(Reading time: 12 - 24 minutes)

சந்தியோட அம்மாவுக்கு இடதுகால்மூட்டுல அடி.ரெண்டு  பேருக்குமே இம்மீடியட்டா, ஆப்பரேஷன் பண்ணனும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

இவர்""வாசு''  ""என்னோட பியான்சி அடுத்தமாதம் எங்க கல்யாணம் நிச்சயதார்த்தமெல்லாம் முடிஞ்சுபோச்சு.'' ""வாசு, இவர் பிரசாந்த்

""ஹலோ'' நான் பிரசாந்த். பிரசாந்த் ஆப்  மார்பல்ஸ் அன்ட் டைல்ஸ். ஈசியார்ல ஷோரூம் வச்சிருக்கேன்.

""வசந்தி, பிரசாந்த் என்று சொந்தக்காரர் இருப்பதாகச் சொல்லவே இல்லை? அதைவிடு'', நீ இவரோட பைக்கிலை வந்ததை நான் எங்க ஆபிசு முனையிலிருக்கிற டீக்கடை வாசல்லருந்து பார்த்தேன். நான் வேற சிந்தனையில் உங்களை கவனிக்கல, போன், லஞ்ச்பாக்ஸ் எல்லாம் பேங்க் அலமாரிக்குள்ள  வச்சுட்டு வர்ற'' அவசரத்துல...... வெறுங்கையோட வந்துட்டேன். ""இவருதான் அப்பா, அம்மாவை இந்த ஆஸ்பத்திரியில  சேர்த்து நேரா பேங்க்கிற்கு வந்து என்னை அழைச்சிட்டு வந்தார்.

ஆஸ்பத்திரில  இருந்தாவது ஒரு போன் அடிச்சிருக்கலாமில்ல. பிரசாந்த் இடைமறித்து' , சார், அவங்க அப்பா'' அன்கான்சியஸ் அவங்க அம்மா'', வசந்தியோட பேங்க்''அட்ரஸ்குடுத்திட்டு மயக்கமாயிட்டாங்க. நான் இவங்களைக்கூட்டிட்டு வந்தப்ப"" ஸ்கேன் பார்த்த டாக்டர்ஸ் இரண்டுபேருக்குமே உடனே ஆப்ரே-ன் பண்ணனம்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சி ஆபரே-ன் நடந்ததுக்கிட்டிருக்கு.

நர்ஸ் ஒருத்தி ""வசந்தி ஒங்க அம்மா கண் முழிச்சிட்டாங்க. போயிப்பாருங்க.

''""அம்மா''

""வசந்தி, அப்பா எப்படியிருக்காங்க பாத்தியா?''

""பின்னால் நின்ற பிரசாந்த் சொன்னான்.''அவர் நல்லா இருக்கார். உங்களுக்கு எப்படி இருக்கு?

""அம்மா, இரண்டு கைகளையும் கூப்பி'' கடவுள் மாதிரி வந்து.... காப்பத்திட்டிங்க. நன்றி தம்பி.""வாசு, வாங்க வாங்க... இவரைத்தான்....

""தெரியும் வசந்தியோட வருங்காலக்கணவர்.''

அதற்குள் உள்ளே வந்த டாக்டர்கபிரியேல், பிரசாந்த் சார். எம்டி டாக்டர் சேகர் உங்களைக் கூப்பிடுகிறார்..வாசுவும்ட அறைக்கு வெளியே வந்து, அவனுடைய அப்பா, அம்மா, தங்கை வித்யாவை சத்யா கிளினிக்கிற்குவரச் சொல்லி  போன் செய்தான்.

எம்டிசேகர் பிரசாந்திடம்"",டேய் இது என்னா? சைன் பண்ணி ப்ளாங்க் ""செக்''கைக் கொடுத்திருக்கே? டாக்டர் கபிரியேல் எவ்வளவு""டெபாசிட்''பண்ணச்சொன்னார்?

""ஐந்துலட்சம்''அதுவே அதிகம். இதில் மூன்று லட்சம்னு எழுது? போதும்! வாசு, பக்கத்திலிருந்ததால் அவன் காதில் அவர்கள் பேசுவது தெளிவாய்க் கேட்டது.""டேய்,சேகர், மேஜருக்கு மேஜர் ஆப்பரஷேன்னு சொன்ன?

