(Reading time: 9 - 18 minutes)

த்தையும் அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கி விட்டாள். அத்தையும் அம்மாவும்  ஒவ்வொருநாளும் மருத்துவ மனைக்குச் சென்று அப்பாவைப் பார்க்கத் தவறுவதில்லை. எனக்கும் ஷீலாவைச் சந்திக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 

அப்பாவின் நிலைமை சிறிது முன்னேறியிருந்தது. ஆனால் இன்னும் பேசவோ  நடக்கவோ முடியவில்லை. இடது கையும் காலும் சோர்ந்து போய் பலனற்றதாகி விட்டன. இப்போது அவர் சீவியும் சக்கர நாற்காலியில்தான்! அவரை மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

நாட்கள் கடந்தன, அண்ணா மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்து விட்டான்!

அப்பாவின் நிலை மாறவேயில்லை! அவரது இதயம் பலவீனமாகி விட்டதாகக் கூறினார்கள்! அம்மாவும் அத்தையும் அவரைப் பராமரிப்பதிலே தமது நேரத்தைப் போக்குகிறார்கள்.

காலை மூன்று மணி அம்மா கத்தி அழுவது கேட்கிறது. எழும்பி ஓடுகிறேன். அம்மா அப்பாவைக் கட்டிப் பிடித்தபடி அழுதுகொண்டிருக்கிறாள். என்னைக் கண்டதும் "அப்பா எங்களை விட்டு போய்விட்டார்" என்று அழுகிறாள்.

எனக்கும் அழுகை வருகிறது. என் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவளுக்கு ஆறுதல் சொல்கிறேன். அப்பாவைப் பார்க்கிறேன் அவர் வலது கையில் ஒரு காகிதத் துண்டு. கை விரல்களைப் பிரித்து அதை  எடுக்கிறேன்.   

"என்னை  மன்னித்துவிடு கமலா!". "நரேனுக்குச் ஷீலாவைக் கொடுத்துவிடு" 

அவர் கடைசியாகச் சொல்ல நினைத்ததை, வலது கையால் எழுதிவிட்டார்! என்னால் நம்பவே முடியவில்லை! எனக்கு அவரிடம் இருந்த வெறுப்பெல்லாம் ஒரு மரியாதையாக மாறிவிட்டது.   

அப்பாவின் இராணுவ டாக்டர் அப்பாவின் கடைசிச் சடங்குகளுக்கு வந்திருந்தார். அவர் கூறியது எங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!  

அப்பாவுக்கு இராணுவத்தில் இருந்து இளைப்பாறும் போது ‘மனஉளைச்சல் சீர்கேடு பதிவு (PTSD)’ என்ற மனநோய்.

அவரது செய்கைகளையும், அவர் எம்மிடம் நடந்து கொண்ட விதங்களையும் வைத்து, அவரது மனநோய் அந்த மனநல மறுத்தவரால் உறுதியாகி விட்டது.

அப்பாவைத் தவறாக எடைபோட்டு விட்டேன்!

அவர் உயிருடன் இல்லையே, அவரிடம் மன்னிப்புக் கேட்க! அவருக்கு நன்றி சொல்ல! என்று வேதனைப் படுகிறேன். 

விதியை யாரால் மாற்ற முடியும்!

எனக்கு கடவுளில் மாத்திரம் அல்ல  விதியிலும்  நம்பிக்கை வந்து விட்டது! 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.