(Reading time: 18 - 36 minutes)

றந்து டேபிள் மேல் வைத்து விட்டு போன ப்ரெட் பாக்கட்டை கடித்து, நாசனம் செய்து வைத்து இருந்தது எலி.

‘அச்சோ…’ என்று தலையில் கை வைத்து பாவமான முகத்தை மியா முன் காட்டினான்.

“பெரிய ஃபாரஸ்ட் ஆபீசர்… ஒரு எலியை ஒழுங்கா பிடிக்க முடியலை…! உங்களை நம்பி அந்த புலி பிடிக்கற வேலை கொடுத்து இருக்க, உங்க டிபார்ட்மெண்டை என்ன சொல்ல…?”

தன் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்து, கன்னாபின்னாவென திட்டிக் கொண்டே டேபிளை சுத்தம் செய்தவளை, ‘தேமே…’ என்று பார்த்தான்.

“முழியைப் பாரு… ஆந்தை முழி…”

“பூனைக் குட்டி… உன் மாம்ஸை நீ திட்றது கூட அழகுடா செல்லு…”

“கையை எடுங்க… இங்க பாருங்க… உங்களுக்கு ஒரு நாள் டைம் தரேன். அதுக்குள்ள நீங்க எலியை பிடிக்கலையோ,… அப்புறம் இந்த மியா என்ன பண்ணுவான்னு உங்களுக்கு தெரியும்…! ஒரு முறை முடிவெடுத்துட்டா,… என் பேச்சை நானே கேட்க மாட்டேன், என் கையும் கேட்காது…! வீட்ல ஒரு எலியைக் கூட பிடிக்க முடியாத ஃபாரஸ்ட் ஆபீசர்ன்னு உங்களை பத்தி ப்ளாக்ல எழுதிடுவேன்.”

“அய்யய்யோ…” அலறிய சஞ்சய்… “கூல் டா… மியா செல்ஸ்… பட்டுக் குட்டி… வேணாம்டா… உன் மாம்ஸ் மானம் போயிடும்.”

“அப்போ ஒழுங்கா எலியை பிடிங்க.”

“கட்டிப் பிடிங்க… கட்டிப் பிடிங்கன்னு... சொன்னா சுலபமா பண்ணிடலாம்…! எலியை பிடிக்க சொல்றாளே... செல்ல ராட்சஸி.” முனகியவனுக்கு தீப் பார்வை பரிசாக கிடைத்தது.

ஆபீசில் இருந்து புலியை பற்றிய அழைப்பு வர,... மற்றதெல்லாம் மறந்து வேலைக்கு கிளம்பி சென்றான்.

ரவு பதினொரு மணிக்கு வீட்டுக்கு களைத்து, ஓய்ந்து திரும்பினான் சஞ்சய்.

“இந்தப் பாலைக் குடிங்க… பல்லு விளக்கிட்டு படுங்க…”

“காலையிலேயே விளக்கிட்டேன்” என்று, காலி கோப்பையை நீட்டியவனை மியா முறைக்க,.. சஞ்சய்யோ படுத்த நொடி உறங்கி விட்டான்.

போன் அலற,... அதை காதுக்கு கொடுத்த சஞ்சய்,... “டேய் பக்கி… உன்னை எல்லாம் ஃபிரெண்டுன்னு சொல்லவே வெக்கமா இருக்கு டா…”

‘இப்போ என்ன ஆச்சுன்னு இந்த ரகு இப்படிக் கத்தறான்...?’ மனதில் நினைத்தவனாக,

“முதல்ல விஷயத்தை சொல்லுடா மங்கி” என்றவனிடன்,...

“ம்ம்… ஏண்டா உனக்கு ஐ. ஃஎப். எஸ்ல என்ன ட்ரைனிங் கொடுத்தாங்க…? வீட்ல  ஒரு எலி பிடிக்க முடியாம தடுமாறுறியாம்… பாவம் சௌமி… ரொம்ப ஃபீல் பண்றா…!”

‘ஐயோ மிய்யா… ஒரு நாள் கெடு முடிஞ்சவுடனே, என் மானத்தை நெட்ல ஏத்திட்டாளா…’ என்று மனதில் அலறியவன்,... உடனே முகநூலை இயக்கினான்.

‘வீட்ல எலி வெளியே புலி…’ தலைப்பில் அவளுடைய ப்ளாக் போஸ்டுக்கு சஞ்சய்யை மட்டுமல்லாது, அவள் அண்ணனை, அவன் அம்மாவை, அவனின் நெருங்கிய நண்பர்களை என்று பலரை அவள் டேக் (tag) செய்த படியால், எல்லோரின் நண்பர்களும் சரமாரியாக லைக்ஸ், கமெண்ட் போட்டு தாக்கி இருந்தனர்.

மியா…” என்று அலறியவன்,... அடித்துப்பிடித்து வேகமாக எழ,... இருட்டான அறையும், தன் மீது வாகாக கால் போட்டிருந்த சௌமியாவையும் பார்த்து, “ச்சே… கனவா…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் சஞ்சய்.

“ஒரு நிமிஷம் கலங்கியே போயிட்டேன்… இந்த குட்டி பிசாசு பண்ணாலும் பண்ணிடுவா… எதுக்கு வம்பு…?” என்று நடு இரவு இரண்டு மணிக்கு தூக்கத்தை தியாகம் செய்து, மெல்ல எழுந்து வந்தான் சஞ்சய்.

அந்த எலிப் பொறியை தேடி எடுத்து செட் செய்து வைத்தவன்,... ‘இதை நம்பினால் வேலைக்கு ஆகாது’ என்று கணினியை  ஆன் செய்தான். அவன் நல்ல நேரம் இன்டர்நெட் கனெக்க்ஷன் இருந்தது.

‘எலிகளைக் கொல்லும் மருந்தை வாங்கலாமா’ என்று யோசித்தவனுள் இருந்த இளகிய மனம்… ‘வேண்டாம்…’ என்று முடிவு செய்ய,... உடனே அமேசான் வலைத்தளம் போனவன், புது ரக எலிப்பொறிகளுக்கு ஆர்டர் கொடுத்தான்.

‘ஷப்பா… இந்த இடத்தோட பெரிய இம்சை டா…’ என்று நினைத்தான். ஆம்… அவன் தங்கியிருக்கும் பகுதிக்கு நேரடி டெலிவரி கிடைக்காது. நைனிடாலில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு வருமாறு ஏற்பாடு செய்தான்.

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் இது வந்தா தேவலை” என்று சோம்பல் முறித்தவன்,... சூடாக எதாவது குடிக்கலாம் என்று சமையல் கட்டுக்குள் போக,... கண்களை கசக்கி கொண்டு, கொட்டாவி விட்டவாறே வந்த சௌமியா,...

“என்ன ஆச்சு சஞ்சு…”

“ஒண்ணுமில்ல  செல்லம்…’

“புலி மாட்டிக்கிச்சுன்னு சொன்னீங்க. ஆபீஸ்ல இருந்து கால் வந்துச்சா… திரும்ப ப்ராப்லமா…?”

“செல்லு குட்டி… என் சக்கரைக் கட்டி… இந்த மாமனோட கண்ணு இல்ல.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.