(Reading time: 18 - 36 minutes)

லி சஞ்சு…” என்றவளின் கண்கள், ஆளை விழுங்கும் அளவு விரிந்தது.

அந்த விழி வீச்சில் தொபுக்கடீர் என்று குதித்தவன்,... “ச்சே… எலிக்கா இந்த டான்ஸ் ஆடின…! பட் அந்த எலிக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும் மியா… காலையில் தேவியின் தரிசனம்” விஷமமாக சொன்னவன், தலையில் ‘நங்’ கென்று குட்டினாள்.

“ஸ்ஸ்ஸ்… வலிக்குது  ராட்சஸி.”

“நீங்க அந்த எலியை மொதல்ல பிடிங்க.”

“பிடிக்கலாம் பிடிக்கலாம்… மொதல்ல மாமாக்கு சூடா ஒரு காஃபி குடுப்பியாம்.”

“நோ… நான் தனியா சமையலறைக்குள்ள போக மாட்டேன்.”

“போச்சுடா… இப்போ இதை சாக்கா வெச்சு, நீ சூடா  குடுக்கற அந்த பிரவுன் தண்ணிக்கும் ஆப்பா…?”

இந்த முறை அவனைக் கிள்ளியவள்,... அவனை கட்டிலில் இருந்து இழுத்தாள்.

“ஸ்ஸ்ஸ்… ஆஆ… வரேன்… இரு…” என்று அவளோடு கிட்செனுக்குள் நுழைந்தான்.

பேசி ஒலிக்க, ஆபிசில் இருந்து வந்த அழைப்பை ஏற்றவன்,... அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு,... சில உத்தரவுகளை பிறப்பித்தான்.

“மியா… எமெர்ஜென்சி… உடனே கிளம்பணும்…” பார்வையை அறையுள் சுழற்றியவன்,... “இங்க எலி எதுவும் இல்ல… நீ பார்த்துக்கோ…” என்று குளிக்கச்  சென்றான்.

அவனுக்கு குடிக்க காப்பியும், அப்படியே டிஃபனுக்கு ப்ரெட் ஆம்லெட்டும்  போட்டவள்,... ஜீப்பில் ஆபீஸ் செல்லும் போது சாப்பிடட்டும், என்று அதை பேக் செய்து வைத்தாள்.

“மியா செல்லம்… நான் வர நேரமாகலாம். பார்க்கை ஒட்டி இருக்க கிராமத்துல ஒரு புலி நடமாடுதாம். யாருக்கும் உயிர், பொருள், சேதாரம் இல்லாம அதை பத்திரமா பிடிக்கணும்.”

“என்ன புலியா… நீங்க அங்கெல்லாம் போக வேணாம்.” கண்களில் மிரட்சியோடு சொன்னவளை, அணைத்தவன்,...

“மியா குட்டி… இது என் வேலைடா… இதெல்லாம் பத்தி நல்லாத் தெரிஞ்சவ, புதுசா என்ன இப்படி பேசற…? அதெல்லாம் பயப்பட ஒண்ணுமில்ல… நைட் பார்க்கலாம்.”

“இந்த எலி…”

“மியா ம்மா… உனக்கு பயமா இருந்தா பக்கத்து வீட்டு வனஜா அக்காவை உதவிக்கு கூப்பிட்டுக்கோ… பை செல்லம்…” என்று கிளம்பினான் சஞ்சய்.

ன் டிஃபன் தட்டைக் கையோடு எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து, கணினியை இயக்கியவளுக்கு, நெட் கனெக்ட் ஆகவில்லை என்றவுடன் எரிச்சலானது.

ஊரை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்த  வன இலாக்கா குவார்டர்சில் வசிப்பவர்களுக்கு, நெட் சிக்னல் சரியாக கிடைக்காதது பெரும் பிரச்சனையாக  இருந்தது. அதுவாக சில நேரம் சிக்னல் நன்றாக இருக்கும். அப்போது, தான் பிரவுசிங், தன் வீட்டுக்கு ஸ்கைப் அழைப்பு, ப்ளாக் வேலை எல்லாம் செய்வாள் சௌமியா.

இதனாலேயே ஆஃப்லைனில் தேவையான கட்டுரையை டைப் செய்து வைத்து விடுவாள். வாரத்தில் இரு நாட்கள் நெட் இருக்கும் நேரமாக பார்த்து, தன் பதிவை வலைப்பூவில் ஏற்றுவாள். சிக்னல் கிடைக்கவும், சிறிது நேரம் தன் அம்மாவுடன் கதை பேசியவள்,... அதன் பின் வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

ரவு எட்டு மணிக்கு, டியூட்டி முடிந்து, குவார்ட்டர்ஸ் திரும்பிய சஞ்சய், தன் வீட்டு முன் கூட்டம் இருப்பதைக் கண்டு பதறி, வேகமாக ஜீப்பில் இருந்து இறங்கினான்.

கூட்டத்தை விலக்கி சென்றவன்,... கையில் தோசைக் கரண்டியுடன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மியாவைக் கண்டு நிம்மதி மூச்சை விட்டான். அவனைக் கண்டவுடன் மற்றவர்கள் கலைந்து செல்ல,... பக்கத்து குவார்ட்டர்சில் வசிக்கும், அங்குள்ள மற்றொரு தமிழரான வாசுதேவன் தான் பேசினார்.

“சமையல் ரூம்ல ஒரு எலியைப் பார்த்து பயந்து, உங்க வீட்டம்மா போட்ட கூச்சலைக் கேட்டு, நாங்கெல்லாம் ‘என்னவோ, ஏதோன்னு’ ஓடியாந்தோம் சார். வேற ஒண்ணுமில்ல… உள்ள செக் பண்ணிட்டேன். எலி எதுவும் கண்ல படலை. பொறி வெச்சு பிடிச்சுடுங்க.”

‘ஆஹா… வேலை பிசியில, எலிப்பொறி வாங்க மறந்துட்டோமே…’ என்று சௌமியாவை பார்த்தான். அவளோ, உர்ரென்று அந்த தோசைக் கரண்டியை  சுழற்றினாள்.

“இந்நேரத்துக்கு எங்க போய் எலிப்பொறி வாங்க வாசு சார்… நாளைக்கு வாங்கி வெச்சுடறேன்.”

“இருங்க சார்… எங்க வீட்ல ஒண்ணு இருக்கணும்” என்றவர், வீட்டுக்குள் போக,...

“தேங்க்ஸ் க்கா…” என்று வாசுவின் மனைவிக்கு நன்றி சொன்னான் சஞ்சய்.

“பரவாயில்ல தம்பி… சௌமிக்கு இதெல்லாம் புதுசில்ல. போகப் போக எல்லாம் பழகிடும், அப்புறம் வீட்டுக்குள்ள பாம்பு வந்தாக் கூட, அசராம இருப்பாங்க.”

“என்ன பாம்பா…!” என்று சௌமியா மிரள,...

“இல்ல டா… அக்கா, சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றாங்க” என்று அவள் தோளை ஆதரவாகப்  பற்றினான்.

“இந்தாங்க சார்” என்று வாசுதேவன் கொடுத்தது, அலிபாபா காலத்து பழைய மாடல் மரப் பொறியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.