(Reading time: 16 - 32 minutes)

ன்னதான் பழகிய தோழியாய் இருந்தாலும் , இத்தனை நெருக்கத்திலும் உரிமையான அந்த  ஸ்பரிசத்திலும் எந்த பெண்ணையும் கண்டிறாதவன், மலைத்து நின்றுவிட்டான். அமைதியாய் இருந்த மனதில் அலைஅடிக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் முதன் முறையாக தன் மனம் எதற்காகவோ ஏங்குவது அவனுக்கு புரிவது போல் இருந்தது. அவன் குழப்பத்தை அதிகமாக்குவது போல் அங்கு வந்த ப்ரேமும்,


" என்னடா நடக்குது.....சாதாரன ஹெல்ப்க்கு சொன்ன தாங்க்ஸ் மாதிரி தெரியலயே...என்னவோ ஸ்பெஷல் கவனிப்ப இருக்கே...?” என்று மேலும் ஏற்றிவிட, குணா வெகுவாக குழம்பிப் போனான்.

ப்ரேமிற்கு சுபி தன்னை விட்டு இன்று தன் பழகிய குணாவிடம் நெறுக்கமாக இருப்பது பொறாமையை தூண்டியது. அதனால்தான் சுபியைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தும், இயல்பாக நடக்கும் விஷயத்தைக் கூட திரித்துக் கூறி குணாவின் மனதில் வீண் ஆசையைத் தூண்டினான். பசித்தவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் அமிர்தமாய் தெரிவது போல, சுபியின் நட்பான அக்கறைக் கூட குணாவிற்கு தனியாய் தெரிந்தது. அதன் விளைவாய் அடிக்கடி தனிமையைத் தேடினான். பரீட்சைக்கு படிக்கும் சமயத்தில் கூட தன்னுள்ளே மூழ்கிப் போனவனைக் கண்டு கவலையுடன் என்னவென்று கேட்ட சந்துருவிற்கு, ஒன்றும் இல்லை என்ற தலையாட்டல் மட்டுமே பதிலாய் கிடைத்தது. சிறு வயது  முதல் யாரிடமும் எதையும் பகிர்ந்து பழக்கம் இல்லாதவனுக்கு, கனவும் கற்பனையும் மட்டுமே துணையாய் இருந்தது. சுபியின் ஒவ்வொரு பார்வையையும் சிரிப்பையும் பொக்கிஷமாய் பாதுகாத்து அதையெல்லாம் தன் நிழல் வாழ்வில் கொண்டு சேர்த்து அவளுடன்  ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருந்தான் .

 

மூன்றாம் வருட துவக்க நாளில் மிகவும் சந்தோஷமாக காலேஜிற்கு கிளம்பிய குணாவிடம் இருந்த வேறுபாட்டை நளினி கூட கண்டுகொண்டு புருவம் சுருக்கினார். அவரிடம் மட்டும் விரைவிலேயே நல்ல விஷயம் ஒன்று சொல்ல போவதாய் சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். அடுத்தடுத்த நாட்களில் சுபியிடன் கொஞ்சம் சகஜமாக பேசத் துவங்கினான். அவனுடைய இந்த மாற்றத்தையும் நல்லவிதமாகவே பார்த்த சுபி,

“ குட் பாய்.....நீ இப்டி ஃப்ரீயா பேசுறது தான் நல்லாயிருக்கு. இப்பவாவது உன்னோட கூட்ட விட்டு வெளிய வந்தியே....இனி ஈஸியா உன்ன என் வழிக்கு கொண்டு வந்திரலாம்.....”என்று ஸ்னேகா புன்னகையுடன் ( ஓய்...அது ஸ்னேகப் புன்னகை....நீயெல்லாம் கதை எழுதி........சாரி பாஸ்....) சொல்லிவிட்டுப் போக, அகமகிழ்ந்து போனான் குணா. மேலும் ஒத்து ஊதுவது போல் ப்ரேமும்,

