(Reading time: 13 - 26 minutes)

 

சில பல வலி வேதனைகளுக்கு பிறகு சூரியா நரேஷ் தம்பதியினர் மைந்தன் பிறந்தான்.நரேஷ் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அந்த மருத்துவமனை முழுவதும் சாக்லேட் கொடுத்து கொண்டாடினான்.

ஹோர்லிக்ஸ்,ஆப்பிள் என்று தேவை பட்டதெல்லாம் வாங்கி வந்து ஹாஸ்படலினுள்  நுழைந்து கொண்டிருந்த மஹிக்கு பழக்க பட்ட குரல் இரண்டு பேசுவது கேட்டது 

 

"என்ன குழந்த."

 

"ஆண் குழந்தைங்க " 

"என்ன பேர் வெக்க போறீங்க"

 

இப்படி பேச்சு தொடங்கி தேய்ந்து போனது. அது மீரா குரல் தான் மூளை சொல்ல.வேலை முடித்து தேடி வெளியே வந்தவனுக்கு மீரா ஆட்டோக்குள் ஏறுவது தெரிந்தது. மனம் "ஐயோ முகம் பார்க்க முடிய வில்லையே என்றிருந்தது". கடுப்பில் பக்கத்தில் இருக்கும் பூச்செடியை உதைத்தான்.

 

"பார்த்துப்பா ஏற்கனவே அந்த பொண்ணு கால் ஓடசிக்கிட்டு இருக்கு நீயும் ஓடசிக்காத" - சுந்தரம் 

 

அதிர்ந்தவனுக்கு மெதுவாய் “நம்ம ஏட்டு டீ கடைல சொன்னாரு உன்னன பார்க்க ஒரு பொண்ணு வந்ததா...”

 

"அப்பா.."

"நானும் உன் வயச தாண்டி வந்தவன் தான் ப்பா..."

 

"...."

 

"என்னமோ பெயர் கெடுக்காம கௌரவத்த காபத்துங்க ப்பா"

 

"...."

 

"ஒரு அப்பனா இதை தான் பசங்க கிட்ட தான் நான் எதிர் பார்க்க முடியும்"என்று பேச்சை முடித்துக்கொண்டு சென்று விட்டார். 

 

இவர் என்ன சொல்ல வருகிறார்.சம்மதம் என்கிறாரா?? வேண்டாம் என்கிறாரா?? பதில் தெரியவில்லை மஹிக்குள். "என்ன மஹி இப்படி செய்துட்ட  என்று ஒரு நாளும் சுந்தரம் மகேந்திரனிடம் நோக கேட்டதில்லை." ஒரு நாளும் அவன் அப்படி நடந்துக்கொண்டதும் இல்லை. இன்று அவர் பேசியது என்னமோ இதயத்தில் இடியென விழுந்து சுக்கு நூறாக உடைத்தது.

 

சில நாட்களாகவே கவியின் கவனம் இந்த உலகத்தில் இல்லை என்பது மீராவின் கணிப்பு,ஆம் அது உண்மையே. அமைதியாக தொலைகாட்சியை ஓட விட்டுட்டு ஜன்னலை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும் கவி பக்கம் சென்று அமர்ந்தாள் மீரா 

 

"ஏன் கவி என்னமோ மாதிரி இருக்க?" என்று ஆரம்பித்தாள் மீரா

 

".."

 

"சரி அப்பா என்ன சொன்னாரு??"

 

"..."

 

"கவித்த்தா....!!"

 

கவனம் கலைந்த கவிதா கனிவாக 

"சொல்லு மீரா, பசிக்குதா?" என்றாள். அவள் கவனம் நடைமுறையிலே இல்லை என்றதும் 

 

"இல்லை... நீ ஏன் இப்படி இருக்க," என்று உடைந்த குரலில் கேட்டாள் மீரா.

 அந்த குரலில் மீராவின் வருத்தம் தெரிய.அதை தீர்க்க தன் மன பாரத்தை  மடை திறந்த வெள்ளம் போல் கொட்டி தீர்ந்தாள் கவிதா.

 

"அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்..,"

 

மீரக்குள் "ஐயோ" என்று மனம் கூவியது. கண்ணுக்குள் ஆசையாக கவிதாவை ஓரக்கண்ணில் பார்க்கும் கிருஷ்ணா வந்து சென்றான். 

 

சில மௌனமான நிமிடங்களுக்கு பிறகு தொடர்ந்தாள் கவி 

 

"எம்.இ படித்து அரசாங்க வேலையில் ஏ.இ ஆக இருக்கும் என் அக்காவை  அவங்க மாமியார்  வீட்டில் வேலைகாரி மாதிரி நடத்துறாங்க மீரா.., என் மாமாவிற்கும், அவங்க அம்மாவிற்கும்  அக்கா சம்பாதிக்கிற  பணம் மட்டும் வேண்டும்,அதே சமயம் வீட்டில் எல்லா வேலையும் செய்யணும்.., இதுல மலடினு பட்டம் வேற!!! அக்கா சிரிச்சி பல நாள் ஆகிருக்கும் போல!! பயமா இருக்கு மீரா இதெல்லாம் பார்க்க கல்யாணமே பயமா இருக்கு!!!" என்று வெறுத்து பேசினாள் கவி.

