”பொங்கல் வைக்கறதை பத்தி நான் யோசிக்கலையே நல்ல நாளா பார்த்து பொங்கல் வைக்கலாமா இல்லை நாளை மறுநாள் வைக்கலாமா. என்ன செய்யலாம் இப்போதைக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் வருவோம் வர்ற ஞாயிற்றுக்கிழமை கம்பெனி லீவுதானே அப்ப பொங்கல் வைக்க போகலாம்.
பார்ப்போம் இந்த சொந்தக்காரங்க மத்தியில இந்த 4 பொண்ணுங்களும் எப்படி புழங்கறாங்கன்னு அதை வைச்சி மார்க் போடனும். வேணா இப்படி செய்தா என்ன நாளைக்கு நாம சொந்தக்காரங்க வீட்டுக்கு போகலாம் ஒரு நாள் பார்த்து சொந்த்காரங்களை வீட்டுக்கு கூப்பிடலாம் இங்க வைச்சி அந்த 4 பொண்ணுங்க எப்படி வர்றவங்களை கவனிக்கறாங்கன்னு டெஸ்ட் வைக்கலாமே அதுவும் சரிதான் எப்படியோ 3 போட்டிக்கான விசயம் கிடைச்சிடுச்சி.
இதை வைச்சே இந்த பொண்ணுங்களை மாத்தனும். யார் யார் இருக்காங்களோ அவங்க இருக்கட்டும் போறவங்க போகட்டும். சோனாவால இருக்க முடியாது அவள் கிளம்பிடுவாள்ன்னு தான் தோணுது பார்க்கலாம்” என தனக்குள் நினைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று உறங்கலானார்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.