(Reading time: 3 - 6 minutes)

2017 போட்டி சிறுகதை 108 - அக்னி - நீர்ஜா

This is entry #108 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை – முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - நீர்ஜா

bookGirl

க்னி ப்ரியா விற்கு அன்று காலை எழுந்திருக்கவே மனமில்லை ஒன்று அன்றய நாள் “monday” மற்று ஒன்று ஏனோ மனம் சோர்வாக இருந்தது. ”பேசாம ஆபீஸ் க்கு லீவு போட்டரலமா?“ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு உடனே அவள் TL கடாமூஞ்சு தருண் சொன்ன “இந்த வாரம் ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் டெலிவரி இருக்கு இந்த வாரம் லீவு போட்டால் weekend யில் composition baseல வொர்க் பண்ணனும்” நினைவுக்கு வந்தது.

அடிச்சி பிடிச்சி மற்ற வேலைகளை முடித்து கொண்டு dio வை start செய்து கிளம்பினாள்.

அக்னி சென்னை இல் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் இருக்கும் ஒரு MNCயில் வேலை பார்க்கிறாள்.

அக்னி செங்கல்பட்டு சுங்க்ச்சாவடியை கடந்து செல்லும் போது தான் அங்கே நின்று கொண்டு இருந்த கார் ஒன்றை கவனித்தாள். காரின் பின் சீட்டின் மூடிய விண்டோ வில் இரண்டு பிஞ்சு கைகள் மணிகட்டு கட்டிய நிலையில் தட்டி கொண்டு இருந்தது சிறிது நேரத்தில் கார் நெடுஞ்சாலையை விட்டு பிரிந்து எங்கோ உள்ளே சென்றுகொண்டு இருந்த்தை கவனித்தாள்

இப்போது அந்த பிஞ்சு கைகளை இரண்டு இரும்பு கைகள் சிறை பிடித்து இருந்ததை கண்டு சற்றே சுதாரித்து அந்த காரை பின் தொடர முடிவு செய்து தன் தோழி மான்வி க்கு தகவல் சொல்ல கால் செய்தால் பிசி என வந்தது

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த குழந்தைக்கு ஆபத்து என்றுணர்ந்து அவசரமாக மான்வி க்கு “urgent pls follow me through track my friend app” என்று messageஐ தட்டி விட்டு காரை பின் தொடர்ந்தாள்.

மான்வி யின் அன்னை போலீஸ் ஆபீஸர் அவர் செங்கல்பட்டில் வேலை செய்வதாலும் தினமும் மான்வியை ட்ரொப் செய்வது வழக்கம் அவர்கள் வரும் நேரம் தான் என்பதாலும் போலீஸுக்கு தகவல் சொல்ல………

டேய் என்ன டா இது??” என்று இனியன் ஹாலில் கத்திக் கொண்டு இருந்ததை கேட்ட மஹி “அய்யயோ நேத்து நம்ம அவன் மரூன் சட்டய போட்டு துவைகாம perfume அடிச்சி பீரோ ல வச்சத கண்டுபிடிச்சிடானோ!!“ என்று யோசித்து கொண்டே ரூமில் இருந்து ஹலிற்கு வந்தவன் கெவின் கையில் இவன் எழுதிய கதையை பார்த்து கொண்டு இருப்பதை கண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“அய்யா ஒட writer அவதாரம் மச்சான்” என்றவாறு இல்லாத காலரை தூக்கி பெருமை அடித்து கொண்டான் மஹி.

பதிலுக்கு இனியனின் முறைப்பை பெற்று கொண்டான்.

“முறைகாத மச்சான் காமெடியா இருக்கு” என்றவாரே இனியனின் அருகில் இருந்த சோஃபா வில் அமர்ந்தான்

“cool dude சொல்லு எதுக்கு கத்துன? கதை நல்லா இல்லயா?”.

“நல்லா இருக்கு மச்சான் பட் என்ன என்னை மாதிரி ஒரு ஹீரோ இருந்து இருந்தா இன்னும் இன்டெர்ரெஸ்டிங்கா வேற லெவெல் ல இருந்து இருக்கும்” என்றவாறு பெருமூச்சு ஒன்றை விட்டான் இனியன்.

இப்போது முறைப்பது மஹியின் முறை

“இந்த கதைல அந்த மாதிரி சூழ்நிலைல girls மட்டும் இருந்து ஹாண்டில் பண்ணா எப்படி இருக்கும் பொண்ணுகளுக்கு செல்ஃப் defense எவ்ளோ முக்கியம் நு இந்த கதை மூலமா சொல்லலாம் நு ஒரு thought டா”.

“சூப்பர் மச்சான். நா ஆபீஸ்க்கு கிளம்பறன். அப்டியே துவைகாம பீரோல வச்சியே அந்த சட்டைய எடுத்து லாண்டரிக்கு போடு” நமட்டு சிரிப்புடன் கிளம்பினான்.

“போடா என் மூஞ்சுல்யே முழிக்காத” என்றான் மஹி.

Hi friends.. இது என்னோட முதல் முயற்ச்சி. Chillzeeல ஒரு short story ஆச்சும் எழுதிடனும் ஒரு aim. கதைய படிச்சி பாத்துட்டு உங்க positive and negative comments கொடுங்க friends. கதைல தவறுகள் இருந்தால் மன்னிகவும். thanks to chillzee.

This is entry #108 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை – முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - நீர்ஜா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.