(Reading time: 12 - 24 minutes)

வாசுவின்  அப்பா, அம்மா, தங்கை மூவரும் வந்து பார்த்து விட்டுப்போயினர். ''என்னா, வாசு இப்பிடி ஆகிருச்சே. கல்யாண நேரத்தில் அபசகுணம் மாதிரி'' என்று ஆரம்பித்த அம்மாவை வாசு அடக்கினான்.

""அவள் சொல்றதுல என்னடா தப்பு? ''பார்க்கப் பாவமாகத் தான் இருக்கு. ஆனா அந்தப் பொண்ணோட அப்பா எப்ப சரியாகிறது? வாசு கல்யாணம் எப்படிமுடியறது? இவங்க குடுக்கிற ஐம்பது லட்சம் வரதட்சணை உனது தங்கையோட கல்யாணச் செலவுக்கு கை கொடுக்குமேன்னு நினைச்சோம்.''என்றார் அப்பா.

""அதுல தான் மண்ணுவிழுந்திருச்சே. சரிவாங்க வீட்டுலே  போயிப்பேசி முடிவு பண்ணலாம்."" என்றாள் வாசுவின் அம்மா மறுநாள் வாசு போன் பண்ணினான்.அவளுடைய புத்தம் புதுக்காலை ரிங் டோனும் அவளுடைய கீச்சுக்குரலும் அவனுக்கு பிடித்திருந்தது.

""உங்கப்பா எப்படி இருக்கிறார்? முன்னேற்றம் இருக்கு. பேசல,''டேக், கேர்'' என்று சொல்லி வைத்துவிட்டான்

அம்மாவையும்,அப்பாவையும் இரவு பகலாகப் பார்த்துக் கொள்வதென்று  முடிவெடுத்து நீண்ட விடுமுறை எடுத்திருந்தாள்.   ஒருவாரம் மட்டும் வாசு, மாலை நேரம் வந்து அரைமணி நேரம் அவளோடு பேசிக்கிட்டு இருந்தான். ஒரு நாள், ''குடும்பத்துடன் காசி ,பத்திரிநாத்,ஹரித்துவார் புனிதயாத்திரை செல்வதாய் சொல்லிப் போனான்''.

டாக்டர் சேகர்,""பிரத்யேகமாகக் கவனித்துக் கொள்ள அப்பாவுக்கு, அம்மாவுக்கும் தனி நர்சுகளை நியமித்தான்.

பிரசாந்த் காலையில் வந்து வசந்தியின் அம்மாவிடம் பேசுவான். வீட்டிற்குப்போய்விட்டு""ப்ரஷ்''ஆகிவாருங்கள். என்று அனுப்பி விடுவான். மதியம் அவனுடைய ஆஸ்பிட்டல் கேண்டினில் அவளுடன் சேர்ந்து சாப்பிடுவான்.அம்மாவை டிட்டஸசார்ஜ் செய்து அனுப்பிய பின்தான் ஒருமாதம் ஆகிப்போனதென்று வசந்திக்கே ஞாபகம் வந்தது. வசந்தியின் மாமா மகள் சாந்தி மாதக் கோடை விடுமுறையில் வந்துதங்கினாள் அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ்   மூன்றாம் ஆண்டு மாணவி. வசந்திக்கு மதியம்,இரவு நேரத்திற்கு மருந்து மாத்திரை கொடுப்பது வசந்திக்கு மதியம், இரவு மருத்துவமனைக்கு  சாப்பாடு அனுப்புவது என்று எல்லாவற்றையும்  பார்த்துக் கொண்டாள். வசந்தியின் அப்பா பேசிய முதல் வார்த்தையே ""வசந்தி யம்மா'' தான். இரண்டாம் மாதத்தில் ஹார்லிக்ஸ், ஜீஸ் எல்லாம் குடிக்கத் தொடங்கியிருந்தார்.

ஒருமுறை வந்த டாக்டர் சுப்பாராவ்""நல்ல முன்னேற்றம்'' டேக்ஹிம் ஹோம்''அடுத்த மாதம் இரண்டாந்தேதி  கொண்டுவாங்க ஒரு செக்கப்,""ஓகே''என்று சொல்லிப் போனார்.

