(Reading time: 6 - 11 minutes)

2017 போட்டி சிறுகதை 153 - இடுக்கண் களைவதாம் நட்பு - சித்ரா.வெ.

This is entry #153 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - சித்ரா.வெ.

Drinking

போதை மறுவாழ்வு மையம்

ங்கே தீவிர குடிப்பழக்கத்தின் காரணமாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான் ஸ்ரீதர்... அவனுக்கு வயது நாற்பதைந்து.... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான்... மது அருந்திவிட்டால், என்ன செய்கிறோம் என்றே தெரியாத ஒரு நிலைக்கு அவன் வந்துவிட்டான்... அந்த நேரம் மனைவியிடம் தகாத வார்த்தைகளை பேசி அவளை துன்புறுத்துவது... குழந்தைகளிடம் கோபமாக நடந்துக் கொள்வது, அடிப்பது,திட்டுவது... பெற்றோரிடம் மரியாதை இல்லாமல் பேசுவது என்று அவன் நடவடிக்கைகள் இருக்கும்... ஆனால் போதை தெளிந்ததும் இப்படியா செய்தேன்..?? என்று கேட்பான்...

இதனால் அவன் பிள்ளைகள் அவனிடமே செல்ல பயப்படுகின்றனர்... மனைவிக்கு அவன் மீது அன்பும், காதலும் இருந்தும் அந்த நேரம் அவன் மீது அவளுக்கு வெறுப்பு தான் ஏற்படுகிறது... அவன் பெற்றோர் அவனின் நிலை குறித்து வருந்துகின்றனர்... அவனின் உடன்பிறந்தவர்களோ... தங்களுக்கு இப்படி ஒரு சகோதரன் இருக்கிறான் என்று சொல்வதற்கே வெட்கப்படுகின்றனர்..

ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் வரை தன் அன்பான பேச்சாலும், நடவடிக்கைகளாலும் எல்லோர் மனதிலும் நன்மதிப்பை பெற்றவன் தான் ஸ்ரீதர்... சிறுவயதிலிருந்தே எல்லோரிடமும் நட்பாக பழகுபவன்... நட்புக்கும், உறவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பான்...

பள்ளிப் பருவத்திலிருந்தே ஸ்ரீதருக்கு ஒரு பெரிய நட்பு கூட்டமே இருக்கும்.... பள்ளியிலும், கல்லூரியிலும் ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாலோ... இல்லை ஏதாவது பிரச்சனை என்றாலோ... ஸ்ரீதரும் அவன் நட்பு கூட்டமும் தான் முன் நின்று உதவுவர்...

அதேபோல் தங்கள் நட்புக் கூட்டத்தில், யார் வீட்டில் எந்த விசேஷமென்றாலும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்வர்... அதே போல் எந்த பிரச்சனையென்றாலும் முன் நின்று உதவி செய்வர்...

பள்ளி பருவத்தில் அறிமுகமான நண்பர்கள் முதல், இப்போது தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் வரை எல்லோரோடும் இப்போதும் அவன் தொடர்பில் இருக்கிறான்... எந்த ஒரு நண்பனுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் முன் நின்று உதவி செய்வான்... எந்த நண்பன் வீட்டில் எந்த விசேஷமென்றாலும் அழைக்காமலே அவர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துக் கொள்வான்...

இவன் மட்டும் அப்படியில்லை... இவனுடைய சில நண்பர்களும் இவனைப் போல தான்... இவனுக்கு ஏதாவது பிரச்சனையென்றால், உதவி புரிய உடனே முன் வருவர்... இவர்களின் நட்பை பார்த்து எல்லோரும் பொறாமைக் கொள்வர்... நண்பர்கள் என்றால் ஸ்ரீதரும் அவனின் நண்பர்களை போலவும் தான் இருக்க வேண்டும் என்று சொல்வர்..

இன்பத்திலும், துன்பத்திலும் தோள் கொடுப்பவன் தான் நண்பன்... அப்படி நட்பிற்கு ஒரு இலக்கணமாக தான் அவர்கள் நட்பு இருக்கிறது... நண்பர்களின் துன்பத்திலேயே தயங்காமல் பங்கெடுத்துக் கொள்ளும் அந்த நண்பர்கள் இன்பமான தருணங்களை எவ்வளவு மகிழ்ச்சியோடு கொண்டாடியிருப்பர்...??

தன் கல்லூரி காலம் முடியப் போகும்போது பிரிவுக்கு முன் எல்லோரும் கூடி மகிழ்ந்திருக்க ஏற்பாடு செய்த பார்ட்டியில் தான் ஸ்ரீதர் முதன்முதலில் குடித்தான்...

பின் நல்ல வேலை கிடைத்த போது நண்பர்களுக்கு ட்ரீட் என்ற பெயரில் மதுபான விருந்து கொடுத்தான்... அதுபோல் நண்பர்களுக்கும் வேலை கிடைத்த போது அவர்களும் விருந்து கொடுத்தனர்...

இதுமாதிரி அடுத்தடுத்து வெளிநாடு சென்றதற்கு, திருமணத்திற்கு, குழந்தை பிறந்ததற்கு, பிறந்தநாளுக்கு, புது வீடு குடிப்போனதுக்கு என்று மாற்றி மாற்றி எல்லோரும் விருந்துக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர்...

திருமணத்திற்கு முன்பு வரை பெற்றோர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் பார்த்துக் கொண்டான்... அளவாக குடித்தான்... திருமணத்திற்கு பின்பு முதலில் கவனத்தோடு இருந்தவன், பின் கொஞ்சம் அதிகமாக குடித்தான்... மனைவி கேட்டால், நான் என்ன வீட்டை கவனிக்காமல் குடித்துவிட்டு சுற்றிக் கொண்டா இருக்கிறேன்... எப்போதாவது விஷேஷத்தின் போது தானே குடிக்கிறேன்.. என்று சமாதானப்படுத்துவான்...

முதலில் ஏதாவது விஷேஷம் என்றால் குடித்தவன், பின் குடிப்பதற்காகவே விஷேஷங்களை எதிர்பார்த்தான்... அடுத்து வார விடுமுறையில் குடிக்க ஆரம்பித்தவன்... இப்போது முழு குடிகாரனாகவே மாறிவிட்டான்... அதிலிருந்து குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டது...

ஸ்ரீதர் வீட்டுக்கு வரமாட்டானா என்று எதிர்பார்த்த உறவினர்கள், இப்போதோ இவன் ஏன் வருகிறான் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்... பெற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாத நிலை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.