(Reading time: 16 - 32 minutes)

“இல்லை இனியா. அவர்கள் பாரீனில் இருந்து வந்துள்ளார்கள். நம் இந்திய கலாச்சாரமான உடைகளை எக்ஸ்போர்ட் செய்வதற்காக தான் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. அப்படி பாரினில் இருந்து வருபவர்களுக்கு நம் இந்திய உணவின் மேல் அதிக நாட்டம் இருக்கும் அல்லவா. அதான் விதவிதமான இந்திய உணவு கிடைக்கும் ஹோட்டலிற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளேன்.”

“என்ன இளா சொல்றீங்க. பிசினஸ் லஞ்ச் எதுக்கு ஒன்னா சாப்பிடறாங்க, மத்த டைம்ல பிசினஸ் பத்தியே பேசி அவங்க கூட உங்களால பிரீன்ட்லியா இருக்க முடியாது. ஒரு பிரீன்ட்லி டச் இருந்தா தானே உங்க பிசினஸ் நல்லா போகும். நீங்க தான் அவங்களை வெளியில கூட்டிட்டு போயிருக்கனும். அவங்க கூட உங்களுக்கு ஒரு பிரீன்ட்லி ரிலேடன்ஷிப் இருந்தா உங்க பிசினஸ் இன்னும் ஸ்மூத்தா போகும் இல்ல. நீங்க ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க.”

“ஓகே. ஓகே. நான் நேத்துல இருந்து ரெஸ்ட்லஸ்ஸா இருந்தேன். அதான் என்னால அவங்க கூட போக முடியல. என்னோட அசிஸ்டன்ட் கூட அனுப்பி இருக்கேன். அவன் எல்லாத்தையும் பாத்துப்பான்”

“இளா நீங்க முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும். நீங்க எவ்வளவோ டையர்டா இருந்தும் இப்ப இந்த கான்பிரன்ஸ்க்கு ஏன் வந்திருக்கீங்க. உங்களுக்கு இந்த ஆர்டர் வேணும்ங்கறதால தானே. நம்மால முடியலைன்னா ஒரு வொர்க்குக்கு வர கூடாது. வந்துட்டா அத புல்லா செய்யணும்.”

“உங்க கூட கான்ட்ராக்ட் சைன் பண்ண வந்தாங்கள நீங்க எப்படி இப்படி உங்க அசிஸ்டன்ட் கூட அனுப்புவீங்க. அங்கங்க பிசினஸ் தக்க வச்சிக்க என்னெல்லாம் பண்றாங்க. நீங்க என்னடான்ன இப்படி பண்றீங்க. நியாயமா நீங்க தான் அவங்கள கூட்டிட்டு போய் நம்ம ஊர் சுத்தி காமிக்கணும்”

“ஓ இனியா ஓகே. விடு. இது என் பால்ட் தான். இனி இப்படி நடக்காது. நீ டீச்சரா ஆகி இருக்கணும்னு நினைக்கிறேன். இப்படி ஒரு லெக்டர் கொடுக்கற.”

“ஓ சாரி. வாங்க சாப்பிடலாம். அவங்க எல்லாம் வந்திட போறாங்க.”

பேசிக் கொண்டே இனியாவும் இளவரசனும் சாப்பிட்டு முடித்தார்கள்.

“இனியா. நான் என் மைன்ட் ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி பீல் பண்றேன். தேங்க்ஸ். நான் நீ எங்க வர மாட்டேன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன். எந்த உரிமைல உன்ன இங்க வான்னு கூப்பிட்டேனு எனக்கே தெரில. நீ அப்படி ஏதும் கேட்டு என்ன திட்டிடுவியோனு பயந்துட்டேன்.”

இனியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் வர வேண்டாம் என்று எண்ணியதை போய் இவனிடம் எப்படி சொல்வது. அதை சொன்னாள் அப்புறம் எப்படி வந்தாய் என்று கேட்பான். அப்படியே பேச்சை மாற்றும் விதமாக

“என்ன நீங்க பயந்துட்டீங்களா. இதை நான் நம்பவே மாட்டேன். முதல் நாள் உங்களை பார்த்து நான் தான் பயந்துட்டேன். அப்பா. என்ன ஒரு முரட்டு தனம்.”

“ஐ யம் ரியல்லி சாரி இனியா. அன்னைக்கு நடந்த விசயத்துக்கு நான் இன்னும் ஒழுங்கா சாரி கூட கேட்கல. நிஜமாவே அன்னைக்கு நடந்த விசயத்துக்கு நான் பீல் பண்றேன்”

“ஓ. என்ன இது. நான் சும்மா தான் சொன்னேன்.”

“ம்ம். நீ நான் பயந்துட்டேன்னு சொன்னா நம்பல இல்ல. ஆனா அது என்னவோ நிஜம் தான். ஒவ்வொரு முறையும் உன் கிட்ட பேசும் போது நான் ஏதும் தப்பா பேசிடுவேனோ, நமக்குள்ள ஏதும் சண்டை வந்துடுமோன்னு நான் நிஜமாவே பயந்திருக்கேன். இன்னைக்கு நீ வரமாட்டியோனு பயந்தேன். இப்படி உன்ன பாத்ததுக்கு அப்புறம் நிறைய டைம் பயந்திருக்கேன்.”

