(Reading time: 16 - 32 minutes)

ப்புறம் அதை ஸ்ருதி கிட்ட சொல்லி அவளுக்கு புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்பட்டு என்னென்னவோ பண்ணி அவளுக்கு புரிய வச்சிட்டோம்.”

“ம்ம்ம். அப்புறம் என்ன ப்ரோப்லம். அவங்க செய்றது தப்புன்னு புரிய வைக்கறது தான் கஷ்டம். அதை அவங்களுக்கு தெரிய வச்சிட்டு வீட்லயும் அதைப் பத்தி பேசாம நல்லா கவனிச்சிகிட்டா அவங்களை கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து கொண்டு வந்துடலாம். இந்த கவுன்செல்லிங் எல்லாம் தேவையே இல்லை.”

“கரெக்ட் தான். ஆனா ஸ்ருதி விசயத்துல இதெல்லாம் நடக்கலை. அவளுக்கு அந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து டோட்டலா சேன்ஜ் ஆயிட்டா.”

“இதெல்லாம் நடக்க கூடியது தான். ஆனா அவங்க வீட்ல இருக்கறவங்க அவளை முன்ன பார்த்துக்கிட்டதை விட நல்லா பார்த்துக்கணும். ஆனா அவளை கண்காணிக்கறதா அவ நினச்சிடாத அளவுக்கு பார்த்துக்கணும்.”

“இனியா நான் சொல்ல வரர்த கொஞ்சம் கேளேன்”

“ம்ம்ம். சொல்லுங்க”

“அவளுக்கு அந்த விஷயத்தை நாங்க புரிய வச்ச உடனே அவ முகம் மாறின விதமே எங்களுக்கு ரொம்ப பயமா தான் இருந்துச்சி. ஆனா நாங்களும் இதெல்லாம் சகஜம் தான்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா அவ அந்த விசயத்துல இருந்து வெளியே வரவே இல்லை. சிவாவும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டான். ஆனா ஸ்ருதி இதெல்லாம் புரிஞ்சிக்கலை. புரிஞ்சிக்கலைன்றதை விட அவ அதை புரிஞ்சிக்க முயற்சி செய்யலை.”

“ஒரு பத்து நாள் கழிச்சி காலேஜ்க்கு போனவ அன்னைக்கு காலேஜ் முடியறதுக்குள்ளேயே வந்துட்டா, அன்னைக்கு அவ சூசைடு பண்ணிக்க ட்ரை பண்ணா.”

“எப்படியோ அதுல இருந்து அவளை மீட்டுட்டோம் இனியா. அவளை திரும்ப அப்படி பண்ணக் கூடாதுன்னு கெஞ்சி மிஞ்சி சத்தியம் வாங்க மட்டும் தான் எங்களால முடிஞ்சது. ஆனா அவ இன்னும் அதுல இருந்து வெளிய வரவே இல்லை. இப்பல்லாம் அவ முகத்துல வாழனும்ன்ற ஆசையே தெரியலை. ரொம்ப அளவுக்கு அதிகமா சோகம் தான் அவ கண்ணுல தெரியுது. காலேஜ் போகறதில்லை.”

“இன்னொரு விஷயம் என்னன்னா அவ சூசைடு அட்டெம்ப்ட் பண்ணது ஒரு பத்திரிக்கைல வந்துடுச்சி”

“வாட். என்ன சொல்றீங்க. அதெப்படி வந்துச்சி”

“அது அந்த பையன் பண்ண சூழ்ச்சின்னு நினைக்கறேன். அந்த பத்திரிக்கையும் ஒரு நாலாந்தர பத்திரிக்கை. அதுல வரர்தை யாரும் அவ்வளவா நம்ப மாட்டாங்க. ஆனா ஸ்ருதி இதெல்லாம் ஒத்துக்க மாட்டேங்கறா. அந்த பத்திரிக்கையோட ரிப்போர்ட்டர் ஒருத்தன் வேற ஸ்ருதியை எங்கேயோ வழி மறிச்சி அதைப் பத்திக் கேட்டிருக்கான். அதுல இருந்து அவ வெளியவே போறதில்லை.”

“ஆனா இனியா எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஸ்ருதி மேல சிவா எவ்வளவு அபெக்ஸஷன் வச்சிருக்கான்னு எனக்கு நல்லா தெரியும். ஏன் அவளும் தான் சிவா மேல ரொம்ப அபெக்ஸஷனா இருப்பா.  அவ ஏதோ தப்பு பண்ணிட்டா. அத அவ ரியலைசும் பண்ணிட்டா. ஆனா முன்ன விட இப்ப நாங்க பாசமா இருக்கும் போது அவ சேன்ஜ் ஆகணும் இல்லை. அவ ஏன் மாற மாட்டேங்கிறா.”

“ம்ம்ம். அதுக்கு அவங்க கிட்ட பேசிட்டு தான் பதில் சொல்ல முடியும். ஒவ்வொருத்தர் மனசு ஒரு விதம். இப்ப கூட ஒருத்தரை கூட்டிட்டு வந்தாங்க. B.Tech  படிச்சிட்டு ஒரு நல்ல வேலைல இருந்திருக்காரு. ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்காரு. மூணு வருஷ லவ். இப்ப அந்த பொண்ணுக்கு வேற ஒரு பையன் கூட கல்யாணம் ஆகிடுச்சி. அவர் வேலைக்கு போய் 7 மாசம் ஆகுது.”

