(Reading time: 16 - 32 minutes)

னால் அப்படியில்லை என்பதை மறுநாளே கிளினிக்கிற்கு வந்து மித்திலாவிற்கு நிரூபித்திருந்தான் அவளது நண்பன் ராம்... அவன் வந்தபோது அவள் வேலையில் ஈடுபட்டிருந்தாள்... அதுவரை அவன் காத்திருந்தான்... பின் வேலை முடித்துவந்து அவனை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்... அவளின் ஆச்சர்யப்பார்வையை அவனும் அறிந்துக் கொண்டான்...

"என்ன மிது... அப்படிப் பார்க்குற..??"

"இல்லை நீ இங்க வருவன்னு எதிர்பார்க்கல... நீ என்மேல கோபமா இருக்கியோன்னு நினைச்சேன்..." என்று மனதில் இருந்ததை அப்படியே கூறினாள்...

"மிது மேல கோபமா..?? எனக்கு இருக்குற ஒரே பெஸ்ட் ஃப்ரண்ட் நீதான்... நாம கொஞ்ச வருஷமா மீட் பண்ணலன்னா.. நம்ம ஃப்ரண்ட்ஷிப் இல்லன்னு ஆயிடுமா..??" என்று அவளைப் பார்த்து கேட்டான்... அவளும் அதை ஆமோதித்தாள்...

"நான் நேத்து சரியாப் பேசாததால, நீ அப்படி நினைச்சிருப்ப... அவங்கல்லாம் முக்கியமா பேசிக்கிட்டு இருந்தாங்க... அப்போ அதை பாதியில விட்டுட்டு வர விருப்பமில்ல... எவ்வளவு பெரிய நிலைமைக்கு போனாலும்... யாரையும் அவமதிக்கக் கூடாது... அதான் உன்கிட்ட பேச முடியல... உன்கிட்ட நிறைய பேசனும்... அதுக்கு அப்போ உண்மையிலேயே எனக்கு டைம் இல்ல மிது... அதான் உடனே கிளம்பிட்டேன்..." என்று நேற்று நிகழ்வுக்கு விளக்கம் கூறினான்...

பின் அவள் வேலையைப் பற்றியும், அவன் ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புகளைப் பற்றியும் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்... பின் அவர்கள் இருவரின் குடும்பத்தைப் பற்றி பேசினார்கள்... பின் அவர்கள் இருவரின் திருமணம் குறித்து பேச்சு வந்தது..

"அப்புறம் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆயாச்சு... தனியா கிளினிக் கூட வச்சாச்சு... அடுத்து என்ன மிது.... அப்பா, அம்மா உன்னோட கல்யாணம் பத்தி பேசலையா..??"

"அதெல்லாம் அம்மா, அப்பா பேசிக்கிட்டு தான் இருக்காங்க... நான் தான் தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்கேன்... என்னன்னு தெரியல ராம்... நீ இப்போ எப்படி இருக்க..?? இப்போ என்ன பண்ற...?? நான் பேசினத நீ எப்படி எடுத்துக்கிட்டியோ..?? இப்படி நிறைய கேள்விகள் மனசுல இருந்துச்சு... ஒரு குற்ற உணர்வுல தான் நான் சுத்திக்கிட்டு இருக்கேன்... அதுல என்னோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியல...

ஆனா இப்போ தான் நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிடுச்சே... அப்புறம் என்ன... அம்மா, அப்பா கல்யாணத்தைப் பத்தி பேசினா உடனே மாப்பிள்ளை பார்க்க சொல்ல வேண்டியது தான்... உன்னை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ராம்... நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கிட்டியே அதுபோதும்..."

"ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு மிது... ஆனா அப்புறம் நீ சொன்னது என்னோட நன்மைக்கு தான... அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்... இப்போ நான் ஒரு நல்ல நிலைமையில் இருப்பதுக்கு நீயும் ஒரு காரணம் தான் மிது..."

"இல்லை ராம்... முழுக்க முழுக்க காரணம் நீ மட்டும் தான்... கண்டிப்பா நான் அப்படி பேசிட்டு வந்ததை வேற யாராவது இருந்தா வேற மாதிரி தான் எடுத்துக்கிட்டு இருப்பாங்க... ஒன்னு அதையே நினைச்சு அவங்க வாழ்க்கையையே அழிச்சிக்கிறது... இல்லன்னா என்மேல ஒரு வெறுப்பை வளர்த்துக்கிறதுன்னு மாறியிருப்பாங்க... ஆனா நீ அப்படியெல்லாம் இல்லை ராம்..." என்று அவள் சொன்னதும் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தான்...

"ஆமாம் நீ எப்போ கல்யாணம் செஞ்சுக்கப் போற...??" என்று அவனைப் பார்த்து மித்திலா கேட்டாள்.

