(Reading time: 16 - 31 minutes)

 “ ங்க இருக்கிற அந்த ஹோம்க்கு சாப்பாடு கொண்டு வந்தேன்…தப்பு என் பேர்லதான்…. யோசிக்காம செர்வ் செய்ய யாரையும் கூப்டாம வந்துட்டேன்…..உங்க ரிதா மேடம் தான் ஹெல்ப் பண்ணாங்க…. என்னால தான் அவங்க லேட்டா கிளம்ப வேண்டியதாகிட்டா…. இந்த ரோட்ல அவங்க தனியா போக வேண்டி இருக்குமேன்னு கூட வந்தேன்….சாரி உங்களை தப்பா நினச்சுட்டேன்….” வரிசையாய் எல்லாரோடும் கை குலுக்கி முடிக்கும் போது சொல்லி முடித்திருந்தான்….

ரிதாவுக்கு மட்டும் நோ ஹேண்ட் ஷேக்….. நல்லது… என நினைத்துக் கொண்டாள் இவள்.

“சாரி நாங்களும் தப்பா நினச்சுகிட்டோம் ரூபன் சார்…” ரிதா டீம் இப்போ ஈஈஈஈஈஈஈஈஈ

அடுத்து இவர்கள் கிளம்பி வந்துவிட்டார்கள்.

ரவு ரிதாவுக்கு ஃபோன்…. AK  என்றது ஸ்க்ரீன்….அவளது அக்கா அனுக்ரகா….

“Happy Birth Day  டி பெரிய மனுஷி……வீட்டுக்கு வான்னா வந்துடாத….ஃபோன் செய்தா எடுத்துடாத…” என ஆரம்பித்தாள் அவள்….அக்கா காலை காலையிலிருந்து இவள் மிஸ்ஸிங்…..இவ திருப்பி கூப்டுறப்பல்லாம் அவ நம்பர் பிஸி…..

“சாரி சின்ன பொண்ணு…. என் செல்ல துப்பாக்கி காலை வேணும்னே மிஃஸ் செய்வனா….நான் கூப்டப்பல்லாம் அத்தான்ட்ட நீ அராசிஸ்  அவிச்சு வறுத்துட்டு இருந்தியா…” இவள் தொடர

“ஏய் வாலு….உங்க அத்தான் என்ட்ட கடலை போடுற ஆளாடி…. அவருக்கு அதுக்குத்தான் நேரமிருக்காமா….வர வர உன் வாய் நீண்டுகிட்டே போகுது…..யார என்ன பேசனும்னு இல்ல…” என ரிதா எதிர் பார்த்தமாதிரியே அக்கா கூலாகிநாலும்

“சரி பேச்சை மாத்தாத…..நாளைக்கு நைட் டின்னர் பார்பிக்யூ நேஷன்ல.. வந்து சேர்ந்திடு “ என மீண்டுமாய் ஒரு அதட்டல் தொனிக்கு வந்திருந்தாள்…

அதாவது ரிதா வரமாட்டேன்னு சொல்லிடுவாளோ என அக்காவுக்கு பயம்… அதனால் இவள் மறுக்க வாய்ப்பு தராமல் மிரட்டினாள்.

இன்றைய அலைச்சலுக்கு இவளுக்கு நாளை நன்றாக படுத்து தூங்க வேண்டும் போல் இருக்கிறதுதான்….ஆனால் பாவம் அக்கா என்றுமிருக்கிறது……

சென்னையிலதான் அனுக்ரகா வீடும்…. அதுவும் மாமனார் மாமியார் என கூட்டு குடும்பம் கூட இல்லை….அக்கா அத்தான் ஆதவ் அண்ட் ரெண்டு குட்டீஸ் அவ்வளவே…. அந்த அத்தான் இவளுக்கு சொந்த அண்ணா மாதிரிதான்…அப்டித்தான் இப்ப வரை இவள உணர வச்சுறுக்காங்க……ஆனாலும் ஏனோ இவளுக்கு அங்கு தங்கி இருக்க விருப்பம் இல்லை…

சென்னையில் வேலை என்றானதும்….ஹாஸ்டல்தான் என மொட்டை பிடிவாதமாய் முடித்துவிட்டாள் ரிதா…. அதை அவள் அக்கா அப்பப்ப சொல்லி புலம்புவாள்….

