(Reading time: 16 - 32 minutes)

“பார்த்தியா, இதை என்னன்னு சொல்றது. இந்த அண்ணிக்கு நம்ம வீட்டு மனுசங்க மேல என்ன தான் கோவம்ன்னு தெரியலை. பத்திரிக்கை எடுத்துட்டு வரும் போது நீ ஊர்ல இல்லன்னா நீ வந்த வுடனே சொல்ல மாட்டாங்களா. அக்கா சொல்லும் போது எல்லாம் நான் நம்பலை. ஆனா இப்ப தானே தெரியுது.”

திரும்பவும் இனியா அவள் தந்தையை முறைத்தாள்.

“இல்ல செல்வி, உங்க அண்ணி சொன்னா. எனக்கு தான் மறந்துடுச்சி.”

“நீ உன் பொண்டாட்டியை விட்டு குடுப்பியா. நீ முன்னாடி மாதிரி இல்லைண்ணே”

“வேண்டாம் செல்வி. விடு. இந்த பேச்சு வேண்டாம். இதை இத்தோட விட்டுடு”

“ம்ம்ம். எல்லாம் என் நேரம். ஊர்ல இருந்து வராதவ வந்திருக்காளேன்னு இங்க யாருக்காச்சும் இருக்கா. எல்லாம் என் நேரம்” என்று பொருமிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக வேறு எந்த வாக்கு வாதமும் இல்லாமல் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“அண்ணே உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“நான் கொஞ்சம் வெளிய போக வேண்டி இருக்கு. அப்புறம் நான் வந்த உடனே பேசலாம்மா”

“இல்லண்ணே. ஆரம்பிக்கும் போதே தடுக்காத. எனக்கு இப்பவே பேசணும். உன் வேலையை அப்புறம் வச்சிக்க. இப்ப இந்த தங்கச்சிக்காக கொஞ்ச நேரம் ஒதுக்க மாட்டியா”

ராஜகோபால் இளவரசனை பார்த்தார்.

“இருக்கட்டும் மாமா. நாம அந்த வேலையை அப்புறம் கூட பார்த்துக்கலாம். நீங்க இருங்க. நீங்க அப்புறம் போன் பண்ணுங்க. நான் இப்ப கிளம்பறேன்”

“வேண்டாம். நீ இரு. இன்னைக்கே அவரை பார்த்தா தான் வேலை முடியும். கொஞ்ச நேரம் கழிச்சி போலாம்”

“என்னம்மா பேசணும். சொல்லு.”

இளவரசன் சங்கடத்துடன் நெளிந்துக் கொண்டிருந்தான்.

“என் மகன் மோகனுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”

“அடடே நல்ல விஷயம் தான் சொல்ல வந்திருக்க. நான் தான் அது தெரியாம ஏதேதோ பேசிட்டு இருந்துட்டேன்”

முகத்தில் புன்னகையுடன் “அதான். என் பேச்சை எங்கே நீங்க ஒழுங்கா கேட்கறீங்க” என்றார்.

“அது சரி. பொண்ணு யாரு, என்ன படிச்சிருக்கு” என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டே சென்றார்.

ஒரு நிமிடம் அங்கிருந்த அனைவரையும் உற்றுப் பார்த்தவளாக தன் அண்ணனிடம் திரும்பி “என்னண்ணே விளையாடறியா. என்ன கேள்வி கேட்கற. இல்ல என்ன கேட்கரன்னு கேட்கறேன்”

“என்னம்மா நான் என்ன சொன்னேன்”

“பின்ன என்னண்ணே. என் அண்ணன் பொண்ணை வச்சிக்கிட்டு நான் ஏன் வெளிய போய் பொண்ணு தேட போறேன்.”

அங்கிருந்து எல்லோரும் திகைத்தனர்.

இனியாவின் கண்கள் திடீரென்று கலங்கி விட்டது. அவளுக்கு தெரியும் அவள் தந்தைக்கு அத்தைகளின் மேல் எவ்வளவு பாசம் என்று. எங்கே அவர் சரி என்று சொல்லி விடுவாரோ என்று அவளுக்கு பயமாகி விட்டது.

இனியா திரும்பி இளவரசனை பார்த்தாள். அவனும் அப்போது அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் தெரிந்த பயம் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாக தான் இருந்தது. ஆனால் அவளின் கண்ணீரை துடைக்கும் வழி தான் அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கும் இனியாவின் தந்தை என்ன சொல்வாரோ என்று  தான் பயமாக இருந்தது.  

தொடரும்

En Iniyavale - 13

En Iniyavale - 15

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.