(Reading time: 34 - 67 minutes)

ன்ன மன்னிச்சிடுடா செல்லம் உனக்கு இந்த மனநிலை வரனும்னுதான் நான் உன்கிட்ட அப்படி பேசிட்டேன். நீ எனக்கு பொறுத்தமான மனைவிதான் ஆனால் உன் இதயத்திற்கு கொஞ்சம் தயாரிப்பு தேவைப்பட்டது. வாழ்க்கையின் போர்க்கலத்தில் நீ போராட உனக்கு துணிவு உறுதி அவசியம்டா அதுக்கு இதுதான் சரியான வழி. பலரோட துன்பமும் சாதனையும் உனக்கு தெரிஞ்சா உன் துன்பம் சின்ன புள்ளியாகும்டா.

உண்மைதான் அக்‌ஷை. நான் செய்த தவறை புரிஞ்சிக்கிட்டேன். வாழ்க்கையின் அவசியம் வேலையின் முக்கியத்துவம் புரியிது. நானும் அன்னிக்கி உங்கள கஷ்டப்படுத்திட்டேன். மன்னிச்சிடுங்க அக்‌ஷை.

பரவாலடா நீதான. எனக்கு இதுலாம் ஒரு பெரிய விஷியம் இல்ல விடுடா. உனக்கு எப்படி என் dignity self respect முக்கியமோ அதுப்போலத்தான் எனக்கும் நீ எதுக்காகவும் யார்கிட்டையும் போய் நிக்கக்கூடாது கேட்கக்கூடாது. மத்தவங்களுக்கு குடுக்குற அளவுக்கு நீ வரனும்.. அதான் எனக்கு வேண்டும்.

சரி அக்‌ஷை கண்டிப்பா வருவேன். என் சொந்த காலில் நான் நிற்பேன்.

குட். அன்பு வேறு சுயமரியாதை வேறுடா. என் அன்பும் காதலும் உனக்கு என்றும் இருக்கும். நீ என் மனைவி என்பது மாறாத உறவு. ஆனால் சுயமரியாதை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். ஒருவேலை உனக்கும் எனக்கும்  ஏதோ ஒரு சின்ன சண்டை வந்துவிட்டால் அந்த நேரத்தில் நீ துவளாமல் உன் தேவைகளை பார்த்துக்கொள்ளவேண்டும். என்னால் உனக்கு காலம் முழுவதும் சம்பாதித்து போடமுடியும் இருந்தாலும் நான் நீ வேலைக்கு செல்ல சம்மதித்ததற்கு இதுதான் காரணம்.

இப்படி ஒவ்வொரு விஷியத்திலும் பார்த்து பார்த்து அவளையும் அவள் இதயத்தையும் செதுக்கி வைத்தான் அக்‌ஷை.

ஒருமுறை தான்யா அக்‌ஷையை ஆழ்அமாக முழுவதுமாக நேசிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவளுக்கு ஒரு காலத்தில் நெருங்கியவணாக இருந்த ஒருவன் அவள்மேல் இருந்த கோபத்தில் அவளை பழிவாங்க போவதாகவும் அவள் அலைப்பேசி எண்ணை வைத்து ஏதாவது பிரச்சனையில் சிக்கவைப்பதாக சொன்னான். ஒரு வாரம் தொலைப்பேசியிலே இந்த பிரச்சனை போனது.

தான்யாவும் ஏதோ ஒரு வேகத்திலும் கோபத்திலும் அவனை பழிவாங்குவேன் என்று சவால் செய்துவிட்டாள். சவால் செய்துவிட்டாளே தவிர அவளுக்கு அதில் க்ஒஞ்சமும் விருப்பமில்லை. காரணம் அது அவளின் இனிய வாழ்க்கையை பாதிக்குமோ, அந்த வாழ்க்கைக்கு த்ரோகம் செய்கிறோமோ, தன் கணவனுக்கு ஏதேனும் துன்பம் வருமோ என்று பயந்து வேதனைப்பட்டாள்.

தினமும் அவளுக்கு நேர்வதையெல்ல்லாம் அக்‌ஷையிடம் சொல்லி வேதனைப்படுவாள். ஆனால் அக்‌ஷை அவள் சொல்வதை கொஞ்சமும் பெரிதுபடுத்தாமல் அவளுக்கு ஒரு மூன்றெழுத்து மந்திரம் சொல்ல்லிக்குடுத்தான்.

you are my wife. இந்த மூன்றெழுத்து மந்திரம்தான் அவள் வாழ்க்கை பாதையை புறட்டிப்போடாமல் தன் கணவனுடன் இனிய வாழ்க்கை வாழ காரணமாக இருந்தது. நீ என் மனைவி நம்மை எதுவும் செய்யமுடியாது டா. கவலைப்படக்கூடாது செல்லம் என்று ஆறுதல் சொல்வான்.

ஆனால் தான்யாவோ தன் அன்புக்கணவர் நம்பிக்கையோடு அவளை பராமரிக்கும் கணவருக்கு எதேனும் பிரச்சனை அவளால் நேர்ந்துவிடுமோ என்று அவனை விலகிப்போனாள். தான்யாவிற்கு அவளின் பிரச்சனையைவிட தன் கணவனை பற்றிய பயமும் கவலையுமே அவள் இதயத்தை ஆட்கொண்டது. ஆனால் அக்ஷைவிடவில்லை. தன் காதலின் ஆழத்தை காட்டி அவள் விலகும்போதெல்லாம் அவனின் வார்த்தைகலால் அவளின் இதயத்தை நெருங்கினான்.

உனக்கு என்னடா செல்லம் பிரச்சனை? தயவு செய்து சொல்லு. நான் உன்னையேதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். படம் பார்க்கும்போது கூட எனக்கு உன் நினைவுதான்வருகிறது. என்று அவிழ்க்கமுடியாத அளவுக்கு அந்த நேரத்தில் அவளுக்கு அன்புக்கவசம் பூட்டிவிட்டான்.

அவள் அவனுக்காக தவித்து  துடிக்க  அவன் அவளுக்காக துடித்தான். அவன் அணிவித்த அன்புக்கவசமும் நம்பிக்கையால் தூண்டப்பட்ட இதயமும் நெருப்பாய் இருந்து அவளை அந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க உதவியது. அந்த நபரே வந்து மன்னிப்பு கேட்டு இனி உன் வாழ்வில் குறுக்கே வரமாட்டேன். என்று விலகிவிட்டான்.

என்னதான் நம்பிக்கை மிகுந்த கணவனாக இருந்தாலும் அந்த நம்பிக்கையை இழக்கவைக்கும் அந்த சமையத்தில் கூட அக்‌ஷை அவளை நேசித்து அந்த ஆபத்திலிருந்து அவளை மீட்டெடுத்தது தான்யாவை முழுவதுமாக அக்ஷையிடம் சாயவைத்தது. அக்‌ஷை நேசித்ததுபோல அவளும் அவனை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தாள்.

ஒரு சில மாதங்கள் கழித்து அலுவலக வேலையாக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அக்‌ஷைக்கு. முதலில் மறுக்கத்தான் நினைத்தான். ஆனால் தான்யாவும் சம்மதித்ததால் அவன் இதற்கு ஒப்புக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.