(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 78 - யானை மனைவி - பூர்ணிமா செண்பகமூர்த்தி

This is entry #78 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புக்கான கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - பூர்ணிமா செண்பகமூர்த்தி

னநலமருத்துவர் சீனிவாசன் அறையில் ராஜேந்திரன் மிகுந்த பதற்றத்துடன் நுழைந்தார்,

வணக்கம் டாக்டர். நான் ராஜேந்திரன்!

அவசரமா பார்க்கணும்னு ரெண்டு நாளா என்னைத் தேடி வந்தீங்கன்னு நர்ஸ் சொன்ன ராஜேந்திரன் நீங்கதானே?

ஆமா டாக்டர் நானேதான்! என்னோட பிரச்சினையப் பற்றி எப்படிச் சொல்றதுன்னே தெரியல. ரொம்ப குழப்பமா இருந்தது, என் ப்ரெண்ட் சிவா தான் உங்க அட்ரஸ் கொடுத்தான்.

முதல்ல பிரச்சினை என்னன்னு சொல்லுங்க!

டாக்டர் என் மனைவி நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமா...

கொஞ்சம் கொஞ்சமா?

ஒரு யானையா மாறிக்கிட்டு இருக்கா!

என்ன சொல்றீங்க?

முதல்ல நான்கூட அதிர்ச்சியானேன். ஆனால் அறிகுறிகள்லாம் அப்படித்தான் இருக்கு!

அறிகுறிகளா?

ஆமா டாக்டர்! முதல் அறிகுறி காலையில் எழுந்திருக்கும் போதே தெரியுது. பக்கவாட்டுல இருந்து உடலைத்திருப்பி தன்னோட துதிக்கையைத் தூக்கி அப்படியே யானை மாதிரியே எழுந்து நிக்கிறா டாக்டர்! குளிக்கறப்ப தலையில மண்ணைப் போட்டுக்குறா!

அப்படியா?

ஆமா டாக்டர்! வாழைப்பழம் டஜன்டஜனா முழுங்குறா...மத்தியானம் உருண்டை பிடிச்சு லபக்லபக்குனு வாயில போட்டு அவ சாப்பிடறத பார்க்கணுமே! நிஜ யானை தோத்துடும் டாக்டர்!

இதை வச்சா யானையா மாறிட்டிருக்காங்கன்னு சொல்றீங்க?

எந்நேரமும் துதிக்கையால் தண்ணீர் உறிஞ்சிற மாதிரி தண்ணி குடிச்சிட்டே இருப்பா. தினம் ஒரு இருபது லிட்டர் தண்ணி கேன் வாங்க வேண்டி இருக்கு. கீரை சாப்பிடறேன்னு ஏதேதோ இலை தழையப் பரப்பிவச்சிட்டு சாப்பிடறா

தண்ணீர் குடிக்கிறதயும் கீரை சாப்பிடறதையும் வச்சு அவங்களை யானைன்னு சொல்றதா?

பக்கத்துவீட்டு சின்னக் குழந்தையை முதுகுல வச்சு சவாரி போய்ட்டு இருந்தா, கீழே விழ வச்சிருவாளோன்னு பயந்து என் பையனைக் கூப்பிட்டு அந்த குழந்தையத் தூக்கிட்டு போய் அவங்க வீட்டுல விடச்சொன்னேன் டாக்டர். அதுக்கு என்னைப் பார்த்துக் கோபமா அவ கத்தினது கூட்டமா நாற்பது யானை பிளிறல் சத்தமாத்தான் கேட்டது.

பிளிறலா?

டாக்டர் சொன்னா நம்பமாட்டீங்க. யானை மாதிரி காலைத் தூக்கி வீட்டு வேலைக்காரம்மாவ மிதிக்கப் போய்ட்டா, நான்தான் தடுத்துக் காப்பாத்தினேன்.

மிதிச்சாங்களா?

இல்லை அவ மிதிச்சா அந்த அம்மா காலி, என் பொண்டாட்டி கொலை கேஸ்ல உள்ள போயிருப்பா! நல்ல வேளை அந்நேரம் நான் வீட்டில் இருந்ததால் அவங்க தப்பிச்சாங்க!

ஊஹும். என்ன இருந்தாலும் நீங்க சொல்றத என்னால ஏத்துக்கவே முடியல!

டிவில கும்கி படத்தைப் எத்தனை தடவைன்னு கணக்கில்லாம போட்டாலும், எப்பவுமே பார்க்கிறா! யானை திரைப்படங்களைப் பார்த்தது போதாமல், டிஸ்கவரி, அனிமல் பிளானட் சேனல்களிலும் யானையைப் பத்தின ஷோ பார்ப்பா. எங்க வீட்டுக்கு வந்து பாருங்க, பிள்ளையார் சிலையும், யானை பொம்மையும் தான் ஷோகேஸ் முழுதும் அடுக்கி வச்சிருப்பா! பையனுக்குக்கூட யானைக்கதை தான் சொல்லுவா!"

ம்ஹூம்!

நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்க. நீங்களே அவளைப் பார்த்தால்தான் நம்புவீங்க!

சரி அவங்களைக் கூட்டிட்டு வாங்க பார்க்கலாம்!

டாக்டர் அவளைப் பார்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். அவ இப்படி யானையா மாறிட்டு இருக்கிறது பற்றி அவளுக்கே தெரியாது. அவளை ஏமாத்தி தான் கூட்டிட்டு வந்தேன்!

என்ன சொன்னீங்க?

வீட்டுல சமைக்க வேண்டாம், பிரியாணி சாப்பிட போலாம்னு சொல்லிட்டு, போற வழில சைக்யாட்ரிஸ்ட்டா இருக்கிற என் பிரண்ட் ஒருத்தரைப் பார்க்கணும்ன்னு இங்கே அழைச்சிட்டு வந்தேன்.

சரி! நானும் அப்படியே சொல்லி அவங்ககிட்ட பேசுறேன்.

"கிளிங்!கிளிங்!"

டாக்டரின் உதவியாளர் உள்ளே வர,

"பழனி! இவரோட மனைவி வெளில உட்கார்ந்து இருப்பாங்க! அவங்களைக் கூப்பிடுங்க!"

"சார்! மேடம் பேர் என்ன?"

"கஜலட்சுமி!"

அவர் வெளியே சென்றதும்..

"பார்த்தீங்களா டாக்டர்! பேர்கூட பொருத்தமா!"

அமைதி ராஜேந்திரன். உங்க மனைவி உள்ளே வரட்டும். எதுவும் பேசவேண்டாம்.

பழனி உள்ளே வந்து, அப்படி யாரும் வெளில இல்ல சார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.