(Reading time: 9 - 17 minutes)

இந்த காதல்தான் மனைவியின் மனதை கண்ணாடியாய் காட்டுகிறது. இதே காதல்தான் கணவனையும் புரிந்துகொள்ள செய்கிறது. அவர்களின் அன்பையும் காதலையும் கண்டு நிர்வாகி மட்டுமல்ல, அவன் நண்பனுக்கும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் பேச்சு எழவில்லை.

உடல் ஊனமுள்ள ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்பறது யாரும் செய்யாத அதிசியம்தான். பெற்ற குழந்தையையே ஊனத்தை காரணம் காட்டி சில பெற்றோரே காப்பகத்தில் விடுகின்றனர். அதுமட்டுமின்றி எவ்வளவுதான் வசதி வாய்ப்பு இருப்பினும் நல்ல குழந்தையையே தத்து எடுக்கும் இந்த காலத்தில், இப்படியுமா மனிதர்கள் என்று வியந்து நின்றனர்

பின்பு, சில விதிகளை எல்லாம் முறைப்படி செய்து கொண்டிருந்த, அதே நேரம் பணிப்பெண் முன்வர அவர்கள் தேர்ந்தெடுத்த நான்கு வயது குழந்தை திவ்யாவோ! இரண்டு கைகளையும் கால்களாகக் கொண்டு தரையில் ஊன்றி, தவழ்ந்து, தவழ்ந்து வந்தாள். இதனைக் கண்ட ஜானகி ஓரடி முன் சென்று முகம் மிளிர அன்பு ததும்ப திவ்யாவை இரு கைகளாலும் தூக்கி அணைத்தாள்.

அருகே வந்த செல்வம், திவ்யாவை தூக்கி தட்டிக் கொடுத்தான். குழந்தை திவ்யாவோ மழலை சிரிப்புடன், அங்கே நடப்பதை என்னவென்று புரிந்தும் புரியாமலும் அவர்களுடன் ஓட்டிக்கொண்டாள். மூவரும் அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று நடந்தனர்...

அவர்களின் காதல் அவர்களை மட்டுமல்ல திவ்யாவையும் வாழவைக்கும. என்ற நிம்மதியுடன் நாம் விடை பெறுவோம்.!...

உண்மையான காதல் கண்ணாடி போன்றது . ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் , தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்வர்;. ஒருவர் மனதில் உள்ளதை ஒருவர் வெளிப்படுத்துவர்.

 

This is entry #19 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் வாழ்க்கை 

எழுத்தாளர் - மங்கலஷ்மி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.