(Reading time: 18 - 36 minutes)

ந்த மிஸ்டர் வேண்டாமே..ரொம்ப ஓல்டா இருக்குற ஃபீல் வருது என்றான் பாவமாய்…புன்னகை தவிர எந்த பதிலும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாய் இருந்தது ஹரிக்கு..சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்தவனுக்கு மனதெல்லாம் ஒரே குழப்பம்,என்ன எதிர் பார்க்கிறேன் அவளிடம்..என் மனம் அவளை கண்டதில் இருந்து ஒரு நிலையில் இல்லையே,.என்று தவித்து கொண்டிருந்தான்..வெகுநேர விழிப்பிற்கு பின் அதிகாலையில் கண்ணயர்ந்தான்..

காலையில் எழுந்து கடிகாரத்தை பார்த்தவன் அடித்து பிடித்து எழுந்தான்,மணி மதியம் 12..குளித்து முடித்து வெளியில் வந்தவனுக்கு அவர்களின் பேச்சுக்குரல் கேட்டது,

ஏன்டி ஒரு வயசு பொண்ணு மாறியா இருக்க,எப்ப பாரு எதாவது வேலை செஞ்சுடே இருக்க இல்ல புத்தகமும் கையுமா உக்காந்துர வீக்கெண்ட் கூட இப்டி டார்ச்சர் பண்ணாதடி..-ஐஷூ

வயசு பொண்ணுனா வேல பார்க்க கூடாதுநு இருக்கா டா..எனக்கு இது புடிச்சிருக்கு செய்ரேன் அவ்ளோதான் என்றாள் நிதானமாய்..-மீனு

உன்னயெல்லாம் திருத்தவே முடியாது என்று சலித்து திரும்பியவள் தமையனை கண்டு ஆர்பரித்தாள்..டேய் அண்ணா எப்டி இருக்க..எப்பவும் கோழி கூவுரதுக்கு முன்னாடி எழுந்து உக்காந்து டார்ச்சர் பண்ணுவ அதிசயமா இவ்ளோ நேரம் தூங்கிருக்க..

ஏய் வாலு நா நல்லா இருக்கேன்..புது இடம் இல்ல அதான் தூங்க லேட் ஆய்டுச்சு என்றான் மீனுவை நோட்டமிட்ட படியே..

சரி சரி வா அண்ணா சாப்டு உன்ட நிறைய பேசனும்..மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அண்ணணும் தங்கையும் பல கதைகளை பேச, வேலை இருப்பதாக கூறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மீனு…

அண்ணா நாளைக்கு நீ ஃபீரியா எங்கயாவது ஔட்டிங் போலாமா எனக்கு ரொம்ப போர் அடிக்குது என்றாள் ஐஷூ..போலாம்டா திங்கட்கிழமை தான் எனக்கு ட்ரெய்னிங் ஸ்டார்ட் ஆகுது..அந்நேரம் வெளியில் வந்த மீனுவின் காதுகளில் விழுமாறு தன் அண்ணனிடம் சரிண்ணா நாளைக்கு நீ நா மீனு ஔட்டிங் பொய்ட்டு லஞ்ச் வெளில சாப்ட்டு வந்துருவோம் என்று கத்தினாள்..அதை கேட்டவளோ ஒன்றுமே கூறாது அறைக்கு சென்றுவிட்டாள்..

ஹரி,என்ன ஐஷூ மா அவங்க விருப்பத்தை கேட்ருக்கலாம்ல..பாவம் என்ன நினைச்சாங்களோ என்றான் பூட்டியிருந்த அறையை வெறித்தவாறே…

அண்ணா அவள்ட்ட கேட்டுட்டு போனும் நு நெனச்சா நாம இங்கேயே இருக்க வேண்டியதுதான்..பார்க்க தான் ணா அவ சின்ன பொண்ணு மனசளவுள அ வ ஒரு சாமியார் என்றாள் தோழியின் நினைவில் மூழ்கியபடி..தங்கையின் வாயிலாக அவளைப்பற்றி கேட்டு அறிந்தவனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் புறம் சாய்வதை ஏனோ தடுக்க முடியவில்லை..

ன்றைய பொழுது இவ்வாறாக கழிய தன் அறையில் படுத்திருந்த ஹரியின் நினைவுகளோ மீனுவையே சுற்றி வந்தது..அடுத்து வந்த கைப்பேசி அழைப்பில் சுயநினைவிற்கு வந்தவன் திரையில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து விட்டு பேச தொடங்கினான் உற்சாகமாய்,சொல்லுடா மாமா பையா என்ன இந்த நேரத்துல ஃபோன் பண்ணிருக்க என்ன விஷயம் என்றான்..

ஹாய்டா ஹரி சின்ன சர்பரைஸ்,ஐ அம் ஆன் தி வே டு சென்னை மார்னிங் அங்க இருப்பேன்..பட் ஐஷூட்ட சொல்லாத..

என்ன சார் ப்ரபோஸ் பண்ண வரீங்களா- ஹரி..

ம்ம்ம் ஆமா டா,.பட் ரொம்ப டென்ஷனா இருக்குடா என்று புலம்பி கொண்டே தனது எண்ணத்தை கூறிக் கொண்டிருந்தான் ஜகா..

திகாலைப்பொழுது எப்போதும் போல அருமையாய் விடிந்தது..நண்பனை வரவேற்க நேரத்தோடு கிளம்பி தன் அறையை விட்டு வெளியில் வந்தவன் கையில் காபியோடு எதிரே நின்ற மீனுவின் மீது   மோதி கொண்டான்..எதிர்பாராத ந்த நிகழ்வில் சற்று தடுமாறித்தான் போனாள் மீனு..

ஹரியின் நிலையோ,தலைக்கு குளித்து தலையில் கட்டிய துண்டும்,தழைய தழைய கட்டிய புடவையும்,நெற்றியில் இட்ட சிறு விபூதி கீற்றுமாய் நின்றவள் அவனை ஒரு விதமான மோன நிலைக்கு கொண்டு சென்றிருந்தாள்..முதலில் மீண்டு வந்தது மீனுவே..

சாரி ஐஷூ உங்களை 5:30 கு எழுப்பி விட சொன்னா அதான்,.என்று தரையை பார்த்தவாறே கூறி முடித்தாள்..ஆனால் எதிர்புறம் அமைதியாக இருக்கவும் சற்றே பயத்தோடடு நிமிர்ந்தவள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனை மிரட்சியாய் பார்த்து மறுபடியும் சாரி என்று கூறினாள் சற்றே உயர்ந்த குரலில்..

நடப்புலகிற்கு வந்தவன் அவள் கையில் இருந்த காபியை வாங்கி பருகிய படியே நிதானமாக கூறினான்,சாரி எல்லாம் வேண்டாம் ஆனால் இப்ப இடிச்சதுக்கு தண்டனை கண்டிப்பா உண்டு என்று கூறி நிறுத்தினான்..ஆயுள் முழுதும் நீதான் எனக்கு காபி தரனும் என்றபடி சுவரில் சாய்ந்து நின்றான்..அதிர்ச்சியில் சிலையென நின்றாள் மீனு…

வாய்திறந்து அவள் ஏதோ சொல்ல தொடங்கும் முன் வாசலில் கதவு தட்டபடும் ஓசை கேட்டது..அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை திறக்க சென்றாள்..நீ இரு நான் பார்க்கிறேன் என்றபடி அவளை தாண்டி சென்றான்..அழைப்பு ஒருமைக்கு மாறியதை கண்டு அவனை முறைத்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.