(Reading time: 16 - 32 minutes)

திடிரென்று மித்திலாவின் தோள் மீது ஒரு கை விழுந்ததும், நடப்பு உலத்திற்கு வந்தாள்.... "ஹே மித்திலா... எப்படி இருக்க... என்னை ஞாபகம் இருக்கா... வேலை பிஸி... அப்புறம் பேமிலின்னு வந்ததுக்குப் பிறகு உங்கக் கூடல்லாம் தொடர்புல இருக்க முடியல..." என்று அவளுடன் படித்த தோழி பேசிக் கொண்டிருந்தாள்...

அவளோடு பேசினாலும், மித்திலாவின் பார்வை சேதுவின் மீதே இருந்தது... அவனோ இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... "ஹே வா மித்தி... என்னோட ஹஸ்பண்ட் அங்க இருக்காரு... அவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..." என்று அந்த தோழி அவளை கூட்டிச் சென்றாள்...

அங்கு இன்னும் சில தோழிகளும், அவர்களின் கணவன்மார்களும் இருந்தனர்... அறிமுகப் படலம் முடிந்ததும்... "ஹே மித்தி... என்னடி சேது உன்னை கண்டுக்கவே இல்லை... நீ மட்டும் தான அவனுக்கு பெஸ்ட் ஃப்ரண்டா இருந்த...?? என்னாச்சு..??" என்று ஒரு தோழி கேட்டாள்...

"பெரிய லெவல்க்கு வந்ததும் பழசையெல்லாம் மறந்துட்றாங்க... வேற என்ன சொல்றது..." என்று இன்னொருத்தி சொன்னாள்...

"சரி அதை விடுங்கடி... ஆமாம் மித்தி, என்ன நீ தனியா வந்திருக்க..?? உன்னோட ஹஸ்பண்ட் ஐ கூட்டிட்டு வரலையா..??" என்று ஒருத்தி கேட்டுக் கொண்டிருந்த போது... அவர்களை நோக்கி சேது வந்துக் கொண்டிருந்தான்... அவனைப் பார்த்ததும் எல்லோரும் இன்முகத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்... மித்திலா மட்டும் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்...

"என்ன சேது... நீ கூட தனியா வந்திருக்க... உன்னோட வைஃப் ஐ கூட்டிட்டு வரலையா..??" என்று ஒருத்தி கேட்க...

"ம்ம் வந்திருக்காங்களே..." என்றவன், மித்திலாவின் அருகில் சென்று அவள் தோள் மீது கையைப் போட்டவன்...

"டார்லிங்... என்னோட சரி பாதியைப் பார்க்க, எல்லோரும் ஆர்வமா இருக்காங்க... என்ன சொல்லிடலாமா..??" என்று கேட்க,

"கைய எடு... இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை... என்னை இதுவரைக்கும் கண்டுக்காம இருந்துட்டு... இப்போ என்ன..??" என்று அவள் செல்ல கோபம் காட்டியதும்...

"ஹே எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்காக தான்..." என்று சேது அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க... எல்லோரும் அவர்களை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்...

"ஹே சேது அப்போ மித்திலாவை நீ கரெக்ட் பண்ணிட்டியா..??" என்று ஒருவன் கேட்க...

"ஹே உன்னோட ப்ரோபோசல மித்திலா அக்சப்ட் பண்ணிக்கலன்னு கேள்விப்பட்டோம்..." என்று இன்னொருவன் கேட்டதும்... சேது அவர்கள் திருமணம் நடந்ததை பற்றி கூறிக் கொண்டிருக்க... திரும்பவும் அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது..

ன்று ராமிடம் பேசிவிட்டு வந்தப்பிறகு அவனை மித்திலா சந்திக்கவில்லை... மேற்படிப்பை முடித்து, ஒரு குழந்தை நல மருத்துவராக, ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தாள்... கூடவே வீட்டிற்கு அருகில் ஒரு கிளினிக் போட்டு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தாள்...

இப்படியே அவள் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தாலும், அடிக்கடி ராமின் ஞாபகம் அவளுக்கு வரும்... இப்போதும் அவன் மீது அவளுக்கு காதலெல்லாம் ஒன்றுமில்லை... ஆனால் மனதில் ஒரு குற்ற உணர்வு இருந்தது...