“என்ன சொல்ல வர்றானு புரியலையா?...நீயும் சீக்கரமே உன் ஃபீலிங்க்ஸ எக்ஸ்ப்ரஸ் பண்ணுனு சொல்றா...” என்றான். இந்த மாதிரி சமயத்தில் எல்லாம் ப்ரேம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டான், தான் இப்படி ஏத்திவிடுவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

சுபி தனக்கே தெரியாமலும், ப்ரேம் தெரிந்தேயும் குணாவின் கனவுக் காதலை பெரிய மாளிகையாக கட்டவைத்தார்கள். ஆனால் அது வெறும் சீட்டுக்கட்டு மாளிகை என்று குணாவிற்கு தெரிய வந்த பொழுது நேரம் கடந்திருந்தது.

அந்த வருடத்தின் கலேஜ்-டே ப்ரொகிராம் ஆரம்பித்து அன்றைக்கு ரோஸ்-டே. காலேஜின் உள்ளே நுழையும் போதே இன்று எப்படியும் தன் காதலை சுபியிடம் சொல்லிவிடுவது என்று மனதினுள் தீர்மானித்தப்படி வந்தான் குணா. அதற்காகவே, அன்று சந்துருவுடன் சேர்ந்து வராமல், முன்னாடியே வந்துவிட்டான்.

என்ன பேச வேண்டும் என்று உருப்போட்டவாரே சுபியைத் தேடியவன், அவளே கையில் ரோஜாவுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, இதயம் வேகமாக துடிக்க அதே இடத்திலேயே நின்றுவிட்டான். அவனை ஒரு வேகத்துடன் அனுகியவள் பின்னால் திரும்பி பார்த்தவாரே அவனிடம் சிகப்பு ரோஜாவை நீட்டி,

“ ஐ லவ் யு.....குணா....” என்றாள் இனிமையாக. குணாவின் காதில் தேன் வந்து பாய்ந்தது. அவன் மேல் கூடை பூவை யாரோ கொட்டியது போல் இருந்தது. பெரு முயற்சி செய்து அவளுக்கு பதில் சொல்ல முயன்றவனை,

“ஷ்...” என்று தடுத்து, அவனை லேபின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றாள். அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,

“அப்பாடா..........இந்த மேத்யூ சாரோட தொல்ல தாங்க முடியல, எப்ப பாரு பின்னாலையே வந்திட்டு. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு.இன்னிக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டாரு. நான் எனக்கு ஆள் இருக்குனு சொல்லிட்டேன், ஆனா நம்பவே மாட்டேங்கிறார்......அவர் முன்னாடியே ப்ரொபோஸ் பண்ணனுமாம்..என்ன பண்றதுன்னு பாத்தா, நீ வந்திட்ட....” சொல்லி சிரித்தவளுடன் தானும் சிரித்தபடியே ரோஜாவை நீட்ட, அதை கவனிக்காமல் சுபி மேலும் தொடர்ந்தாள்,

“ உங்கிட்ட ரோஸ்ஸ குடுத்தவுடனே உண்மைனு நம்பிடுச்சு...லூசு...” என்று சொல்லி மேலும் சிரித்தாள். உதட்டில் உறைந்து போன புன்னகையுடன், நீட்டிய கை தானாக கீழிறங்க,

“நீ....நீ.. என்ன சொல்ற..” என்று நடுங்கும் குரலில் கேட்டான் குணா. அவனுக்கு பதில் சொல்வதற்குள் அங்கு வந்த ப்ரேமிடம் நடந்ததை சொல்லி சிரிக்க, அவனும் கூட சேர்ந்து சிரித்தான். அவன் காத்திருந்தது இந்த சந்தர்பத்திற்குத்தானே. குணாவிற்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை. அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல்,

“சுபா...நீ சொன்னது வேணா பொய்யா இருக்கலாம், ஆனா, நான் உன்ன உண்மையாவே நேசிக்கிறேன்...” என்றான். ஒரு நிமிடம் திகைத்துப் போய் பார்த்த சுபி மறு நிமிடம் கலகலவென்று சிரித்தவாறே,

