந்தே அவ என்னை பார்த்திட்டே இருந்திருக்கா என்னோட நிழல் மாதிரி..  ஒரு பொண்ணால இந்த அளவு காதல் பண்ண முடியுமா என்ன..?

நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போது தியா மறுபடியும் வந்தா.. எங்கிட்ட வந்து சிரிச்சுக்கிட்டே, "நான் கோபமா பேசிட்டு போனதால நான் மாறிடுவேன்னோ, திருந்திடுவேன்னோ நினைச்சிடாத..  நீ எங்க போனாலும் நான் உன்னை தொடர்ந்திட்டே தான் இருப்பேன்.. உனக்கு நான் தான்.. என் கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாதுன்னு சொல்லிட்டு.. எனக்கு நீங்கன்னு சொன்னா அது ரொம்ப தூரமா இருக்கற மாதிரி, உன் கிட்ட இருந்து என்னை பிரிக்கற மாதிரி தோணுது.. அதனால, இனிமே நீ என் கனவுல வரும் போதும் சரி, நேருல பார்க்கும் போதும் சரி நீ, வா ன்னு தான் சொல்லுவேன்.. ஆனால் எப்பவும் போன்னு மட்டும் சொல்ல மாட்டேன்.. வரட்டா மாம்ஸ்..? அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டா.. அப்ப எனக்குள்ள ஒரு வித்தியாசமான உணர்வு.. இவளோட இருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுச்சு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.