அன்று ராமிடம் இவள் பேசியது சரியா..?? வேறு மாதிரி நடந்துக் கொண்டிருக்க வேண்டுமோ..?? அவனுடனான நட்பை தொடர்ந்திருக்கலாமோ..?? அப்படி இருந்தே அவனுக்கு புரிய வைத்திருக்கலாமோ..?? இவள் பேசியதை அவன் எவ்வாறாக எடுத்துக் கொண்டிருப்பான்... இவளையே நினைத்துக் கொண்டு அவன் முடங்கிப் போயிருப்பானா..?? இல்லை இவள் பேசியதை புரிந்துக் கொண்டு முன்னேறியிருப்பானா..?? இப்படி பல கேள்விகள் அவள் மனதில் தோன்றும்...

இந்த சூழ்நிலையில் அவள் திருமணம் பற்றி அவள் பெற்றோர்கள் பேசும் போது, அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை... இப்போது ராம் எப்படி இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவளுக்கு இருந்தது... அவன் ஒரு நல்ல நிலமையில் இருக்கிறான் என்று தெரிந்தால் போதும்... அதன்பின் எந்த குற்றஉணர்வும் இல்லாமல் இருப்பாள்...

அன்று அவள் பணியாற்றும் மருத்துவமனையில் ஒரு மீட்டிங் இருந்தது... புதிதாக சில மருந்துகளை கண்டுபிடித்து புகழ் பெற்றிருக்கும் சேதுராமன் தான் இன்று மருத்துவமனைக்கு வரப் போகிறார்... அவர் கண்டுபிடித்த மருந்துகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளுக்கு கொடுப்பதே அவரது எண்ணம் என்று தெரிவித்திருந்தார்... பிறகு இதுபோன்று தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளுக்கு, பின்பு தான் தனியார் மருத்துவமனைகளுக்கு என்று எழுதியிருந்த ஒரு ஆர்டிக்கலை மித்திலாவும் படித்திருக்கிறாள்... அந்த சேதுராமன் என்ற பேரை பார்க்கும்போது கூட அவளுக்கு தன் நண்பன் ராமின் ஞாபகம் தான் வந்தது...

ஆனால் இந்த சேதுராமன் தான் தன் நண்பன் சேதுராமன் என்று அறிந்தபோது ஆச்சர்யப்பட்டாள்... அவனது தற்போதய தோற்றமும், கம்பீரமும், அவன் குரலில் இருந்த வசீகரமும் அவளை சில மணி நேரங்கள் கட்டிப் போட்டு வைத்திருந்தது... மீட்டிங் முடிந்ததும் அவனிடம் பேச அவள் தயக்கம் காட்டாமல், அவன் அருகில் சென்றாள்...

மீட்டிங் முடிந்தும் கூட சில மருத்துவர்கள் அவனிடம் பேசிக் கொண்டு நின்றிருந்தனர்... அவனுடன் தனியாக பேசும் வாய்ப்புக்காக இவள் காத்துக் கொண்டிருந்தாள்... ஆனால் அவன் இவளை கவனித்தும் கூட அவர்களோடு பேசியபடியே நின்றிருந்தான்... ஒருவேளை இவள் மீது கோபமாக இருக்கிறானோ..?? என்று இவள் யோசித்தாள்... இருந்தும் சில வார்த்தைகளாவது அவனோடு பேசிவிட வேண்டும் என்று காத்திருந்தாள்...

அவர்களெல்லாம் போனதும் ராம் இவள் அருகில் வந்தான்... "உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் மிது.. இங்க மட்டும் தான் வொர்க் பண்றியா..?? இல்ல ஏதாவது கிளினிக் மாதிரி வச்சு ப்ராக்டீஸ் பண்றியா..??" என்றுக் கேட்டான்... இவளும் தன்னுடைய கிளினிக் அட்ரஸை சொன்னதும்... "இப்போ எனக்கு டைம் இல்ல.. நான் உன்னோட கிளினிக்கு வந்துப் பார்க்கிறேன்.." என்று சொல்லிவிட்டு சென்றான்... ஏதோ இவள் காத்திருந்ததற்காக பேசிவிட்டு சென்றானோ..?? என்று தான் அப்போது மித்திலாவிற்கு நினைக்க தோன்றியது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.