“போடா...சும்மா காமெடி பண்ணாத...” என்று சொல்ல, சட்டென்று அவள் கையை பிடித்தவன்,

“சத்தியமா சுபா..நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால வாழவே முடியாது...” என்றான் உருக்கமாக, கையை உறுவ முயன்றவாறு,

“உளறாத குணா.... உன்ன அந்த மாதிரி நான் நினச்சதுகூட கிடையாது. நீ இந்த மாதிரி பேசாத எனக்கு பிடிக்கல..”என்றாள் முயன்று வருவித்த பொறுமையுடன். அவள் கைகளை பிடித்தவாறு தரையில் மடிந்து அமர்ந்தவன் மன்றாடுவது போல்,

“ப்ளீஸ் சுபா...இதுவரைக்கும் நான் எதுக்குமே ஆசைப் பட்டதே இல்ல...ஆனா  இப்போ அதை எல்லாம் தாண்டி உங்கூட நான் கற்பனையில் வாழ்ந்திட்டு இருக்கேன்...நீ இல்லாம எனக்கு எந்த உலகமும் இல்ல...” பேசிக்கொண்டு போனவன் கன்னத்தில் பளாரென அறை விழுந்தது. தனக்கு விழுந்த அறையில் திகைத்து பார்த்த போது, கண்களில் கனலுடன் அவனை எரித்து விடுவது போல் பார்த்தவள்,

“எவ்வளவு தைரியம் இருந்தா எங்கிட்டயே இப்படி சொல்லுவ?...மனசில வேற ஒன்ன வச்சிகிட்டு ஃப்ரெண்ட் மாதிரி நடிச்சிட்டியே....துரோகி.....!!!..ஒரு வார்த்தை...ஒரு வார்த்தை அளவு மீறி பேசியிருப்பேனா?...ஒன்ன மட்டும் நல்லா புரிஞ்சுக்க, நான் என்னிக்குமே உன்ன மாதிரி காதலுக்காக கால்ல விழற கோழையை காதலிக்கவே மாட்டேன்...ஆண்மையோட இலக்கணமே முகத்துக்கு நேர பேசுறதுதான்....ஆனா நீ.............?செத்தாலும் உன் முகத்தில முழிக்க மாட்டேன்........” வார்த்தை அமிலத்தை கொட்டிவிட்டு, அவனை துச்சமாக பார்த்து விட்டு சென்றுவிட்டாள். நடப்பதை பார்க்கும் போதுதான் ப்ரேமிற்கு தான் செய்த செயலின் விபரீதம் புரிந்தது. யாரை முதலில் சமாதானம் செய்வது என்று தெரியாமல், அங்கும் இங்கும் பார்த்து விட்டு சுபியன் பின்னால் சென்றான்.

தன் உணர்வு எல்லாம் மறந்துவிட..

"நான் என்னிக்குமே உன்ன மாதிரி கோழையை காதலிக்கவே மாட்டேன்...செத்தாலும் உன் முகத்தில முழிக்க மாட்டேன்........." என்ற வார்த்தையே திரும்ப திரும்ப காதில் ஒழிக்க.. இனி அவளை மட்டுமல்ல, யாரையுமே எப்படி தலை நிமிர்ந்து பார்ப்பது.. கண்களுக்கு முன்னால் தன் காதல் கோட்டை கலைத்து துவசமாக.. அதன் ஏமாற்றமும் வலியும் விஷ்வரூபமாய் வளர்ந்தது. இதயமே பிளக்கும் அந்த வலியை தாங்க முடியாதவனாய், கோழையாகிப் போனான். குனிந்து விழுந்து கிடந்த ரோஜாவை எடுத்து இறுக்கமாக பற்றிக் கொண்டவன், அந்த ரோஜாவையே தன் காதலாக உருவகித்து, தன்னுடன் தன் காதலும் மறித்துப் போகட்டுமென்று நேராக காலேஜ் கேட்டை நோக்கி நடந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.