அதோட இன்னைக்கு  அக்கா வீட்டிலிருந்து ஆஃபீஸ் கிளம்பி வர கஷ்டம் என அங்கு போகவில்லை இவள்….நாளை சனிக் கிழமை….ஆஃப்…. இப்பவும் வரலைனு சொல்ல இவளுக்கு மனமில்லை….

“சரி வர்றேன் துப்பாக்கி…. ” சம்மதம் சொன்னாள் ரிதா…

று நாள் இரவு ஹோட்டலில் ஆரம்பித்த  சில நிமிடங்களிலிலேயே டாபிக் இவளுக்கு பிடிக்காத இடத்துக்கு வந்திருந்தது……மேரேஜ்….

“நீ ஏன் ரிதா கல்யாணம்னா இவ்ளவு கடி ஆகுற……நியாப்படி பையன் தான பதறனும்….. பாரு பன்னென்டு மணிக்கு வந்தாலும் பையனுக்கும் பதி நாதருக்கும் பானிப்பட் போர் வெடிச்சுடக் கூடாதுன்ற பயத்துல பம்மி வந்து கதவ திறக்கிற மம்மிய விட்டுட்டு… ஒன்போதரைக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒரு மணி நேரம் மூஞ்ச தூக்கி வச்சு காயப்போட்டு…எந்த டிசைன்ல எப்டி கால்ல விழுந்தாலும் கவுர மாட்டேன்னு கம்ளய்ண்ட ஓபன் ஸ்டேடஸ்லயே வச்சுறுக்கப் போற ஒய்ஃப்ட்ட வந்து அவந்தான மாட்றான்….” அத்தான் ஆதவ் டாபிக்கை கிண்டலாகவே நகர்த்த

அக்காவோ முறைத்தாள்.

“அதோட பசி வந்தா சாப்டனும்ன்ற நிலமை போய் பசி வந்தா சமைக்கனும்ன்ற நிலமை வேற….” ஆதவ் தொடர அக்கா இப்போது பாய்ந்தாள்…

“என்னது சண்டே ஒரு நாள் சமைக்கிறதுக்கு இப்டி ஒரு அர்த்தமா…..அப்ப மீதி ஆறு நாள் நான் சமைக்கனே….…”

“ஏன்டி அப்போ நேத்து நைட் சண்டேவா…? தெரியாத்தனமா நாளைக்கு தான் சண்டேன்னு நினச்சு ஆஃபீஸ்க்கு வேற லீவ் விட்றுக்கேன்டி”

“அது….”  அக்கா சற்று திக்கினாள்….”நேத்து பிள்ளைங்களுக்கு எக்‌ஸாமுக்கு படிக்க வேண்டி இருந்துச்சு….நான் அவங்கள படிக்க வச்சுட்டு இருந்தேன்ல…” அக்கா தாழ்வாய் ஆரம்பித்து கெத்தாவே முடித்தாள்.

“இப்பல்லாம் வரவர தினமும் பரிச்சைனு சொல்றமா நீ…”

“ஆமா….நான் என்னபா செய்றது…. ஃபார்மேட்டிவ் ஒன் டூவ கூட குமுலேடிவ்னு சொல்லி மூனு டைம்மா பிரிச்சு வைக்காங்க….இப்பலாம் தினமுமே எக்ஸாம்தான்….பாவம் பிள்ளைங்க….” அக்கா இப்படித்தன் பிள்ளைங்க படிப்பை பத்தி பேச தொடங்கிவிட்டால் புலம்பலுக்கு போய் சேம் சைட் கோல் ஷேமமா போடுவா…. இத்தனைக்கும் ட்வின்ஸ் ரெண்டும் படிப்பது எல்கேஜி…

அத்தான் இப்போது ரிதாவிடம் பாரு என்பது போல் தலை அசைக்க…ரிதா சிரித்துக் கொண்டிருந்தாள்…அத்தானும் தான்….

அக்காதான் சிரிப்பதாய் இல்லை…” ஏன்பா நானாபா உங்கள சமைக்க சொல்றேன்….?” அவள் முகம் விழுந்து போய் இருந்தது…

“ நீ கிட்சனுக்கு வந்துட்டா அவன் ரெண்டு பேரும் விளையாட ஆரம்பிச்சுறுதான்….மொத்ததுல படுக்க லேட் ஆகிடுது….நீ அவனுங்கள பாருன்னு நீங்க தான சொல்லிட்டு டிஃபன் ரெடி செய்ய  போனீங்க…” அக்காதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.