(Reading time: 34 - 67 minutes)

ரிங்க பத்ரமா பாத்து போங்க வேல இருக்குனு சாப்பிடாம இருக்காதிங்க. வீட்ல இருக்க கவலைய இங்கியே விட்டுட்டு வேலைல கவனம் செலுத்துங்க சரியா?

ஒகே டா பாய்.

அலுவலகம் சென்றபின்னும் அவளை அலைப்பேசியில் அழைத்து சாப்பிட்டாயா? என்ன டா  பன்ற? ஒன்னும் பிரச்சனை இல்லியே? நல்ல தூங்கு ஓய்வெடு மா சரியா? என்று கனிவோடு விசாரிப்பான்.

அன்று மாலை அக்‌ஷை வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றிவிட்டு அவன் அறையில் தன் நண்பனுடன் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். காஃபி கொடுப்பதற்காக அவன் அறைக்கு வந்தவள் அவளை பற்றித்தான் பேசுகிறான் என்று தெரிந்ததும் அதை கேட்டுக்கொண்டிருந்தாள். தானும் தன் மனைவியும் சந்தோஷமாக இருப்பதாக அவன் சொன்னான்.

பேசி முடித்ததும் கேட்டாள். எதுக்காக இப்படி பொய் சொல்றீங்க?

என்ன பொய் சொன்னேன்?

நமக்குள்ள எந்த சந்தோஷமும் இல்லாதபோது எதுக்காக ஆமாம்னு சொல்லனும்?

சந்தோஷம் இல்லனு யார் சொன்னது? காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்றதுன்னா சும்மாவா? அது எவ்ளோ பெரிய சந்தோஷம்? அந்த சந்தோஷம் எனக்கு இருக்கே?

நீ என்ன சொல்லவரேனு எனக்கு புரியிது டா. எனக்கு என் அம்மா, அப்பா, அண்ணன் தங்கை மாதிரி நண்பர்களும் முக்கியம். அவர்கள் என் வாழ்வில் ஒரு அங்கம். முக்கியமான நேரத்தில் அரிய பகுதிகளை வகுத்தியவர்கள். அதனால் என் சுக துக்கங்கள் அவர்களுக்கு தெரியவேண்டும் என்று நினைப்பது தவறில்லையே?

அதே நேரத்தில் நீயும் எனக்கு முக்கியம்தான் என் உயிரின் சரிபாதி. அப்படி இருக்கும்போது உன்னை விட்டுக்குடுக்கமுடியுமா? நான் பொய் சொல்லவில்லை. உடல் மட்டும் ஒன்று கலப்பது முதலிரவு அல்ல. என்னை நம்பி என் மனைவியாக என் வீட்டில் முதன்முதலாக ஒரு இரவு தங்கியபோதே முதலிரவு முடிந்துவிட்டது.

நீ ஒன்னும் எனக்கு பொறுத்தமில்லாதவளோ அல்லது எனக்கு கெடுதல் நினைக்க கூடியவளோ அல்ல. உன் இதயத்தில் ஏதோ பெரிய காயம் இருக்கிறது. சரியான மருந்து கிடைக்காததால் அது இன்னும் ஆறவில்லை. அதற்கு சரியான மருந்து கொடுப்பதற்காகத்தான் ஒரு அன்பு மருத்துவராக கடவுள் என்னை உனக்காக அனுப்பி இருக்கிறார். நான் மருந்து குடுத்து காயம் மெல்ல மெல்ல ஆறிவிட்டால் பின் உன்னால் எனக்கு நல்ல மனைவியாக தோழியாக எல்லா உறவுமாக இருக்கமுடியும். அப்புறம் ஏன் நான் உன்னை குறை சொல்ல வேண்டும்?

இதையெல்லாம்விட நான் உன்னை காதலிக்கிறேன் i love you டா.

தான்யாவிற்கு பேச வார்த்தை வராததால் அவள் அமைதியாக இருந்தாள். அவள் மனமும் முகமும் ஏனோ கலங்கி இருந்தது.

அந்த அமைதியை கலைக்க அக்‌ஷை காதலிக்க வேண்டாம் டா. சாப்பாடு போடலாமே? பசிக்கிது டா. என்றான்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றபோது அக்‌ஷை தான்யாவின் அறைக்கு வந்து பார்த்துவிட்டு சும்மா குட் நைட் சொல்லத்தான் வந்தேன் டா என்றுவிட்டு சென்றான்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. தான்யாவும் அக்‌ஷையை முழுவதுமாக கணவனாக ஏற்காவிட்டாலும் சக மனிதனாக பார்க்க ஆரம்பித்தாள். இலகுவாக பேசுவாள். அக்‌ஷை பேசுவதை காதுகொடுத்து கேட்க தொடங்கினாள். அக்‌ஷையும் அவள் மனம் புரிந்து அவள் இதயத்தை தொடும் விஷியங்களையே பேசுவான்.

ஒரு சில வாரங்களில் ஆடி மாதம் வந்தது. தான்யா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தாள். அந்த ஒரு மாதத்தில் அக்‌ஷை தான்யாவிற்கு தினமும் phone செய்வான். இரவும் பகலும் மணிக்கணக்கில் பேசுவார்கள்.

தான்யாவிற்கு கவிதை எழுதும் பழக்கம் இருந்ததால் அவளுக்கு கவிதை பற்றி பேசுவதும் பிடித்திருந்தது. அக்‌ஷையும் கவிதை, கதை, காமெடி இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷியங்களையே பேசுவான். அது அவளை மிகவும் கவர்ந்தது.

தான்யாவின் மனம் மெல்ல மெல்ல அக்‌ஷையிடம் சாய்வதாக அவள் உணர்ந்தாள். ஒருநாள் அவன் அவளுக்கு கால் செய்யாவிட்டாலும் அது அவளை என்னவோ செய்வதாக நினைத்தாள்.

அக்‌ஷையும் அவள்மீது தீவிரமான காதல்கொள்ள தொடங்கியிருந்தான். அவன் காதலை அவளுக்கு வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசுவான். தான்யா, உன்மீது நான் நிபந்தனையற்ற காதல் வைத்திருக்கிறேன், எந்த பாடல் கேட்டாலும் எதை பார்த்தாலும் எனக்கு உன் நினைவுதான் வருகிறது. இந்த அனுபவம் புதிதாக அழகாக இருக்கிறது என்பான்.

தான்யாவும் அக்‌ஷை பேசுவதை உள்ளூற மிகவும் ரசித்தாள். காரணம் அவள்மீது யாரும் உண்மையான அன்பை பொழிந்ததில்லை. யாரும் இப்படி விரட்டி விரட்டி அவளை காதலித்ததும் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.