(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தெரியும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நம்ம கல்யாணத்துல எனக்கு முழு சம்மதம் இருக்கு. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன். உனக்கும் சம்மதம்ன்னு இப்போ புரிஞ்சிருச்சு! என்னை குரங்குன்னு நீ தான் சொன்ன, இப்போ உன்னையும் குரங்குன்னும் நீயே தான் சொல்ற. ஸோ, நாம சரியான ஜோடின்னு உனக்கே தெரியுது!”

   

கிருத்திகா எழுந்து நின்றாள்!

   

“உன் கிட்ட பேசி டைம் வேஸ்ட் செய்ய எனக்கு இஷ்டம் இல்லை. என்னை பொறுத்த வரைக்கும் இந்த கல்யாணம் நடந்தாலும் நடக்கலைனாலும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உனக்கு வேற எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருந்தாலும் இப்போவே மறந்திரு!”

   

“இந்த அளவுக்கு நீ சொன்னதே எனக்கு போதும் கீர்த்தி! ”

   

அவனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த கிருத்திகா மேலே ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள்.

   

தியாகராஜன் அவளை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அவனின் மனதில் உல்லாசம் குடி கொண்டிருந்தது!

  

ஒரு விதத்தில், அவனின் மனநிலை யோசித்து அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது!

   

அவனுக்கு காதல், கல்யாணம் எக்ஸட்ரா எதிலுமே ஆர்வம் இருந்ததே இல்லை! கடந்த சில வருடங்களாக, தெரிந்த நட்பு வட்டத்தில், உறவு வட்டத்தில் என இருக்கும் கல்யாண வயதான பெண்கள் பற்றி அவனின் அம்மா பேசாத நாளே கிடையாது! அப்போது எப்போதுமே அவனிடம் வராத ஆவல், கிருத்திகாவிடம் மட்டும் வந்திருப்பது ஏன்??

   

அவனிடம் தெளிவான பதில் இல்லை! ஆனால், கிருத்திகாவை முதல் முதல் சந்தித்த விதம் அதற்கு முக்கிய காரணம் என்று அவனுக்கு தோன்றியது!

   

கிருத்திகாவின் தைரியம், ‘நோ நான்சென்ஸ்’ பேச்சு, துடுக்குத்தனம், ‘ம் எனும் முன் வரும்’ 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.