“அவருக்கு வேலைல கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. வீட்ல யாரு கூடவும் பேசறது கூட இல்லையாம். இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தா அவர ஹாஸ்பிடல்ல அட்மிட் தான் பண்ணியிருக்கணும். அந்த பொண்ணு தான் வந்து ப்ரொபோஸ் பண்ணுச்சாம். அதை சொல்லியே அழுதாரு. 26 வயசு பையன் அழுதா அவங்க அம்மாக்கு எப்படி இருக்கும்.”ன்னு

“எதையும் யோசிக்காம லவ் பண்ணிட்டு இப்ப பீல் பண்றதால என்ன யூஸ். முதல்லயே எல்லாத்தையும் யோசிக்கணும். அப்படி இல்லாம இப்படி டிப்ரெஸ்டா ஆகறது, இல்ல கடைசியா எல்லாத்தையும் யோசிச்சி எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்றதுல எல்லாம் என்ன யூஸ். ரெண்டு பேருக்குமே தானே கஷ்டம்.”

“ஓகே. நீங்க ஸ்ருதியை கூட்டிட்டு வாங்க. எல்லாம் சரி ஆகிடும்”

“இல்ல. அந்த ஒரு ரிப்போர்ட்டர் சொன்னேன்ல, அவன் ஏதோ அவங்களை பாலோ பண்ற மாதிரி இருக்கு. திரும்ப எந்த நியூஸ் வெளில வரக் கூடாதுன்றதுல நாங்க தெளிவா இருக்கோம். அதனால இங்க கூட்டிட்டு வந்தா அவனே எதாச்சும் கதை கட்டி எழுதிடுவான்”

“ஓ ஓகே. அப்ப என்ன பண்றது.”

“கொஞ்சம் யோசிச்சி தான் செய்யணும்.”

“ம்ம்ம். நீங்க அவங்க பாமிலி கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்லுங்க. நான் இன்னைக்கு பெர்மிஷன் போட்டிருக்கேன். கொஞ்சம் வெளில போகணும்.”

“ஓகே. நான் கிளம்பறேன்”

கார்த்திக் வீட்டிற்கு சென்ற இனியாவை அவன் தாய் வரவேற்றார்கள். கார்த்திக் இதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தானே தவிர இனியாவிடம் பேசவில்லை.

“என்ன கார்த்திக் என் கிட்ட பேச மாட்டியா”

அதற்கும் அவன் பதில் கூறவில்லை.

“ஹேய். நான் உன் போன்க்கு ட்ரை பண்ணிட்டு தான் இருந்தேன். உன் போன் என்ன ஆச்சி. இப்ப ஏன் என் கிட்ட பேசமாட்டேங்கற.”

“கார்த்திக் என் செல்லம்ல சாரி டா. அக்கா தான் எப்படியாச்சும் பேசி இருக்கணும். சாரிடா. அக்கா கிட்ட பேசு. ப்ளீஸ்” என்றாள்.

“போங்க. உங்களுக்கு தானே என்னை முதல்ல தெரியும். பட் நீங்க என் கிட்ட ஒழுங்காவே பேசறதில்லை. ஆனா மாமா அப்படி இல்லை தெரியுமா. என் கிட்ட டெய்லி பேசுவார். என் போன் வொர்க் ஆகாத அடுத்த நாளே அம்மா நம்பர் கண்டுபிடிச்சி பேசிட்டார். போங்க நான் உங்க கிட்ட பேச மாட்டேன்.”

இனியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  அவனை எப்படியோ பேசி சமாதானம் செய்தாள்.

சிறிது நேரம் கழித்து இனியாவின் தந்தை வந்து அவளை அழைத்து சென்றார்.

ரவு தன்னறைக்கு சென்ற இனியாவிற்கு உறக்கமே வரவில்லை. கார்த்திக் பேசியது அவளை மிகவும் பாதித்தது. எங்கு சென்றாலும் இளவரசன் இளவரசன் என்று அவன் அவனின் முத்திரையை பதித்து விட்டு இனியாவிற்கு எங்கும் இடமில்லாதது போல் தோன்றியது.

எவ்வளவு யோசித்தும் அவன் விசயத்தில் அவளால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை. என்ன தான் செய்வது என்றே தெரியவில்லையே என்று எண்ணி வழக்கம் போல் கடவுளிடத்தில் “கடவுளே என்னால எந்த முடிவும் எடுக்க முடியலை. எது நல்லதோ அதை நடத்தி வை” என்று வேண்டிவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் இனியா எழுந்து வாக்கிங் முடித்து விட்டு வீட்டிற்கு வரும் போதே இளவரசன் அவள் வீட்டிலிருந்தான்.

காலையிலேயே அவனை வீட்டில் பார்த்த அதிர்ச்சியில் இனியா கண்ணை திறந்து முழித்துக் கொண்டிருந்தாள்.

இளவரசனோ பதிலுக்கு அவனின் மந்தகாச புன்னகையை வீசினான், அதுவும் அவள் தந்தையின் அருகில் அமர்ந்துக் கொண்டு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.