“அப்படி நமக்குள்ள ஏதும் சண்டை வந்துட்டா அது எப்ப தான் சால்வ் ஆகுமோன்னு உள்ளுக்குள்ள ரொம்ப பீல் செஞ்சி இருக்கேன். அப்புறம் நீ வீட்டுக்கே வந்துட்டு என் கிட்ட மட்டும் பேசாம போனப்ப ஒரு மாதிரி பீல் பண்ணி இருக்கேன். இப்படி உன்ன மீட் பண்ணதுக்கு அப்புறம் நீ எனக்கு நிறைய பீலிங்க்ஸ் கொடுத்திருக்க.”

இளவரசன் இத்தனை பேசியதற்கும் இனியா ஒன்றும் பேசவில்லை.

இளவரசன் இனியாவின் முகத்தை பார்த்தான். அவள் முகம் உணர்ச்சி கலவையாக இருந்தது.

“இனியா” என்று மெதுவாக அழைத்தான்.

“வேண்டாம் இளா. இதுக்கு மேல இதைப்பற்றி நம்ம பர்தரா பேச வேண்டாம்.”

“இல்ல இனியா. எனக்கு இன்னைக்கே பேசிடலாம்னு தோணுது. அப்படி இல்லாம உன் கிட்ட ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சி யோசிச்சி பேசிட்டு இருக்க முடியாது.”

“இல்லை. வேண்டாம். நான் எனக்குள்ளவே நிறைய யோசிக்கணும். நாம இதைப்பற்றி அப்புறம் பேசுவோம்.”

ஒரு நெடிய நிமிடத்திற்கு பிறகு இளவரசன் “ஓகே. என்றான்”

சிறிது நேரம் அந்த அறையில் அமைதி நிலவியது.

பின்பு இளவரசன் சிரித்துக் கொண்டே “இனியா, நான் உன் கிட்ட இன்னும் ஒண்ணுமே சொல்லலையே. நீ இதைப்பற்றி அப்புறம் பேசலாம், இதைப்பற்றி அப்புறம் பேசலாம்னு சொன்னியே, அது எதைப் பற்றி” என்று கேட்டான்.

இனியா இளவரசனுக்கு தான் முதுகை காட்டியவாறு நின்றுக் கொண்டு தன் தலையில் கொட்டிக் கொண்டாள். அவள் என்னவென்று சொல்வாள். இருந்தாலும் இவனுக்கு ரொம்ப தான் திமிர் என்று எண்ணிக் கொண்டாள்.

இனியாவின் செய்கையை பார்த்து இன்னும் புன்னகை விரிந்தவாறே, “சொல் இனியா. நீ இன்னும் என்னவென்று சொல்லவில்லையே என்றான்”

இதற்குள் இளவரசனின் கைப்பேசி அலறியது. அதை எடுத்து பார்த்த இளவரசன் “இனியா உனக்கு ஐந்து நிமிடம் டைம் தருகிறேன். அதற்குள் நீ பதில் சொல்லியாக வேண்டும்” என்றான்.

இளவரசனுக்கு அவன் அசிஸ்டன்ட் அர்ஜுன் தான் போன் செய்திருந்தான். அந்த பாரீன் கம்பனியின் மற்றொரு ஹெட் மும்பையில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து வருவதாகவும், அவர் வந்தவுடன் மீட்டிங் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்பதாகவும் கூறினான்.

இளவரசனும் “சரி என்று கூறி அவர்களை அவர்களை தங்க வைத்துள்ள ஹோடெலில் விட்டு விட்டு, அவர்களை நாளைக்கு ரெடியாக இருக்க சொல். நாளை நாம் அவர்களை வெளியில் கூட்டி செல்கிறோம் என்றோ சொல்லி விட்டு வருமாறு கூறினான்.”

பின் இனியாவிடம் திரும்பிய இளவரசன் “என்ன இனியா. உன்னை நான் டீச்சர் போல் என்று உதாரணம் காட்டி பேசினேன். நீ என்னவென்றால் இப்போது பேச மாட்டேன் என்கிறாயே, எனக்கு இப்போது பதில் வேண்டும், சொல் நீ என்ன நினைத்தாய்” என்றான்.

“நான் ஒன்றும் நினைக்கவில்லை. நான் கிளம்புகிறேன்” என்று கூறி அவள் ஹான்ட் பேகை எடுத்தவரே கிளம்ப எத்தனித்தாள்.

அதற்குள் அவள் கையை பிடித்த இளவரசன் “எனக்கு பதில் சொல்லாமல் நீ இங்கிருந்து செல்ல முடியாது இனியா” என்று கூறினான்.

இனியா எதுவும் பேச இயலாமல் இளவரசனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

தொடரும்

En Iniyavale - 07

En Iniyavale - 09

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.