 

மீராவிற்கு இரத்தம் கொதித்தது  இதை கேட்டு. வீரமாக பேச போன மீராவை பேச விடாது கவி தொடர்ந்தாள் "கிருஷ்ணா அப்போ கேட்டப்போ வேணா என்று சொல்லிட்டேன் ஆனால் அதுக்கு அப்பறம் அவனை  நினைக்காம இருக்க முடியல மீரா!!! கடல் தாண்டி அவளோ தூரத்துல இருந்தாலும் அவன் என் கூடவே இருக்கிற மாதிரி இருக்கு.அவன் சொல்லி நான் வேண்டாம் சொன்னதுக்கு அப்பறம் ஒரு நாள் கூட என்னை அவன் தொந்தரவு பண்ணாதே இல்லை, இப்பவும் போன் செய்தால் உன்னை பத்தி மட்டும் தான் கேக்கறான்,பேசறான்..என் நல்லதே யோசிக்கிறான்.அவன் மேல என் மனசு படருது மீரா!! இது காதல்ன்னா நான் அவனை காதலிக்கிறேன் , எனக்கு உதவி செய்" என்று மீராவின் கையை பிடித்து கவி அழவும் மீரா வார்த்தையின்றி தவித்தாள்.

 

நண்பன் மீது கோபம் தான்.ஆனால் அவன் வாழ்க்கை பிரச்சனை இது என்றதுமே மீராக்குள் கோபம் மறைந்தது.அவன் வாழ்விற்கு விடுவு காண தோன்றியது.கிருஷ்ணா சிறு வயது முதலே மீராவிற்கு விட்டு கொடுத்து பழகினவன்.அது அவனிடம் சண்டை என்று வந்த பின்பு தான் மீராக்குள் புரிந்தது.அதுவே அவனக்கு அவன் ஆசைப்படும் வாழ்வை ஏற்படுத்தி கொடுக்க தூண்டியது.  இருவரும் சேர்ந்து உட்கார்ந்து எனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பேசிகொண்டது கிடையாது.அங்கே செய்கையில்  புரிதல் தான் இருந்தது.அப்படி தான் அவனுக்கு கவிதாவிடம் ஈர்ப்பு உண்டு என்று மீரா தெரிந்துக் கொண்டதும் .அதை பற்றி அவள் அவனிடம் கேட்டதே இல்லை.தெரியாது என்பது போலவே தான் காட்டி கொண்டிருந்தாள்.

 

இன்று கவிதா வாய் விட்டு கேட்டதும் அவள் மனதை காட்டியதும் மீராக்குள் தன் நண்பனுக்கு நல்ல வாழ்வு அமைய போவது எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது.

 

இதில் இன்னொரு குதுகலம் என்னவென்றால்,கிருஷ்ணாவின் படிப்பு முடிந்து இரண்டு மாதங்களில் இந்தியா திரும்புகிறான். அவன் வந்த பின் இவர்களை சேர்த்து வைத்து  விட வேண்டும்.அதற்குள் ராம் கீர்த்தனா திருமணம் முடிவு ஆகியிருக்கும். பாசமான தோழிகளுக்குக்காக எவ்வளவு அழகான வர்ணமயமான எதிர்காலம் என்று வியப்பாய் கற்பனை வளர்ந்துக்கொண்டே போனது. ஓரமாய் மனம் சத்தமாக "அப்போ நீ என்ன செய்ய போற மீரா" என்று கேட்டது.தானாய் பெருமூச்சு வந்தது மீராவிற்கு.

 

"முடியுமா என்ன!! இன்னொரு ஆணை கல்யாண பண்ணிக்க.!! மனம் முழுக்க ஒருவனை நினைத்துக்கொண்டு!!  ஏளனமா அவன் பார்க்கும் போது கூட மனசு அவன் பின்னாடி தானே அலைகிறது.இதில் எப்படி இன்னொருவனை ஏற்எடுத்து  பார்ப்பது. அரை மயக்கத்தில் இருந்த போதே  அவன் கையை பிடித்ததுக்கே உதறி விட்டானே!!" மூளை திரும்ப புள் மேய செல்ல எண்ணங்களை மாற்ற பாடுபட்டுப் போனாள் மீரா.

 

ஆயிரம் கவிதைகள் ரசிக்க சுழலும் உலகில் உண்டு. உன்னை ரசிக்க ஒரு கவிதை உண்டு.அதை காதல் அழகாய் எடுத்து காட்டும். விலக விலக விஷவரூபம் எடுக்கும் ஒன்று உண்டு அது இந்த  காதல் மட்டுமே .அழுத்தி பிடித்தால் இறந்து போகும்.தளர்த்தி விட்டால் பறந்து போகும் பட்டாம் பூச்சி காதல். புயலுக்கும் பூ கொடுத்து வரவேற்ப்பு கொடுக்கும் அன்பு பெண்மையின் அடையாளமென்ரால்,அன்பை பொழியும் பெண்மையிடம் தோற்பது ஆண்மையின் அடையாளம். காதல் வெற்றி மானிட இனத்தின் பக்குவத்திற்கான வெற்றி.  

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 04

Go to Ninaikkatha naal illai rathiye 06

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.