(Reading time: 16 - 32 minutes)

தற்குள் சந்துருவும் இனியாவும் நல்ல நண்பர்களாகி போனார்கள். சந்துரு இனியாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான். வீட்டில் அம்மா இப்படி சொன்னங்க, என் காலேஜ் பிரண்டு போன் பண்ணான், இப்படி ஆரம்பித்து இப்போது எல்லாவற்றையும் கூறுகிறான். ஆனால் இன்னும் அவன் அவனுடைய காதலை பற்றி மட்டும் பேசவில்லை.

சந்துருவே அவன் காதலை பற்றி கூறினால், அதிலிருந்து பிரச்சனை என்னவெண்டு அறிந்துக் கொண்டு அதற்கேற்றார் போல் செய்யலாம் என்று இனியா எண்ணி இருந்தாள். ஆனால் அவனோ ஊரில் உள்ள எல்லாவற்றையும் பற்றி பேசுகிறான். அவனின் பழைய கல்லூரி கலாட்டாக்களை பற்றி கூறுகிறான். இப்போது தினமும் நடக்கும் விசயங்களை பற்றி எல்லாம் கூறுகிறான். ஆனால் அவன் காதல், அதை பற்றி பேசவே இல்லை.

இனியாவிற்கு முக்கியமாக, பிரச்சனை என்னவெண்டு அறிந்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து ஸ்வேதா மேல் தப்பா அல்லது இளவரசன் தான் தவறாக புரிந்து கொண்டுள்ளானா என்று அறிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் சந்துரு அதைப்பற்றி வாய் திறந்தால் தானே.

அவளுக்கு எப்படியும் இளவரசன் தான் தவறாக புரிந்து கொண்டிருப்பான் என்று தோன்றியது. ஆனால் நூற்றில் ஒரு வாய்ப்பாக அவன் மேல் தவறு இல்லாமலும் இருக்குமா என்று ஆசையாக இருந்தது. சரி பொறுத்திருந்து பாப்போம் என்று அதை அப்படியே விட்டிருந்தாள்.

இப்படியே ஒரு மாதம் கழிந்த பிறகு இளவரசனிடம் இருந்து இனியாவிற்கு காலையில் குட் மார்னிங் மெசேஜ் வராமல் இருந்தது. அதற்கு முன்பு பத்து நாட்களாக குட் மார்னிங் மெசேஜ் காலை ஒரு நான்கு மணிக்கே வந்திருக்கும். அதனால் இனியாவிற்கு எழுந்த உடனே அந்த மெசேஜ் பார்த்து அதற்கு ரிப்ளை செய்வது தான் முதல் வேலையாக இருக்கும். ஆனால் இன்று ஏன் வரவில்லை என்று எண்ணி தான் மட்டும் மெசேஜ் அனுப்பினாள்.

அவள் மெசேஜ் செய்து ஒரு அரை மணி நேரம் ஆன பிறகும் மெசேஜ் வராமல் இருக்கவே திரும்ப மொபைலை எடுத்து மெசேஜ் மெமரி புல் ஆகி விட்டதோ என்று எண்ணி பழைய மெசேஜ்களை எல்லாம் டெலிட் செய்தாள். இருந்தும் மெசேஜ் ஏனோ வரவில்லை.

ன்று மதியம் வரைக்கும் இனியாவிற்கு மெசேஜ் வரவே இல்லை. அதற்கு மேல் இனியாவிற்கு பொறுப்பதற்கு பொறுமையும் இல்லை. எனவே மொபைலை எடுத்து இளவரசனுக்கு அழைத்தாள். ஆனால் அவனோ எடுக்கவில்லை. திரும்ப ஒரு முறை அழைத்து பார்த்தும் அவன் எடுக்கவில்லை. இனியாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இந்த ஒரு மாதத்தில் அவன் மெசேஜ் அனுப்பாத நாளே இல்லை. அதுவும் பெரும்பாலும் அவன் தான் முதலில் அனுப்புவான். அவள் கூட எண்ணுவாள், அவன் எவ்வளவு பிஸியாக இருப்பான். அதிலும் இப்படி அவளை நினைவு வைத்து மெசேஜ் செய்கிறானே என்று. அப்படி இருந்து விட்டு இப்போது காலையில் இருந்து அவன் மெசேஜ் வராமல் இருந்தது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

இப்படி அவள் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கும் போதே இளவரசனே இனியாவை அழைத்தான். இனியா மிகவும் சந்தோசமாக போனை எடுத்து உற்சாகமாக “ஹலோ, ஏன் எனக்கு காலைல இருந்து ஒரு மெசேஜ் கூட செய்யல” என்று கேட்டு முடித்தாள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக இளவரசனின் குரலில் உற்சாகமே இல்லை. “இல்லை. கொஞ்சம் வொர்க் ரொம்ப அதிகமா இருந்தது. அதான் மெசேஜ்  செய்ய முடியல சாரி. என்று சொன்னான்.”

“ஓ. ஓகே. ஏன் உங்க வாய்ஸ் ரொம்ப டல்லா இருக்கு. வொர்க் ரொம்ப அதிகமா. உங்க உடம்பையும் கொஞ்சம் பாத்துகோங்க.”

“ம்ம். ஒரு காண்ட்ராக்ட் சைன் ஆகனும். அதோட பேச்சுவார்த்தை இழுத்துட்டே இருக்கு. சோ மூட் கொஞ்சம் சரி இல்ல. நேத்து லோட் வந்து இறங்கனதுல கொஞ்சம் பிரச்சனை. அதனால நைட் தூக்கம் போச்சி. இப்போ இந்த காண்ட்ராக்ட் ப்ராப்ளம்.” என்று சொல்லிக் கொண்டே போனான்.

