(Reading time: 16 - 32 minutes)

னியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “என்னடா நேத்து தான் நோ பர்சனல் டாக்ஸ்ன்னு சொல்லிட்டு நேர்ல பாக்கும் போதும் ஒழுங்கா தானே பேசினான். இப்ப என்ன முன்னாடி மாதிரி ஒரு ஸ்மைல்” என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு ஒழுங்கு காட்டி விட்டு உள்ளே சென்றாள்.

“அம்மா. அவன் எதுக்கு வந்திருக்கான்.”

“ஏய் மரியாதையா பேசுடி. ஒழுங்கா மாமான்னு கூப்பிடு. என்ன இப்படி பெரியவங்கன்னு மரியாதை இல்லாம. நீ இப்படியே பேசி திரிஞ்சிக்கிட்டு இருந்தா நாளைக்கு என்ன தான் குத்தம் சொல்வாங்க.”

(ஓ காட். இவங்க முன்னாடி தெரியாம பேசிட்டேனா. இதுக்கு இவளோ லென்த்தா அட்வைஸ் குடுக்கறாங்களே, இதுல மாமான்னு வேற கூப்பிடணுமாம்.)

“ம்மா. ஏதோ தெரியாம பேசிட்டேன். அதுக்கு ஏன் இப்படி பேசுற. உன் பொண்ணு மத்தவங்க உன்னை குத்தம் சொல்ற அளவுக்கு நடந்துக்க மாட்டா. தெரிஞ்சிக்க. அது சரி, எதுக்கு வந்திருக்காருன்னு சொல்லு.”

“ஏதோ லேன்ட் வாங்கற விஷயமா உங்கப்பா கிட்ட ஏதோ கேட்க வந்திருக்காங்க.”

“ஓஹோ. ஓகே. ஓகே.”

“ஏய் இந்தா, இந்த காபியை எடுத்துட்டு போய் குடுத்துட்டு வா.”

(இது வேறவா கடவுளே)

“அப்பா காபி எடுத்துக்கோங்க.”

இளவரசனிடம் “காபி” என்று கொடுத்தாள்.

அவன் பதிலுக்கு கண் சிமிட்டியவாறே வாங்கிக் கொண்டான்.

இனியா ஆபீஸ்க்கு ரெடியாக மேலே சென்று விட்டாள்.

இளவரசனின் கண்களோ அவளை தேடிக் கொண்டிருந்தது.

“இனியா இனியா” இனியாவின் தாய் அவள் அறைக் கதவை தட்டினார்.

கிளம்பிக் கொண்டிருந்த இனியா “என்னம்மா. இரு வரேன்” என்றவாறே போய் கதவை திறந்தாள்.

“ஏய் உங்க அத்தை வந்திருக்காங்க. வா. வந்து எப்ப வந்தீங்கன்னு ஒரு வார்த்தை கேட்டுடு”

“எது பெருசா, சின்னதா வந்திருக்கு”

“ஏய் என்னடி, திரும்ப திரும்ப உன் கிட்ட சொல்லனுமா, ஏண்டி இப்படி பேசி தொலைக்கற, நீ என் பேரை கெடுக்காம விட மாட்ட”

“ஐயோ, சரி விடும்மா. உன் கிட்ட பேச முடியாது. நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சிக்கலாம். சொல்லு யாரு வந்திருக்கறது”

“உங்க செல்வி அத்தை தான்”

“சரி நீ போ, நான் கிளம்பிட்டு இருக்கேன். கிளம்பிட்டு வரேன்”

“சீக்கிரம் வந்திடு டீ. அப்புறம் அவங்க எதாச்சும் சொல்ல போறாங்க”

“போம்மா. நாம ஒன்னும் அவங்க அடிமை இல்லை. நீ போ. நான் வரேன், என் மூட் ஸ்பாயில் பண்ணா நான் வரவே மாட்டேன்.”

“ஐயோ சரிடீ சீக்கிரம் வா”

னியா கிளம்பி கீழே சென்ற போது அவளின் தந்தை அவரின் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தார். அவள் தாய் அவருக்கு ஏதோ உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“வாங்க அத்தை. எப்ப வந்தீங்க” என்றாள் இனியா.

