(Reading time: 16 - 32 minutes)

ழியில் அவன் போவதைக் கண்ட சந்துருவும், கதிரும் அவனை அழைக்க அது அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவன் நேராக கேட்டைத் தாண்டி ரோட்டை நோக்கிப் போக, watchman பதறி

"தம்பி.. தம்பி..." என்று கத்தினார். தூரத்தில் வரும் container lorry-யை கண்டு நின்றவன், திரும்பி “தள்ளுடா..” என்று கத்திக் கொண்டு வந்த சந்துருவைப் பார்த்து கண்ணீருடன்

"மன்னிச்சுருடா.." என்றான். சொல்லி முடிக்கவில்லை.. பெரிய horn-உடன் வந்த லாரி அனைவரின் கண்முன்னால் குணாவை இடித்து தூக்கி எறிந்தது.( அது இரக்கமான ரோட் என்பதால் ஓட்டுனர் நினைத்தாலும், நினைத்த மாத்திரத்தில் வண்டியை நிறுத்த முடியாது )

நின்ற இடத்திலேயே கால்கள் மடிய தரையில் சரிந்தான் சந்துரு.. கண்முன்னால் குணா மேலே பறந்து,  தரையில் விழுவதும் துடிப்பதும் தெரிந்தது. சுதாரித்து அவனருகில் ஓடி அவனைப் பார்க்க, சந்துருவை பார்த்தபடியே குணாவின் உயிர் பிரிந்தது. குணாவையே வெறித்துப் பார்த்தபடி இருந்தவன்.. கதிர் வந்து தோளைத் தொட்டதும்

"ஏன்டா.. ஏன்டா.. இப்படி பண்ணான்.." என்று கதறி விட்டான்.

குணாவை அடக்கம் செய்யும் வரைக்கும் அவனிடம் யாரும் நெருங்க முடியவில்லை. மறுநாள் குணாவின் தந்தை வந்து இனி தன்னால் இங்கு இருக்கமுடியாது என்றும் தான் தன் சொந்த ஊருக்கே போய்விடுவதாகவும் கூறவும், தலையை மட்டும் ஆட்டியவன் அதற்கு மேல் தாள முடியாமல், அழுதுதழுது ஒய்ந்து போய் அமர்ந்திருந்த நளினியின் மடியில் முகம் புதைத்து கொண்டான். அங்கு கதிரின் குரல் கேட்கவே நிமிர்ந்தவன் அவனுடன் ப்ரேமும் இருப்பதைக் கண்டு கேள்வியாய் பார்க்க, அவனை தனியே வருமாறு அழைத்துச் சென்ற கதிர்,

“ ப்ரேம் எதோ சொல்ல வேண்டும் என்கிறான்” என்றான். ஆர்வமில்லாமல் “ம்” என்றவன்,

ப்ரேம் அழுதபடியே நடந்தது எல்லாவற்றையும் சொல்ல சொல்ல, வெறி பிடித்தவன் போல் அவன் மேல் பாய்ந்து அவனை அடித்து நொறுக்கி விட்டான். கதிர் எவ்வளவோ முயன்றும் சந்துருவை அடக்க முடியவில்லை. அதே வேகத்தில் சுபியைத் தேடி ஹாஸ்டலுக்கும் சென்றான் சந்துரு. அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு கதறி அழுதபடியே இருந்தான் ப்ரேம். என்னதான் வக்கிரபுத்தியாக இருந்தாலும், தன் நண்பன் சாவிற்கு தானும்  தூண்டு கோளாய் இருந்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குற்ற உணர்வு தாங்காமல் தான் கதிரைத் தேடி சென்றான்.

ஹாஸ்டலுக்கு சென்ற சந்துரு சுபியைத் தேட, சம்பவம் தெரிந்து மயங்கி விழுந்த சுபியை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள் என்றவுடன், அவள் திரும்பிவரும் நாளுக்காக வெறியுன் வேங்கை போல் காத்திருந்தான். அந்த நாள் வந்த பொழுது அத்தனைப் பேர் நடுவில் வைத்து சந்துரு கேட்ட கேள்விகளை அவள் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாது. அவன் ஏச்சுக்கள் அத்தனையையும் தலை குனிந்தபடி கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டவள், மறு வார்த்தை பேசினாள் இல்லை.

ந்துருவும், அன்று இறுகிப் போனவன் தான். பெண்கள் என்றாலே நெருப்பாய் காய்ந்தான். அழுத்தி அழுத்தி வைத்த பாரமெல்லாம் கோபமாய் வெடித்தது. பிறந்தது முதல் கூடவே இருந்தவன் ஆயிற்றே. எல்லா இடமும், பொருளும் குணாவை ஞாபகபடுத்திக் கொண்டே இருந்தது. நரகமாக தோன்றிய அந்த   நேரங்களில் நளினியால் கூட அவனை நெருங்க முடியவில்லை....” சொல்லி முடித்த கதிர் (ஷ்....அப்பாடா...ஒருவழியா ஃப்ளாஸ்பாக் சொல்லி முடிச்சுட்டேன்....தம்பி ஒரு சோடா சொல்லுப்பா..அவ்.....கதிர்தான் சொல்றான்ல...அப்போ கதிர்க்கு ஒரு சோடா பார்சல்....), இமை மூடாமல் தன்னையே பார்த்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து,

“இப்போ சொல்லுங்க......குணாவோட பாதிப்பிலிருந்து, இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா வெளில வர்றான்...மறுபடியும் அதே மாதிரி இன்னொரு சம்பவம்னா யாருக்கு தான் தாங்க முடியும்...” வருத்தத்துடன் சொன்னவனின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்ட அனு, அவன் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தபடி,

“கவலைபடாத கதிர், இப்போ தான் சாருக்கு தைரியம் கொடுக்க ஆள் இருக்கே...இப்போலாம் சார் ரொமான்டிக் மூட் தான்...” சொல்லிவிட்டு நந்துவை பார்க்க அவள் தீவிரமாக யொசித்துக் கொண்டிருந்தாள்.

