(Reading time: 7 - 13 minutes)

ரே வீட்டில் இரண்டு சமையல்கள், கால் வலியோடு போராடினாலும் வேலைக்கு அஞ்சாத தாய் அவள், சளைக்கவில்லை. கொஞ்ச நாட்களில் பிள்ளையையும் வெளியே விடாமல் அவன் அடைத்துக் கொள்ளுவான். அவன் வீட்டில் இல்லாத நேரங்களில் பேரனை கொஞ்சுவதோடு சரி.

 இன்னும் அவள் வெளியுலகத்திற்கு அமைதியான நல்ல மருமகள் தான் , அவள் தான் சண்டையிடவில்லையே, கூச்சல் போடவில்லையே, அவதூறு பேசவில்லையே? என்ன இருந்தாலும் மகனுக்கு சொல்ல வேண்டிய தகவலை மருமகள் மூலமாக சொல்ல வேண்டிய அளவிற்கு மாற்றியிருந்தாள்.மகன் கொடுக்க விரும்பும் பணத்தை தன் மனைவி மூலமாகவே கொடுப்பான்.

 பெற்றோருக்கும், பிள்ளைக்கும் நடுவே இப்போது ஒரு நடுவராக இருந்தாள் அவள். அதில் அவளுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. எல்லாம் என் கட்டுப் பாட்டுக்குள் இருக்கிறது. உறவினர் இப்போதெல்லாம் வருவதில்லை. சித்தி வீட்டிற்கு போய் ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ஒரு வேளை அவன் தம்பிமார் வந்தாலும், இவர்கள் தாம் அடைத்த கதவைத் தாண்டி, வெளி வந்து வரவேற்க வந்தது இல்லை.

 அவனின் அக்கா வரும் போது தவறாமல் இவளுக்கு தலைவலி வரும். தாயின் உபசரிப்பு முடிந்து புறப்படும் போது சொல்லிக் கொண்டு செல்ல வரும் நாத்தனார்,

" தலைவலி இப்போ பரவால்லியா?" என விசாரிக்கும் போது அப்பாவியாக ஒரு புன்னகை சிந்தி வழி அனுப்புவாள்.

 தோ நாட்களும் கடந்து விட்டது, மாமியார் மாமனார் ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து விட்டனர். இப்போது கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருக்க தேவையில்லை. முழு வீடுமே அவர்களுடையதாகி விட்டதே.அவ்வீட்டிற்கு விருந்தினர் வருவதும் இல்லை. அவன் சகோதரியை ஏதாவது விசேஷத்தில் பார்த்து அமைதியாக தலையசைப்பதே அவளுக்கு போதுமானது.இதற்கு மேல் சொந்த பந்தம் தேவை என்ன இருக்கிறது.

 எல்லாம் அவள் எண்ணியபடியே நிகழ்ந்து இருக்கிறது. அவளுக்கு தன்னுடைய எண்ணம் எல்லாம் ஈடேறிய நிறைவு இருந்தது.ஆனால், கொஞ்ச நாட்களாகத்தான் கவனிக்கின்றாள்.அவன் சிரிப்பு எங்கே போனது?

 கன்னம் குழிய , அதிரடியாக சிரித்தவாறே எதிரில் இருப்பவரிடம் கையை ஓங்கித் தட்டும் அவன் ஆரவாரம் எங்கே போயிற்று? 

ஏன் இப்படி உணர்ச்சிகளற்ற மனிதன் போல இருக்கிறான்? ஏன் சிடுசிடுப்பையே பல நேரம் பதிலாக தருகிறான்?

 அன்பின் அடிப்படையான குடும்பத்தையே தவறாக சித்தரித்து வாழ்க்கையின் மீது உண்டான நம்பிக்கையை மொத்தமாய் அவள் அழித்து விட்டதை, அதனால் மற்ற எதன் மேலும் நம்பிக்கை வைக்க முடியாமல் அவன் திணறுவதை அவள் இன்னும் உணரவில்லை. 

 மகனுடைய வாழ்வு தங்களால் எந்த விதத்திலும் பாதிக்கப் படக் கூடாது என்று அவன் பெற்றோர் ஒரு போதும் அவளை நல்ல மருமகள் என்னும் பட்டத்திற்கு மாறாக சித்தரிக்கவில்லை. அதன் காரணத்தால் அவர்கள் இன்னமும் அவன் பார்வையில் குற்றவாளிகளாக இருக்க,பெற்றோரையே நம்ப முடியாத உள்ளத்தால், பகிர்ந்துக் கொள்ள நண்பர்களோ உறவுகளோ நெருங்கி நில்லாத காரணத்தால் அவன் உள்ளுக்குள்ளே பாறையாக இறுகிப் போய் விட்டான்.

 இவளோ இப்போது தனக்குள் யோசிக்கிறாள். நான் செய்தது நல்லதா? கெட்டதா?

பின்னுரை: பெரும்பாலான திருமணங்களில் தம்பதியர் அவரவர் இயல்புக.ளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளாமல் , தனக்கு ஏற்ற படி மாற்ற , புது வடிவம் கொடுக்க முயலுகிறார்கள். அதில் இயற்கை வடிவமற்று சில உள்ளங்கள் நொறுங்கிப் போய் விடுகின்றன. அதைததான் கதையில் வெளிப்படுத்த எண்ணினேன். இதுவும் ஒரு நிஜத்தின் நிழலே. :)

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.