(Reading time: 23 - 45 minutes)

னுவின் பெற்றோரும் அஸ்வத்தின் பெற்றோரும் அவர்களை விடுதியில் சேர்த்து விட்டு பின் பிரியாவிடை கொடுத்து கிளம்பினர். அவ்வளவு நேரம் இல்லாத ஒரு தனிமையை உணர்த்தால் அனு. என்னதான் நண்பர்கள் புதிதாக கிடைத்தாலும் வீட்டில் தாயிடம் சேட்டை செய்வதற்கு ஈடாக தோணவில்லை அனுவிற்கு... பிருந்தா அவள் வீட்டுக்கு அழைத்து பேசிக்கொண்டு இருக்க அனு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளை கடந்து சென்ற பெண் கீழே விழுந்த தன் கைபேசியை கவனிக்காமல் சென்று கொண்டிருந்தாள்.

“ஒரு நிமிஷம்” என்று அந்த பெண்ணை அழைத்தவாறு கைபேசியை எடுத்துகொண்டு அருகில் சென்றாள்.

“உங்க செல் கீழ விழுந்துடுச்சு இந்தாங்க” என்று புன்முறுவலோடு அனன்யா தந்தாள்.

“தேங்க்ஸ்” என்று அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டு “என் பேரு அபி நீங்க?” என்று கேட்க.

தன் பெயர் department என்று எல்லாவற்றையும் கூறினாள் அனு, நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் எடுத்துருக்கேன் என்று அமைதியாகவே பேசினாள் அபி. தன்னை போல் அல்லாமல் அமைதியாக இருக்கும் அபியை அனுவிற்கு பிடித்து இருந்தது. பின்பு அவளுடன் அபியின் அறைக்கு சென்றாள் அங்கு அபியின் தோழி தியாவை அறிமுகம் செய்யும் படலம் அரங்கேறியது. சிறிது நேரம் பேசியதில் அபியும் தியாவும் அனுவிற்கு நல்ல தோழிகள் ஆனனர்.

“ஹே அபி வாயேன் என் ரூம்க்கு போகலாம் அங்க இன்னும் ரெண்டு பேரை அறிமுகம் செய்யுறேன்” என்று கூறி அழைத்து சென்றாள். அவர்கள் நினைத்தை விட விரைவாகவே பேசி பழகி நல்ல தோழிகள் ஆனனர். அவர்கள் பேசிக்கொண்டு இருக்க “என்ன இங்க சத்தம், ம்ம்ம்ம்?” என்று மிரட்டும் தோணியில் அங்கு ஒரு பெண் நின்றுக்கொண்டிருந்தாள்.

“ஜூனியர்ஸ் தானே” என்று மீண்டும் அந்த பெண் மிடுக்காக கேட்க

அங்கு இருந்த ஐவருமே நடுங்கி போனனர். ராக்கிங் என்று கேள்விபட்டது உண்டு ஆனால் அது விடுதியிலேயே துவங்கும் என்று அவர்கள் எதிர் பார்க்கவில்லை.

“என்ன திரு திருன்னு முளிக்குரிங்க? சீனியர் வந்தால் எழுந்து நிக்கனும்னு கூட தெரியாதா” என்று மிரட்டவும் எல்லாம் அரண்டுபோய் எழுந்தனர். அந்த பெண் மீண்டும் மிரட்டிக்கொண்டு இருக்க பின்னால் இருந்து வந்த இன்னொரு பெண் அவள் தலையில் லேசாக தட்டி “ஹே போதும் ஆர்த்தி ரொம்ப பயமுடுத்தாத” என்று கூறினாள்.