இடையிட்ட இனியா “சரி நீங்க சாப்பிட்டீங்களா” என்றாள்.

“இன்னும் இல்ல இனியா. சாப்பிடனும்”

“ம்ம். காலையில சாப்பிடீங்களா.”

“இல்ல இனியா. சாப்பிட டைம் இல்ல”

“ஓ காட். இன்னுமா சாப்பிடல. முதல்ல போய் சாப்பிடுங்க”

“ம்ம். இனியா. நான் ஒன்னு சொல்வேன். கொஞ்சம் தப்பா எடுத்துக்க மாட்ட இல்ல”

“அதெல்லாம் மாட்டேன். என்ன சொல்லுங்க”

“நீ கொஞ்சம் புரசைவாக்கம்ல இருக்கிற எங்க ஷோரூம்க்கு வரியா. ஐ ஜஸ்ட் பீல் பேட். நீ கொஞ்சம் என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. உனக்கு ப்ராப்ளம் இல்லனா கிளம்பி வரியா. அப்படியே நான் உன் கூட லஞ்ச் சாப்பிடுவேன்”

இனியாவிற்கு கடைசி வாக்கியத்தை கேட்கறதுக்கு முன்ன வரைக்கும் வரலன்னு சொல்ல தான் தோணிற்று. பட் அவன் சாப்பிடறது பத்தி பேசனதுக்கு அப்புறம் இன்னும் இளவரசன் சாப்பிட கூட இல்ல. இப்ப நாம வரலன்னு சொல்லி கஷ்டபடுத்த வேண்டாம். என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தானே கூப்பிடறாரு. அதனால போகலாம்னு முடிவு செய்து “வரேன்” என்று ஒப்புக் கொண்டாள்.

இனியா புரசைவாக்கத்தில் அரசன் ஷோரூமிர்க்கு சென்ற போது மணி 1.45. இனியா டிராபிக்கில் மாற்றிக்கொண்டு வருவதற்கு லேட் ஆகியது. அதற்குள் இளவரசனிற்கு போன் செய்து விவரம் கூறிவிட்டு, நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. உங்க வாய்ஸ்லயே அது தெரியுது. நான் வரர்துக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல. அதுக்குள்ளே நீங்க சாப்பிடுங்க. நான் வந்துடறேன் என்று எவ்வளவோ கூறியும் அவன் அதற்கு மறுத்து விட்டான்.

இனியா அந்த கடைக்குள் சென்று விட்டு எங்கு செல்வது என்று ஒன்றும் புரியவில்லை. அதற்குள் கடை சிப்பந்திகள் வந்து என்ன மேடம் வாங்கணும், சுடிதார் 2nd  ப்ளோர், சாரீஸ்னா 1st ப்ளோர் என்றார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று விழித்துக் கொண்டிருக்கையிலே இளவரசனே நேரில் வந்து அவளை அழைத்து சென்றான்.

“என்ன இனியா. என்னை பார்க்க வந்ததாக கூற வேண்டியது தானே. அதை விட்டு விட்டு, நீ சுடிதார் வாங்க வந்தது போல் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்” என்றான்.

“இல்லை. எப்படி அவர்களிடம் உங்களை பார்க்க வந்ததாக கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தி வந்து எம்.டி. யை பார்க்க வந்ததாக கூறினால் என்னை நேராக அழைத்து வந்து விடுவார்களா என்ன. வீணாக எதற்கு அவமானப்பட வேண்டும் என்று எண்ணினேன். அது தான் உங்களுக்கே கால் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்”

“என்ன யாரோ ஒருத்தி என்று உன்னை அவமதித்து விடுவார்களா. அப்படி யாரேனும் செய்தால் அவர்களை உடனே வேளையில் இருந்து தூக்கி விட மாட்டேன்” என்று ஆவேசமாக கூறினான்.

“பொறுங்கள் பொறுங்கள். அப்படி செய்தால் தான் எனக்கு உங்கள் மேல்  கோபம் வரும். இப்படி முதலாளியை பார்க்க வேண்டும், எனக்கு அவர் தெரிந்தவர் தான் என்று தினமும் எத்தனை பேர் வருவார்கள் தெரியுமா, அவர்களை எல்லாம் உங்களிடம் கூட்டி வந்தால் தால் தான் நீங்கள் அவர்களை வேலையை விட்டு தூக்குவீர்கள். எதற்கு இந்த ஆவேசம்.”

“சரி அதை விடு. வா. முதலில் என் அறைக்கு செல்வோம்” என அவன் அறைக்கு இனியாவை கூட்டி சென்றான்.

இனியாவிற்கு அந்த அறை மிகவும் பிடித்திருந்தது. அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

“காண்ட்ராக்ட் கையெழுத்தாகி விட்டதா”

“இன்னும் இல்லை. பேச்சுவார்த்தை இப்போது முடிவதாக தோன்றவில்லை”

“அவர்கள் எல்லோரும் எங்கே. இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என்றால் அவர்கள் இங்கு தானே இருக்க வேண்டும். எங்கே அவர்கள்”

“அவர்கள் லஞ்ச்சிற்காக வெளியே சென்றிருக்கிறார்கள்”

“என்ன பிசினஸ் லஞ்ச். வழக்ககமாக உங்களுடன் தானே நடக்க வேண்டும். நீங்கள் ஏன் அவர்களை மட்டும் வெளியே அனுப்பினீர்கள்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.