"கல்யாணம் தான பண்ணிக்கனும்... அம்மாவும் சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க... ஆனா நான் உன்னைவிட பெஸ்ட் பொண்ணா தேடிக்கிட்டு இருக்கேன்... நீதான சொன்ன உன்னைவிட எனக்கு பெஸ்ட்டா ஒரு பொண்ணு கிடைப்பான்னு... அப்படி ஒருத்தி வருவாளான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்..." என்று அவன் சொன்னதும், கிண்டலாக சொல்கிறானோ.. என்று அவனை பார்த்தான் அவள்...

"நான் கிண்டலா சொல்லல மிது... உண்மையா தான் சொல்றேன்... உன்னைவிட எதுல பெஸ்ட்டா இருக்கற பொண்ணு எனக்கு கிடைப்பா... உன்னோட அழகாவா..?? இல்லை உன்னோட அறிவாவா..?? இல்லை உன்னோட ரொம்ப படிச்சவளா..?? இல்லை உன்னை விட வசதியானவளா..??"

"......"

"எல்லாத்தையும் விட.. நீ நீயா இருக்கியே.. அதுதான் உன்னோட ஸ்பெஷலே...  உன்னோட இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா.. அப்போ நான் காதலை சொன்னபோது, என்னோட நிலைமையை நினைச்சு என்னோட காதலை அலட்சியப்படுத்தியிருப்பா... ஆனா அங்க நீ எனக்காக யோசிச்சுப் பேசின... இப்போதும் நீ அதே மித்திலாவாக தான் இருக்க...

இப்போ எனக்காக அம்மா ஒரு பொண்ணைப் பார்த்தா.. அவ இப்போ இருக்க என்னோட நிலைமையை பார்த்து கண்டிப்பா ஓகே சொல்லிடுவா.. ஆனா எந்த நிலையிலும் என்னை ஒரு மனுஷனா மதிச்சது நீ மட்டும் தான் மிது... உன்னை விட ஒரு பெஸ்ட் பொண்ணை நான் எங்கிருந்து தேட.." என்றான்...

நான் எந்த உயர்வுக்கு சென்றாலும், உன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டான்.. இதற்குப் பிறகும் அவனை வேண்டாமென்று அவளால் சொல்ல முடியாது.. இருந்தாலும் அவன் காதலை ஏற்றுக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது... என்ன தான் அவன் இவளை புரிந்துக் கொண்டிருந்தாலும், அப்போது அவன் காதலை ஏற்க மறுத்தவளுக்கு இப்போது அவனை ஏற்றுக் கொள்வது சுயநலமோ என்று தோன்றவே... அவன் சொன்னதை கண்டும் காணாமல் விட்டுவிட்டாள்...

அதன்பின் வந்த நாட்களிலும் அவர்கள் நட்பு தொடர்ந்துக் கொண்டிருந்தது... அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கிடையேயும் நட்பு ஏற்பட்டது... இருவரின் குடும்பத்தாருக்கும் அவர்களின் நட்பு பற்றி முன்பே தெரியும்...  அவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியாமல் இருந்தனர்... அதுமட்டுமில்லாமல், இருவரும் திருமணபந்தத்தில் இணைய வேண்டுமென்று இரு குடும்பமும் விரும்பியது...

இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து, அவர்களின் விருப்பத்தை கேட்டபோது... அதற்குமேலும் மித்திலாவால் மறுக்க முடியவில்லை... "என்ன ராம் இப்பவும் என்னோட பெஸ்ட்டா ஒரு பொண்ணு வேணும்னு வெய்ட் பண்ணப் போறியா..??" என்று கேட்டு மறைமுகமாகவே தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள்...

"இல்லை இந்த பெட்டர்மாஸ் லைட்டே கிடைச்சாலும் ஓகே தான்.." என்றான் அவனும்... பின் இரு குடும்பங்களும் பேசி அவர்கள் திருமணத்தை நடத்தினர்...

கைத்தட்டும் ஓசைக் கேட்டதும் நடப்பு உலகத்திற்கு வந்தாள் மித்திலா... இருவரும் திருமண பந்தத்தில் இணைந்ததை கேட்டு எல்லோரும் கைத்தட்டி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர்... பின் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

"அப்புறம் மித்தி... குட்டி மித்திலாவோ.. இல்லை குட்டி சேதுவோ இருக்காங்களா..??" என்று அந்த கூட்டத்தில் ஒருத்தி கேட்டாள்..

"ம்ம்.. குட்டி மித்திலா இருக்கா.. என்னோட மாமியார்க்கிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்.." என்று மித்திலா வெட்கத்தோடு கூற.. சேது அவளை காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான்... பின் எல்லோரும் அவர்களின் கல்லூரி காலங்களை ஒன்றாக கூடி அசைப்போட்டு ஆரவாரம் செய்தனர்.

This is entry #37 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ் நிலைக் கதை -கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - சித்ரா.வெ.

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.