(Reading time: 5 - 10 minutes)

2017 போட்டி சிறுகதை 154 - மண்ணின் மைந்தன் - ராஜஸ்ரீரம்யா

This is entry #154 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - ராஜஸ்ரீரம்யா

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த  நம்ம நட்டுடா மச்சா !...."  என்று குதுகலித்தான்,அங்கிருந்த ஓர் பழைய மாணவன்...

நட்டு என்று அழைக்கப்பட்ட நந்தகோபால் தன் முந்தைய தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஓர் நவநாகரீக யுவனாகியிருந்தான்... நட்டு மெதுவாக நடந்து கூட்டத்தில் ஒருவனாக கலந்தான்... அவனுடைய தோழர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டே ஓர் இருக்கையில் அமர்ந்தான்... அவன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் முன்வரிசையில் விஐபிகள் அமரும் இடத்தில் அவனுடைய சகமாணவனான கோகுல் தூய வெள்ளைவேட்டி அணிந்து ஓர் அரசனின் கம்பீரத்துடன் அமர்ந்திருந்தான்...

நட்டு தன் அருகில் அமர்ந்திருக்கும் தோழனான யாதவிடம் “டேய் மச்சா ! இப்ப ஆடு,மாடு மேய்க்கிறான்னு சொன்ன அவனப் போய் விஐபி சீட்டுல ஊட்கார வச்சிருக்காங்க போல!...” என்று வினவினான்...

யாதவ் பதிலுக்கு “டேய் இன்னத்த நிலவரப்படி அவன்தான்டா டாப்பு (toppu)!சும்மா இருடா என்னசொல்றானுங்கணு கேப்போம்...” என்று தன்  தோழனை அடக்கினான்...

நந்தகோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை.கடந்த கால கல்லூரிக் காலம் அவன் நினைவடுக்கில் வந்தது...நந்துவும்,கோகுலும் படிப்பில் போட்டிபோட்டுக் கொண்டு படிப்பர்...என்னதான் நன்றாகப் படித்தாலும் கோகுலே முதலிடத்தில் வருவான்...இது நட்டுவிடத்தில் பகைமையை வளரச் செய்தது...கோகுலைவிட தான் சிறந்தவன் என்று பிறர்கூற கேட்க விரும்பியவன் நட்டு...இருவரும் ஒன்றாகத்தான் கேம்பஸ் இண்டர்வியு(campus interview)வில் தேர்வானார்கள்...

இருவரும் வெவ்வெறு ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்க ஆரம்பித்தனர்... அவர்களின் உழைப்புக்கு விரைவிலேயே வெளிநாட்டில் வேலைவாய்ப்புக் கிடைத்தது... நடுவில் கோகுல் வேலையை விட்டுவிட்டு விவசாயம் என்ற பெயரில் ஆடு,மாடு மேய்க்கிறான் என்று பிற நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறான்...தீடீரேன வானைப் பிழக்கும் அளவு கைதட்டல்கள் பெரும்

சத்தமாக கேட்க சிந்தனையிலிருந்து விடுபட்டான்...

மேடையில் அவன் பயிலும்போதிருந்த ஹச்ஓடி(HOD)  கோகுலைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்...நட்டு சலிப்பாக அவர் கூறுவதைக்கேட்கலானான்...

ஹச்ஓடி “எனது மாணவனாக கோகுலைக் கூறுவதில் பெருமைக் கொள்கிறேன்... பல மாணவர்கள் ஐடி வேலை மற்றும் வெளிநாட்டு வேலை மீதுள்ள மோகத்தில் நம் நாட்டின் மீதும், நம் கலாச்சார  மீதும்  உள்ள புனிதத்தை மதிக்ககாதிருக்கின்றனர்...ஆனால் கோகுல் நம் நாட்டின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் சாதனை படைத்துள்ளான்...ஓர் சீன விஞ்ஞானி  190 quintal(அளவு) நெல்லை விளைவித்து சாதனைப் படைத்தார்...நம் பீகாரைச் சேர்ந்த ஒருவர் அதனை மீஞ்சும் 224 quintal இருந்தும் பயிரை விளைவித்தற்கான பட்டியல் இல்லாத காரணத்தால் அவரது சாதனையை உலகம் அறியவில்லை...

ஆனால் நம் கோகுல் 254  quintal  அளவுயிட்டி நம் தமிழ்நாட்டுக்கு பெருமைசேர்த்துள்ளார்...

மேலும் மலைபிரதேசங்களில் விளையும் கேரட் போன்ற காய்கறிகளை சமதளத்தில் விளைவித்துக் காட்டியுள்ளார்...வருடவருடம் Alumni meeting  நடத்தும்போது சாதனைப் படைத்தவர்களை பெருமைபடுத்துவோம்...அந்த வகையில் இந்த வருடம் கோகுலைப் பெருமைப்படுத்துவதில் பெருமை அடைகிறோம்!!...அடுத்ததாக கோகுலைப் பேசுமாறு அழைக்கிறோம்...” என்று கூறி அவரது உரையை முடித்தார்...

கோகுல் தனது இருப்பிடத்திலிருந்து எழுந்து மைக்கைப் பிடித்த்து பேச ஆரம்பித்தான்...

கோகுல் “இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்...

நானும் உங்களைப்போல்இருந்தவன்தான்...பிறகு எனது தந்தையின் இறுதி ஆசைக் கிணங்க விவசாயத்தைக் கையில் எடுத்தேன்... பின் அதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து, விவசாயக் கல்லூரியின் ஆலோசனைக்கிணங்க பூமித்தாயை மலடியாக்காமல் இயற்கை உரங்களை பயன்படுத்தினேன்...

ஐடி வேலையும் மற்றும் வெளிநாட்டு வேலையும் தராத ஆத்ம திருப்தியும்,சம்பாதியத்தையும் இதில் அடைந்தேன்... வருடவருடம் பல்வேறு துறைகளில் சாதித்தோரை பாராட்டியதை கேள்வியுற்றிருக்கிறேன்... அதில் விவசாயத்திற்காக முதன்முதலாக பாராட்டப்படுவதில் பெருமிதம் அடைகிறேன்!!... நன்றி...வணக்கம்!..” என்று கூறி முடித்தான்...

இதையேல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நட்டுவுக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் பொய்யான,போலியான வாழ்க்கை உரைத்தது...குடும்பத்தைப் பிரிந்து,உணவாக மாவுகளை உண்டுகொண்டு தான் பிறந்த மண்ணான இந்தியநாட்டை குறைகூறிக் கொண்டு வாழ்வை எண்ணி வருந்தினான்...கோகுலின் மீது இன்று ஏனோ பொறாமையோ,பகைமையோ ஏழவில்லை...அவன் சாதித்ததை கூறும்போது எதோ புதுவகையான சிலிர்ப்பு !...

இன்னும் நம் நாட்டில் நம் பூமித்தாயின்  மைந்தர்கள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... ஏனோ தானும் தன் தொழிலாக விவசாயத்தை மாற்றினால் என்ன???...கம்பியூட்டர் தட்ற கை ஏர்கலப்பையை பிடிக்கக்காதா???...கோகுல மாதிரியே எல்லா இளைஞர்களும் யோசிச்சா வேலையில்லா திண்டாட்டமே இருக்காது...       

அனைவரும் எழுந்து நிற்பது உரைக்க தேசியகீதம் ஓலிக்க அவர்களுடன் எழுந்து தேசத்துக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தான்...                      

 ““ ஜெய்ஹந்த்!!! ””

This is entry #154 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - ராஜஸ்ரீரம்யா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.