இனியாவை மேலும் கீழுமாக பார்த்த அவள் அத்தை “வாடியம்மா. நான் வந்து இவ்வளவு நேரமாச்சி. உனக்கு இப்ப தான் கீழ இறங்கி வர தோணுச்சா. எல்லாம் உன் அம்மா சொல்லிக் கொடுக்கற மாதிரி தான் இருக்கீங்க”

இனியா அவள் அன்னையை பார்த்தாள். அவர் “வேண்டாம்” என்றவாறு தலையசைத்தார்.

அதை கண்டுக்கொள்ளாதவாறு “எங்க அம்மா நீங்க வந்திருக்கீங்க, கீழ வான்னு தான் அத்தை சொன்னங்க. அதுக்காக நான் தலை கூட வாராம அப்படியே வர முடியுமா. அப்புறம் நீங்க என்ன சொல்வீங்க. உன் அம்மா உன்னை எப்படி வளர்த்து வச்சிருக்கா பாருன்னு, இது தேவையான்னு தான் நான் கிளம்பி வந்தேன்” என்றாள்.

“அது சரி. உங்க அம்மாக்கு இருக்கற வாய் உனக்கு இல்லாமலா போகும். பார்த்தியா அண்ணே உன் பொண்டாட்டி பசங்களை வளர்த்திருக்கற விதத்தை”

இனியா அவள் தந்தையை முறைத்தாள்.

அவர் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் அவர் பார்வையில் ஒரு கெஞ்சல் இருந்தது.

இனியா அதோடு ஏதும் பேசவில்லை.

இதை எல்லாம் அமைதியாக இளவரசன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்ப நான் போயிட்டு அப்புறம் வரேன் மாமா “ என்றான்.

“இல்லப்பா. அந்த லேன்ட் ஓனர் புரசைவாக்கம்ல வந்து பார்க்க சொல்லிருக்காரு. நீ கொஞ்சம் வெயிட் பண்ணு. இங்கேயே சாப்பிடு. நாம கொஞ்ச நேரத்துல ஒன்னாவே கிளம்பி போய் பார்க்கலாம்”

“இல்ல. நான் வேணும்னா வீட்டுக்கு போயிட்டு நேரா அங்க வந்திடரேனே”

“இல்லல்ல. நீ இரு. இங்க சாப்பிடறதுல என்ன இருக்கு. அப்புறம் நாங்க அங்க வந்தா சாப்பிட மாட்டோம்”

“சரி. நாம ஒன்னாவே போகலாம்”

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையிலே லக்ஷ்மிக்கும் இனியாவிற்கும் செல்வி எங்கே இளவரசன் யார் என்றுக் கேட்டு விடுவாளோ என்று பயந்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் செல்வியோ இளவரசனை கண்டுக்கொள்ளாதவாறு உண்டுக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த அவர்கள் பெருமூச்சை வெளியிட்டவாறு அமைதியாக இருந்தனர்.

“எல்லாரும் சாப்பிடுங்க. வாங்க” என்று லக்ஷ்மி அழைத்தார்.

அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“என்னைக்கு அண்ணே கிளம்பி ஊருக்கு வர போற”

“எதுக்குமா. இப்ப எனக்கு வொர்க் நிறைய இருக்கு. இப்போதைக்கு ஊருக்கு வர முடியாது.” என்றார் ராஜகோபால்.

செல்வி திரும்பி தன் அண்ணியை முறைத்தவாறே, “என்னண்ணே தெரிஞ்சி தான் பேசுறியா, இல்லை தெரியாம பேசுறியா” என்று கேட்டார்.

“அது வந்துங்க” என்று லக்ஷ்மி பேச முற்படுகையில் தடுத்த செல்வி “நீ சும்மா இரு அண்ணி. நீ ஏதும் பேசாத” என்று தடுத்து விட்டு

“சொல்லுண்ணே. நீ சொல்லு”

“என்னம்மா சொல்ல சொல்ற. எனக்கு நீ என்ன சொல்ல வரேன்னே புரியலையே”

“நம்ம கிருஷ்ணன் மகன் கல்யாணத்துக்கு எப்ப வரன்னு கேட்டேன்”

“கிருஷ்ணன் மகனுக்கு கல்யாணமா. எப்ப”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.