“ஹாய் கேர்ள்ஸ் என் பேரு மான்வி உங்க செட்தான் இவளும் நம்ம செட்தான் கொஞ்சம் விளையாடி பார்க்கத்தான் இப்படிலாம் பண்ணா, உங்களுக்கு பயங்கரமா கோவம் வருதுன்னு தெரியுது அதுக்காக ஆர்த்தியை கோவப்பட்டு அடுச்சுராதிங்க” என்று ஆர்த்தியை பார்த்தவாறு சிரித்துக்கொண்டு கூறினாள். இவள் உண்மையை கூறிக்கொண்டு இருக்க போச்சுடா என்று தலையில் கை வைத்தாள் ஆர்த்தி.       

அவர்கள் ஐவரும் ஆர்த்தியை முறைக்க “சரி சரி its all in the game cool down cool down” என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

மான்வியிடம் திரும்பி “நீ ரொம்ப நல்லவடி அவங்களுக்கே அந்த நினைப்பு வராட்டியும் நீயே வர வச்சிடுவ போல் இருக்கே” என்று அவளிடம் வாதாடிக்கொண்டு இருந்தாள். 

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்களுக்கு சிரித்து சிரித்து வயிறே வலித்தது ஒவ்வருவரும் நன்றாக பழகினர், ஒரு நாள் இரவில் இவ்வளவு பெரிய நட்பு வட்டாரம் கிடைக்கும் என்று அவர்கள் யாருமே எதிர் பார்க்கவில்லை. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த மாதவி ஏதோ நியாபகம் வர “அச்சோ நம்ம குரூப் ஒத்த படையில இருக்கே இன்னும் ஒருத்தர் சேர்த்துக்கலாமா?” என்று திடீரென கேட்க மற்றவர்கள் முழித்தனர். “சரி சரி முழிக்காதிங்க இருங்க வரேன்” என்று கூறி தன் அறைக்கு சென்று ஒரு பெண்ணை அழைத்து வந்தாள்.

“ம்ம்ம் இது தான் எங்க ரூம் ஒட்டடைக்குச்சி, சாரி சாரி எங்க ரூம் மேட் ஸ்வாரா” என்று கிண்டல் பண்ணினாள். அவளது கூற்றிற்கு பதில் தராமல் அவளை கிள்ளினாள் ஸ்வாரா.. “ஆஆஆ வலிக்குதுடி... உண்மையை தானே சொன்னேன் பாரு நான் புடுச்சு இருக்கதால பறக்காம இருக்க இல்லாட்டி பறந்து போயிருப்ப...” என்று அவள் பேசிக்கொண்டே இருக்க தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தாள் ஸ்வாரா...ஒருவழியாக அடித்து,பேசி,சிரித்து என எல்லாரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் ஆனனர். அதிஷ்டவசமாக எல்லாரும் ஒரே கோர்ஸ் எடுத்து இருக்க அரட்டைகள் இடரின்றி தொடர்ந்தது...      

டுத்த நாள் விடியல் புதிதாக இருந்தது முதல் நாள் என்பதால் அரக்க பறக்க எல்லோரும் கிளம்பினர். புது நண்பர்கள், புது இடம், சீனியர் ராக்கிங் என்று பல எண்ண ஓட்டத்தோடு அனைவரும் கிளம்பி வகுப்பிற்கு சென்றனர். வருசையாக அனைவரும் வர வகுப்பில் கூட்டம் சேர்ந்தது. அனுவும் அவளது புது கூட்டமும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தனர்.. இவர்கள் ஒரு புறம் பேசிக்கொண்டு இருக்க. சிலர் அங்கு வந்து தங்கள் புது தோழமையை கண்டு பிடித்தனர். சிறிதும் நேரம் பேசிக்கொண்டு இருக்க ஆசிரியர் உள்ளே நுழையவும் ஒரு பொட்டு சத்தம் இல்லாமல் அமைதியானது... பள்ளியின் தொடர்ச்சியாக அனைவரும் எழுந்து நின்று good morning சொல்ல சிறு புன்முறுவலுடன் அமர சொன்னார் புது ஆசிரியர் லேகா.