ஆமாம் மூளையில ரத்தம் கட்டி இருக்கு அடிமூளைலருந்து""ஹிப்போதலாமஸ் இங்கே, கை விரல்களால் தன் அடிமூளைப்பாகத்தைதொட்டு விளக்கினான். அடிமூளையிலிருந்து ரத்தங்கசியுது. அப்பல்லோநியூராலசிஸ்ட்  சுப்புராவ்தான் இப்ப அந்த கசிவை அடைக்க போராடிக்கிட்டிருக்கார். லெட்ஸ்ஹோப் பார்தபெஸ்ட்.

""சேகர், பாவம், வசந்தி ஒரே பொண்ணாம்.இதோ, மிஸ்டர் வாசு. இவரோடதான் கல்யாணம் முடிவு பண்ணிருக்கு.''

மெளனமாய் இருந்தவாசு,""எவ்வளவு செலவாகும்?

வாசுவின் பின்னால் வசந்தியும் நிற்பதையாரும் கவனிக்கவில்லை. ""பிராசந்த் இருக்கான். எல்லாருக்கும் ஆபத பாந்தவன். நானெல்லாம் தாத்தா, அப்பா சம்பாதிச்சதை வச்சு பிசினஸ் பண்றவன். பிரசாந்த்  சுயம்பு அவங்க அப்பா பத்துவயசுல மலேரியாவுல போயிட்டார். அம்மாகூட இந்த பாண்டிச்சேரி கடற்கரையில முறுக்க சுண்டல் வித்து குடும்பத்தையும் காப்பத்தினான். படிக்கவும் செஞ்சான். அதுவும்பெட்டிசெமினார் பள்ளில. எனக்கு கணக்குல வீக் என் தங்கை சுமிதாவுக்கு எல்லா சப்ஜெக்ட்டும் வீக் இவன்தான் எங்க ட்யூட்டர். கிளாஸ் பஸ்ட். டாக்டருக்கு என்ஜினியருக்கெல்லாம் படிக்க செலவாகும்னு கரெஸ்பான்ட் கோர்சுல பிகாம் படிச்சார்.''இப்ப செய்யற மார்பல்ஸ் கடைல. பார்ட்டைம் சேர்ந்தான். மக்கன்லால் சேட் ஒருகோடி ரூபாய் கடனைவச்சுட்டு நெஞ்சிவலி வந்து போயிட்டாரு. பிரசாந்த் இடைமறித்து"", நீ  இப்ப  எதுக்கு என்னுடைய சுயசரியதை எல்லாம் எடுத்துவுடறே?''

வசந்தியும் வாசுவுடன் சேர்ந்து நின்று கொண்டாள். வசந்தி கேட்டாள். அப்புறம்? பிரசாந்த்தோட ஒரு தம்பி சுந்தர் டாக்டர். தங்கை வாசுகி கம்ப்யூட்டர் என்ஜினியர்.சேட்டோட ஒரேமகள் ரோகினி எம்பிஏ. கல்யாணம் முடிஞ்சதும்  ராஜஸ்தானுக்கே போயிட்டாங்க.கடனை அடைச்சு அந்தக்கம்பெனியை இவரே வாங்கிகிட்டார். சேட்டம்மாவும் பத்துபெர்சண்ட்பார்ட்னர் இப்ப. ""கல்யாணம்''? தம்பி தங்கை, சேட் பொண்ணு எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வச்சது இவந்தான். என்னோட மகளுக்கு ஐந்து வயது. அவள்பெரியவளாகி இப்பவே 33 வயசாகிவிட்ட இவரைக் கட்டிப்பாளாம். காத்டிதருக்கிறார்.''

""பெரிய பிரசங்கமே பண்ணிட்டியாடா பொறம்போக்கு''. ""வா இவங்க அப்பா, அம்மாவைப்பார்போம்.

'' அப்பாவைப் பார்த்திட்டேன். டாக்டர் சுப்பாராவ்,""எல்லாம் சரியாப் போயிடும். அட்லீஸ்ட் மூணுமாசம் ஹஸ்பிட்டல்லதான் இருக்கணும்னு சொல்றார். அப்பா இன்னும் முழிக்கல ''என்று முடித்தாள். 

""சரிடா, சேகர்,உன்னோட ஹாஸ்பிட்டல்ல ஆகும் முழு செலவும் என்னுடையது.""வாசு, வசந்தி, நாளைக்கு வந்து பார்க்கிறேன்''. 

""ஞ்ச்'' சாப்பிட்டியா?'' ""ம். கிளினிக் கேண்ட்டீன்ல தயிர்ச்சாதம் வாங்கி கொடுத்தார் பிரசாந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.