வாசு, அவன் அப்பா,அம்மா,தங்கை ஒருமுறை  வந்து அம்மாவைப் பார்க்க வந்தார்கள். பேச்சுவாக்கில் வசந்தியின் அம்மாவிடம் வாசுவின் அம்மா, ""உடம்பை பாத்துக்கங்க  எல்லாங் கடவுள் பாத்துக்குவான். ஜோசியர் இந்தக் கல்யாணம் இப்ப வேணாம்ணு சொல்லிட்டார். அதனாலே..... 

""பரவாயில்லைங்க ''என்று வசந்தியின் மாமா மகள் சாந்தி அவர்களை வழியனுப்பி வைத்தாள். வசந்தியின்  மாமன் மகளும் மார்க்கெட் போயிருந்த சமயம் பிரசாந்த் வந்திருந்தான். வசந்தியின் அம்மாவுக்கு பிரசாந்திடம் பேசுவது மிகவும் பிடித்திருந்தது. அவனுடைய பிசினஸ், உறவுகள் பற்றி எல்லாம் கேட்பாள். அவனும் மறைக்காமல் உண்மையைச் சொல்வான்.

""கார் வைத்துக்கொண்டே எங்கள் ஆக்சிடென்ட் தினத்தன்று ஏன் பைக்கில் போனாய்?''சேகர் கேட்டான்.

""கார்,சர்வீஸ்க்கு போயிருந்தது.''அதுதான்

வசந்தி. அப்பாவை டிஸ் சார்ஜ் செய்த நாளில்,? மொத்தம் எவ்வளவு செலவாகிவிட்டது?'' என்று ரிசப்சனில் கேட்டாள்.

""சாரி,மெம்  எம்டிகிட்ட கேளுங்க.''

எம்டி  டாக்டர் சொன்னான்,'' இதோபாருங்க, பிரசாந்த்தோட பிளாங்க் செக், ராஸ்கல் கையில் கொடுத்தா வாங்கமாட்டேன்னு கூரியர்ல அனுப்பியிருந்தான். பொறம் போக்கு,

''நான்,""பெரிய கடன்காரன்''

""மேடம் , பிரசாந்த்கிட்ட நாம எல்லோரும் கடன் பட்டுக்கிட்டேதான் இருப்போம். கடவுள் கடனைக் கூடத் திருப்பிக் கொடுத்திடலாம்.'' ஆனால்....

""புத்தம் புதுக்காலை''

அவள் அப்பா இங்க என்னோட கார்ல காத்திக்கிட்டு இருக்காரு வாங்க போகலாம்.''

""அவருதான், டாக்டர்''ஸ்பீக்கர்போனை ஆன்செய்தாள்

ஏன், உள்ளவரமாட்டாராம்மா?

''சப்தம் போடாதே. ஈவின்ங் சவன் ஒங்க வீட்டுக்கு வர்றேன்.

""சரிடா''

""பை'' ""

வசந்தியின் அப்பா சொன்னார்'',வரும் ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டில் விருந்து, நீங்களும் டாக்டர் குடும்பமும், லஞ்ச்,

""ஆமா,எல்லாரும் மிலிட்டரிதானே''.

""ஆமாங்க சார் , நாங்க சைவம் இல்ல. மிலிட்டரிதான்""வருகிறேன் வசந்தி''.

""வாருங்கள்''வசந்தி மட்டும் சப்தமாகவே சொன்னாள், கோரஸாய்'' காத்திருக்கிறோம்'' என்றார்கள்

""சரி காத்திருங்கள் என்று சொல்லி காரை ஸ்டார்ட் செய்தான் 

காரை மெதுவாக ஓட்டுங்கள்'' என்றாள் வசந்தி.

""சரி'', என்றான்.

அவனுடைய மொபைல் சிணுங்கியது''. ""புத்தம் புதுக்காலை.'' ரிங்க்டோன்.

பிரசாந்த் ஸ்பீக்கிங் என்றான்.

வசந்தி அவனது கண் அவளையும், கார்க்கண்ணாடியையும் மாறி மாறிப் பார்ப்பதைக் கவனித்தாள்.""சீயு என்று கை காட்டினான்''''சீயு ஒன்லி என்று வசந்தி  சொல்ல நினைத்தாள். அவளுக்கு. கன்னம் சிவந்தவளாய் வீட்டுப் படிகளை இரண்டு இரண்டாய்த்தாவி ஏறி  அவள் அறைக்குப் போனாள். 

This is entry #86 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.