“ஹாய் ஸ்டுடென்ட்ஸ், என் பேரு லேகா, நான்தான் உங்களுக்கு c language எடுக்க போறேன். ஏன் எல்லார் முகத்துலையும் இவ்ளோ பயம்? என் கிளாஸ் பத்தி முன்னாடியே யாராவது சொல்லிடாங்களா?! பயப்புடாதிங்கபா முதல் நாளே அறுக்க மாட்டேன்... அப்பறம் இப்படி ஸ்கூல்ல பண்ண மாதிரி எழுந்து நின்னு good morning சொல்ல வேண்டாம், எழுந்து நின்னா போதும்” என்று சில மணி நேரம் பேசி அவர்களை சிரிக்கவைத்து அவர்களை இலகுவாக்கியபின் வகுப்பை தொடர்ந்தார்.

“சரி நான் attandance எடுக்குறேன் நம்ம லேப்ல 20 சிஸ்டம் தான் இருக்கு, 20 - 20 membersa பிரிச்சு குரூப் form பண்ணலாம், சோ நான் attandance எடுக்கும் போது நீங்க என்ன குரூப்னு பாத்துகோங்க அதை பொருத்து உங்களுக்கு லேப் session மாறும் சரியா” என்று கேட்டுவிட்டு அவர் attandance நோட்டை எடுக்க, எந்த குரூப்பில் வருவோம், தங்கள் தோழர்கள் எந்த குரூப்பில் வருவார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கவனிக்க துவங்கினர்.

அனன்யா என்று அவளது பெயரை அழைக்க present சொல்லியவள் தன் தோழிகள் பெயர் வருமா என்று காத்திருந்தாள். அடுத்து அருண் என்று அழைக்கப்பட்டது அவனை தொடர்ந்து அஸ்வத் என்று அழைக்க அனன்யாவின் மனம் “அஸ்வத்தா?! இருக்காதே வேற பையனா இருக்கும், அவன் எதுக்கு இந்த கல்லூரிக்கு வரபோறான் ஒரு வேலை அவன்தானோ?” என்று நொடிபொழுதில் பல எண்ணங்கள் தோன்ற திரும்பி யார் என்று பார்த்தாள். அவளை பெரிதும் தேடவிடாமல் பின்புறமே இரண்டு மேசைகள் தள்ளி அமர்ந்து இருந்தான் அவள் தேடிய அஸ்வத். அவனும் அதே போல் அவளை அங்கு எதிர் பார்க்கவில்லை என்று அவன் முகத்திலேயே தெரிந்தது...இதற்கும் அவனையே பார்க்க ஆசை படுரோம்னு சொன்னாலும் சொல்லுவான் என்று மனதில் திட்டிக்கொண்டு திரும்பி கொண்டாள். திடீர் என்று நியாபகம் வர அய்யோ இவனும் நானும் ஒரே குரூப்பா என்று தோன்ற அலுத்துகொண்டாள்...அதே போல் அவனும் அனன்யாவை திட்டிக்கொண்டு தான் இருந்தான். எப்படி மூஞ்ச திருப்பிக்கிறாள் பாரேன், நல்ல வேலை அருண் இருக்கான் இல்லாட்டி அவள் பக்கத்தில யாரு ஒக்காருவா எல்லாம் திமிர் ஹ்ம்ம்... காரணமே தேவை இல்லை என்பதுபோல் இருவரும் திட்டிகொண்டனர். வசை பாடல் மனதில் இருந்து இரு புறமும் வந்துகொண்டு இருக்க, அனன்யாவை அபி அழைத்தாள்

“ஹே என்ன தூங்கிட்டியா? நீ நான் ஆர்த்தி மட்டும் தான் ஒரே குரூப்” என்று கூறவும் இவர்களாவது நம்முடன் வந்தார்களே என்று தோன்ற நிம்மதியாக இருந்தது அனன்யாவிற்கு...

ஒரே கல்லூரி, ஒரே கிளாஸ், ஒரே குரூப் ம்ம்ம்ம் நடக்கட்டும் காத்திருப்போம்....

Go to Kadhal payanam # 03

Go to Kadhal payanam # 05

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.