“அப்றம் இன்னொரு விஷயம்....இப்போ நாம பேசுனது .........” கதிரை சொல்லிமுடிக்க விடாமல் அனைவரும் கோரசாக,

“ சந்துரு சார்க்கு தெரியவே தெரியாது..” சொல்ல, மெல்ல புன்னகையுடன் இல்லை என்பது போல் தலையசைத்தவன்,

“இல்ல..நான் உங்ககிட்ட சொன்னது பிரச்சனை இல்ல....தப்பி தவறி கூட குணாவோட இழப்பை நாம ஞாபகப் படுத்திரக் கூடாது...அவன் பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்தவன் நான்... .இப்போதான் பழயபடி கொஞ்சம் சிரிக்க ஆரம்பிச்சிருக்கான், அதுவும் இல்லாம ஆயிறக்கூடாது...அதான்..” உணர்ச்சியோடு அவன் சொல்லி முடிக்கவும் சந்துரு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அவன் உள்ளே நுழைந்ததுமே அமைதியானவர்களை அவன் சந்தேகத்தோடு பார்க்க, மெதுவாக அவனை நெருங்கிய நந்து, அவன் அருகில் சென்று அவன் கையை பிடித்தபடி,அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். வியப்புடன் கண்கள் மின்ன அவளைப் பார்த்தவன், உதட்டில் புன்னகையுடன் ‘என்னாச்சு’ என்பது போல் புருவம் உயர்த்த, ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள், அவனுடன் இன்னும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டாள்.

பொறுக்குமா கவினுக்கு,

“அடடடா..........இவங்க ரொமான்ஸ் தாங்க முடியலையே....இங்க ஒரு பச்ச புள்ள தனிய நிக்கிறப்போ உங்களுக்கு என்ன ரொமான்ஸ் வேண்டி கிடக்கு....” என்றான்.

“உனக்கேன்டா பொறாமை... வேணுன்னா நீயும் உன்னொட “ஜோ.”.டிய வரச்சொல்லி ரொமான்ஸ் பண்ணு...” ஜோவில் அழுத்தம் கொடுத்து சொல்ல,

“இது எப்போலேர்ந்து...??” ஆச்சர்யத்துடன் கேட்டவர்களிடம்,

“அது ரொம்ப நாளா ஓடுது...” பதில் சொன்னாள் அனு,

“ம்க்கும்....யாரு? ஜோ?.....ரொமான்ஸ் பண்ண?......கிழிஞ்சது போ...!!!அவளுக்கு சாப்பிடுறத தவிர   வேறெதயும் அவங்க வீட்ல சொல்லியே கொடுக்.....க......” தந்தியடித்தவன் திருதிருவென்று முழிக்க என்நவென்று பார்த்தால், வாசலில் நின்று ஜெனி இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹி...ஹி...” வழிந்தவனை சட்டை செய்யாமல், கதிரிடம் சென்றவள், அவனிடம் சிறிது தீர்த்தத்தைக் கொடுத்து அருந்தச் செய்தவள், அவன் தலை மேல் கை வைத்து ஏதோ ஜெபித்தாள். பிறகு புன்னகையுடன்,

“வெல்கம் பாக் சார்...” என்றாள். பிறகு சந்தோஷத்துடன் அனுவைக் கட்டிக்கொண்டாள். இந்த செய்கையால் இரண்டு பேரை பெருமூச்சிட செய்தாள்.

“ம்க்கும்..” செறுமிய கவினைத் திரும்பி பார்த்தவளின் பார்வையில் துளி கூட கோபம் இல்லை, கோபத்தின் இட்த்தை ஏக்கம் பிடித்திருந்தது. அவளையே பார்த்தவன் அவள் பார்வையிள் வித்தியாசத்தை உணர்ந்து பழைய குணம் தலைதூக்க,

“ஏ புள்ள.....மாமன கட்டிக்கிறியா...?” என்று இல்லாத மீசையை முறுக்கிக் கேட்க, நங்க் கென்று அவன் தலையில் கொட்டியவள், செய்கைக்கு சம்பந்தமே இல்லாமல் கண்கள் கலங்க,

“ம்...” என்றாள்.

“அடடடடா.....இவங்க ரொமான்ஸ் தாங்க முடியலையே...” கோரசாக பாடியவர்களின் கேலியை கண்டு கொள்ளாமல்,

“ ஐ மிஸ்ட் யு.....ஜேலோ...” சொன்னவனின் குரல் குழைந்தது. பதில் சொல்ல முயன்ற ஜெனியை பதறி நடுங்க வைத்தது,

“என்ன நடக்குது இங்க...?” என்று கர்ஜித்தது அந்த குரல்........ 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 10

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 12

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.