(Reading time: 30 - 59 minutes)

2017 போட்டி சிறுகதை 79 - தெய்வத்தின் நலம் வேண்டி... - சித்ரா.வெ.

This is entry #79 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புச் சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - சித்ரா.வெ.

Fixing broken heart

"ங்க திரும்ப போகனும், அவங்களை திரும்ப பார்க்கனும்னு என்ன அவசியம் இருக்கு தாமரை... இதெல்லாம் உனக்கு தேவையா..??" என்று தன் தோழி சொல்வதைக் கூட காதில் வாங்காமல், பயணத்திற்கு தேவையான துணிமணிகளை ட்ராவல் பேகில் அடுக்கிக் கொண்டிருந்தாள் தாமரை...

"நான் சொல்றதை கேக்கறியா..? இல்லையா..??" காயத்ரி கொஞ்சம் கோபமாக கேட்டதும் தான் தாமரை அவளை ஏறெடுத்துப் பார்த்தாள்...

"அவங்க எப்படி இருக்காங்களோ... அவங்களுக்கு என்ன ஆச்சோன்னு... அடிக்கடி யோசிச்சு வருத்தப்பட்டிருக்கேன்... இப்போ அவங்கள போய் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு... அப்புறம் போகறதுல என்ன பிரச்சனை காயூ... நான் என்ன தனியாவா போகப் போறேன்... பிரகாஷும் கூட வராரே.. அப்புறம் என்ன பயம்..??"

"அதில்ல தாமரை... உன்னோட கல்யாணம் முடிவாயிருக்க இந்த நேரத்துல அங்க போகனுமா..?? அதுவும் பிரகாஷை கூட்டிட்டுப் போகப்போறதா சொல்ற... இது எதுவும் எனக்கு சரியாப்படலை தாமரை...

"பிரகாஷுக்கு தான் எல்லாம் தெரியுமே காயூ... அப்புறம் என்னப் பிரச்சனை...??"

"இப்போ பிரகாஷுக்கு பரந்த மனசா இருக்கலாம்... ஆனா எப்பவுமே அப்படி இருப்பாரா..?? பிற்காலத்துல இதனால ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா..??"

"பிரகாஷ்க்கிட்ட எல்லாம் உண்மையும் சொல்லிட்டேன்... அவரும் என்னை தப்பா நினைக்கல... எல்லாம் தெரிஞ்சப்பின்னும் என்னை கல்யாணம் செஞ்சுக்கறதா அவர் சொல்லிட்டார்... ஆனா மும்பைக்கு போய் அவங்களை பார்க்கனும்னு சொன்னது அவர் தான்... அவ்வளவு பரந்த மனசு இருக்கும் பிரகாஷ் பிற்காலத்துல மாறமாட்டாரு காயூ... நீ பயப்படாத...

இப்போ இந்த அளவுக்கு நான் படிச்சு, என்னோட சொந்த காலில் நிக்கறதுக்கும், பிரகாஷ் மாதிரி ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கறதுக்கும் காரணமே யோகிம்மா தான்... அன்னைக்கு அவங்க மட்டும் இல்லாம போயிருந்தா... நான் எந்த மாதிரி ஒரு நிலைமைல இருந்திருப்பேன்னு நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது... அவங்களை நான் தெய்வமா தான் பார்க்கிறேன்...

பாவம் அன்னைக்கு எனக்கு உதவி செய்யப் போய்... அவங்களுக்கு ஆபத்து வந்துடுச்சு... அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கூடத் தெரியல... ஒரு தடவை அவங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சா... அவங்களுக்கு நன்றி சொல்லனும், அவங்க காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கனும்... இப்படியெல்லாம் நான் எத்தனை நாள் நினைச்சிருக்கேன் தெரியுமா..?? இப்போ இதுக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு... அதுவும் பிரகாஷே அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு... அதை நான் தவறவிட விரும்பலை காயூ....  ப்ளீஸ் புரிஞ்சுக்கோ..."

ரு வழியாக காயத்ரியை சமாதானப்படுத்திவிட்டு, பிரகாஷுடன் மும்பைக்கு ரயில் ஏறினாள் தாமரைச் செல்வி.... மும்பையை சென்றடைந்ததும், ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுத்து, குளித்து தயாராகி யோகியை பார்க்க கிளம்பினார்கள்...

தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை ஆட்டோக்காரரிடம் பிரகாஷ் கூற, அந்த ஆட்டோக்காரர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்... பின் இருவரும் ஏற, அந்த ஆட்டோ அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது...

இவ்வளவு நேரம் யோகியை பார்க்கும் ஆவலில் தாமரைக்கு ஒன்றும் தெரியவில்லை... ஆனால் அந்த இடத்திற்கு செல்ல செல்ல மனதில் ஏதோ பயம் குடி கொண்டது...  அந்த ஆட்டோக்காரர் வேறு ஒரு மாதிரியாக பார்த்தது அவளுக்கு உறுத்தலாக இருந்தது... ஏனோ பழசெல்லாம் அவளுக்கு அந்த நேரம் ஞாபகத்திற்கு வந்தது...

வள் ஒன்பதாம் வகுப்பு படித்த போது, அவள் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மனோஜ் திடிரென்று ஒருநாள் அவளிடம் காதல் கடிதத்தை நீட்டினான்... அதுவரைக்கும் அவளை பார்வையாலேயே விரட்டிக் கொண்டிருந்தவன், திடிரென்று காதல் கடிதம் கொடுத்ததும் முதலில் பயந்து தான் போனாள்... ஆனால் அதையும் மீறி மனசுக்குள் சாரல் மழை... இருந்தும் அவன் காதலை ஏற்கவும் தயக்கம்...

அவளின் தோழிகள் இருவரும், அந்த மனோவின் நண்பர்களை தான் காதலிக்கின்றனராம்... மூன்றுப் பேரும் நண்பர்களாக இருக்கும் அந்த மூன்று பேரையும் காதலித்து மணந்துக் கொண்டால், காலம் முழுவதும் பிரியாமல் இருப்பார்களாம்... அவர்கள் தோழிகள் எடுத்துரைக்க, அந்த மனோஜின் காதலை தாமரை ஒப்புக் கொண்டாள்...

அவள் பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் வரை அந்த காதல் தொடர்ந்தது... அந்த மனோஜோ படிப்பு சரியாக வராமல், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து, அவனின் தந்தையோடு கட்டிட வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தான்... தாமரையின் தந்தையோ ஒரு பெரிய ரைஸ் மில்லுக்கு சொந்தக்காரர்... பெற்றோர்கள் இருவருமே கண்டிப்பானவர்கள்... அவர்கள் அறியாமல் திருட்டுத்தனமாக இத்தனை வருடம் காதலை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்...

ஆனால் யாரோ ஒருவர் மூலம் இந்த காதல் விஷயம் அவளின் வீட்டாருக்கு தெரியவும் வந்தது... தெரிந்ததும் அவளை அடித்து, உதைத்து, வீட்டிற்குள் சிறை வைத்து, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்ததும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்... காவலோடு தான் பள்ளிக்குச் சென்று வந்தாள்...

பொதுத் தேர்வு ஆரம்பிப்பதற்குள்ளேயே அவளின் திருமணத்தையும் நிச்சயம் செய்துவிட்டனர்... தேர்வு முடிந்த ஒரு வாரத்தில் திருமணம் என்று தேதிக் குறிக்கப்பட்டது... தேர்வையும் ஓரளவுக்கு தாமரை நன்றாக எழுதினாள்...

தாமரையை பொறுத்தவரை இந்த காதல் சரியா..?? இந்த காதல் கை சேர்ந்தால் இவளின் எதிர்காலம் நன்றாக இருக்குமா..?? மனோஜ் உண்மையாக தான் நேசிக்கிறானா..?? இவளுக்காக எதையும் எதிர் கொள்வானா..?? என்ற எதை பற்றியும் யோசிக்கவில்லை...

திரைப்படங்களையெல்லாம் பார்த்து, காதலித்தவனையே மணக்க வேண்டும் என்ற உறுதி மட்டும் அவளுக்கு இருந்தது... அவளின் பெற்றவர்களும் இந்த சூழ்நிலையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று தெரியாமல், அவளை இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள்... அதன்விளைவு தாமரை அந்த மனோஜை திருமணம் செய்துக் கொள்ள வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.